(சட்டச் சொற்கள் விளக்கம் 191-195: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 196 – 200
196. Absention from intoxicants | (குடி) விட்டொழிப்பவர் குடிப்பழக்கத்தைக் கைவிடுதல் என்பது மதுபானங்களையும் போதைப்பொருள்களையும் முற்றிலும் தவிர்ப்பதற்கான நடைமுறையாகும். மது பானங்களை அளிக்கும் பொழுது போதையில்லா நல்ல குடிவகைகளை அருந்தலாம். மதி மயக்கம் தருகின்ற, வெறிஊட்டுகின்ற போதைப் பொருள்களை விலக்குதல் என்பது சமயம், நல் வாழ்வு, உடல் நலம், மெய்யியல்,குமுகம் போன்ற எதன் கரணமாகவேனும் இருக்கலாம். காண்க: Abstaine |
197. Absoluta Sententia Expositore Non-Indeget | வெளிப்படை மொழிக்கு விளக்குரை வேண்டா வெளிப்படையாகவும் தெளிவாகவும் உள்ள வரிக்கு/கருத்திற்கு விளக்கவுரை தேவையில்லை. வெளிப்படையாகப் புரிந்து கொள்ளக்கூடிய தீர்ப்புரைகளுக்குத் தனியே விளக்கம் தேவையில்லை. இலத்தீன் தொடர். பல நீதிமன்றத்தீர்ப்புகளில் இத் தொடர் மேற்கோளாகக் குறிக்கப்பட்டுள்ளது. |
198. Absolute | முழுமையான பூரண;முழு; இறுதி; நிபந்தனையற்ற; அறுதி வரம்பற்ற வரையிலா தனித்த, நிறைவான, முற்று, முற்றுறுதியான எந்த நிபந்தனைகளும் வில்லங்கங்கமும் தகுதியும் வரம்பும் இன்றி. திருத்தத்திற்கு உட்படாத முழுமையான. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் எந்தவகைக்கட்டுப்பாடோ தடைக்கட்டோ இல்லாதிருத்தல். வரம்பீடோ, வரைக்கட்டோ எதுவுமின்றி முழுமையான; மாற்றுகைக்கோ முடிவு கட்டுவதற்கோ உட்பட்டிராத, அறுதிமுடிவான. விற்பனை முற்றுறுதியானது (பி.58, (இ)சொ.மா.ச.) |
199. absolute assignment | முழுமையான தீர்ப்பாணை முழுமைச் சொத்தாவணம் முழுமையான உளத்தேர்வு உடனிணைந்த உரிமைகளற்ற கடமைகள் முழுமையான கொடு பணி முழுவுரிமைச் சொத்து முழுமை நலன் முழுமைச் சட்டம் கடும்பொறுப்பு முழுப்பொறுப்பு தனிப்பெரும்பான்மை முழு உரிமையாளர் முழு அதிகாரம் வரையிலாச் சிறப்புரிமை முழுஉரிமைச் சொத்து முழுப் பொறுப்புரிமை, முழுப் பொறுப்புநிலை முழுமையான தடை மாற்றாக்கத்தின் பேரில் முழுத் தடை முழு உரிமை முழுமையான உரிமைமூலம் ஒதுக்கீட்டாளரால் அல்லது உரிமையாளரால் ஒதுக்கீடு பெற்றவர் அல்லது மாற்றுரிமையர், வேறு ஒருவருக்கு மாற்ற இயலாத பரிமாற்றமாகும். ஆய்வுத்திட்டம், செயல் திட்டம் போன்ற ஒன்றை ஒப்படைக்கும் பொழுது அதனைக் கொடுபணி எனல் சரியாகும். |
200. Absolute authority | முழுமை அதிகாரம் எவ்வகைக் கட்டுப்பாடும் இன்றி அதிகாரத்தைச் செயல்படுத்தும் முழுமையான அதிகார நிலை. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment