Tuesday, September 18, 2012

காலிகள்


காலிகள்

Tuesday, September 18, 2012 12:03 IST


மூன்று கால்கள் கொண்ட இருக்கையை முக்காலி என்றும் நான்கு கால்கள் கொண்ட இருக்கையை நாற்காலி என்றும் நாம் சொல்கிறோம். அதைப்போல் உயிரினங்களையும் கால்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெயரிட்டு வகைப்படுத்துவது அறிவியல். மிகுதியான எண்ணிக்கையில் கால்கள் கொண்ட பூச்சியை ஆயிரங்கால் பூச்சி என்று சொல்வதுபோல்  பின்வரும்  பெயர்களின் அடிப்படையில்  அவற்றிற்கான விளக்கங்களை நாம் அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாகச் சொல்வாதானால் பதின்காலி என்றால் பத்து கால்களை உடைய உயிரி  இழுநகக்காலி என்றால் இழுத்துக்கொள்கின்ற நகங்களை உடைய கால்களைக் கொண்ட உயிரி எனலாம். இனி இத்தகைய உயிரிகளின் வகைகளைப்பார்ப்போம்.

  1. அறுகாலி - hexapod
  2. ஆட்டுக்காலி - capriped
  3. ஆயிரங்காலி – millepede
  4. இணைப்புக் காலி – arthropod
  5. இருகாலி  - biped  
  6. இழுநகக்காலி - aeluropodous
  7. ஈரிரு காலி (நாற்காலி) – tetrapod
  8. உகைப்புக் காலி copepod
  9. எண்காலி – octopod
  10. ஏழிணைக்காலி – isopod
  11. ஒழுங்கிலி (விரற்) காலி - anomaliped
  12. ஒற்றைக்காலி - uniped
  13. குட்டைக்காலி - breviped
  14. கைபோல் காலி – brachiopod
  15. கோணற்காலி - taliped
  16. சாய்காலி – anglepod
  17. சிறகுக்காலி – pteropod
  18. சுணைக்காலி - chaetopod   
  19. சுருள்காலி  - cirriped
  20. தட்டைக்காலி - branchiopod
  21. தலைபோல்காலி - cephalopod
  22. தழைக்காலி - phyllopod
  23. துடுப்புக்காலி   - pinniped   
  24. நடைகாலி - Pereiopod
  25. நீந்துகாலி - Pleopod
  26. நுண்ணிழைக்காலி-Campodea
  27. நூறுகாலி - Chilopoda / centipede
  28. பதின்காலி – decapod
  29. பல காலி – polypod
  30. பற்பல காலி  – myriapod/ myriopod
  31. பன்முகக்காலி – amphipod
  32. பாம்புவடிவக்காலி  - anguiped
  33. பெருங்காலி - megapod, megapode   
  34. முவ்விரல் காலி – ornithopod
  35. முன்விரல்காலி – aliped
  36. மெத்துக்காலி – tylopod
  37. வயிற்றுக்காலி - gasteropod

No comments:

Post a Comment

Followers

Blog Archive