18 January 2024 அகரமுதல
(சட்டச்சொற்கள் விளக்கம் 111-115 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
சட்டச்சொற்கள் விளக்கம் 116-120
116. Able | வல்லமையுள்ள ஒரு செயலைச் செய்வதற்குரிய அல்லது சிக்கலைத் தீர்ப்பதற்குரிய ஆற்றல் அல்லது திறன் அல்லது போதுமான வளங்களைக் கொண்டிருத்தல். ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய போதுமான வளங்களையும் அதிகாரங்களையும் கொண்டிருத்தல். |
117. Able bodied | வல்லமையர் உடல் திறனாளர் என நேர் பொருளாக இருந்தாலும் உடலாலும் உள்ளத்தாலும் வலிமையானவரையே குறிக்கும். உடல், உள்ள வலிமை என்பது, ஒரு வேலையைச் செய்து அல்லது தொழிலில் ஈடுபட்டு வருவாய் ஈட்டுவது. வாழ்வுப்படி/பிரிந்துறை உதவி என அழைக்கப்பெறும் துணைமைத் தொகையைச் செலுத்தும் திறனையும் குழந்தைக்கு ஆதரவாக இருக்க இயலுவதையும் குறிப்பது. ஒருவர் மக்களிடையே இயல்பாகச் செயல்படுகிறார், உடல் ஊனமோ மன ஊனமோ அவருக்கு இல்லை என்பதையே வல்லமையாளர் / உடல் திறன் உடையவர் என்பது குறிக்கிறது. |
118. ABLPL | மு.பி.வி. முன்பிணை விண்ணப்பம் கைது செய்யப்படுவதை எதிர்நோக்கி அதைனத் தடுக்கும் முகமாக அளிக்கும் அனைத்துப் பிணை விண்ணப்பங்களும் இதில் அடங்கும். இதனால் எதிர்நோக்குப் பிணை விண்ணப்பம் என்றும் அழைப்பர். கைது செய்யப்படுவதற்கு முன்பே பிணைக்கு விண்ணப்பிப்பதால் முன் பிணை விண்ணப்பம் எனப்படுகிறது. |
119. Ablush | நாணமுறல் எ.கா.புகழ்ச்சியுரைகள் அவரை நாணமுறச் செய்தன. |
120. Ably | திறம்பட செயலாற்றல் கொண்டு திறம்படச் செய்தல். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment