Thursday, January 29, 2015

கருவிகள் 1600 : 601-640 : இலக்குவனார் திருவள்ளுவன்


கருவிகள் 1600 : 601-640 : இலக்குவனார் திருவள்ளுவன்


601. கிண்ண உலவை மானி-cup anemometer
602. கிண்ண மின்மானி-cup electrometer
603. கிண்ணக் காற்றழுத்தமானி-cup barometer
604. கிண்ணச் சங்கிலி உலவை மானி-bridled-cup anemometer
605. கிண்ணி வெப்பமானி-cup-case thermometer
606. கிணறுவகை நீர்ம-வளிய அழுத்தமானி-well-type manometer
607. கீற்றணி நிறமாலைமானி-grating spectrometer
608. கீற்றொளி உயிரி நுண்ணோக்கி-slit lamp biomicroscope
609. கீற்றொளி நுண்ணோக்கி-slit lamp microscope :கருவிழிப்படலப் பின்பரப்பை ஆய்வதற்குரிய இணைப்புடைய நுண்ணோக்கி.
610. குண்டு நீரடர்மானி-balling hydrometer
611. குண்டு மிதவை நீர்ம மட்டமானி-ball-float liquid-level meter
612. குத்துநிலை உலவை மானி-vertical anemometer
613. குத்துயரமானி-hypsometer / hypometer     இட உயரமானி; மேட்டுப்பகுதிகளின் உயரமளிக்கும் கருவி. காற்றழுத்தமானி ( மூ 321); காற்றழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி. நீர்மத்தின் கொதிநிலையை உறுதி செய்வதன் மூலம் உயரங்களை மதிப்பிடலாம். நீராவி வெப்ப நிலையில் வெப்பநிலைமானிகளில் அளவீடுகள் குறிக்கவும் பயன்படும்.
  1. கொதிநிலைமானி
  2. இடஉயரஅளவி
  3. கொதிநிலை அளவி
  4. மரஉயர அளவி
  5. இட உயரமானி
எனப் பலவகையாகக் குறிப்பிடுகின்றனர்.
கொதிநிலை அல்லது காற்றழுத்தம் மூலம் அறிவது உயரத்தைத்தான். எனவே, பொதுவாகக் குத்துயரமானி எனலாம்.
614. குப்பி வெப்பமானி-bottle thermometer
615. குரல்வளை நோக்கி- laryngoscope : குரல்வளையை நோக்கி ஆராயும் கருவி.மிடற்றூடு நோக்கி என்றும் சொல்லப்படுகின்றது. குரல்வளை அகநோக்கி என்பதன் சுருக்கமாகக் குரல்வளை நோக்கி எனலாம்.
616. குரலொலி மானி-phthongometer :குரலொலிகளை அளவிடும் கருவி.
617. குருணைமானி- bailey meter: குழாய் அல்லது நீர்த்தாரை மூலம் வெளியேறும் குருணைப் பொருளின்(granular material) மொத்த எடையைப் பதியும் பாய்மமானி. குருணைமானி எனலாம். (பெய்லி ஓட்டவளவி(.இ.) என்பது சீர்மைச் சொல்லாக அமையாது.)
618. குருதி நிறமி மானி- haemoglobinometer
619. குருதிக்குழல் நோக்கி-angioscope
620. குவிமுகில் நோக்கி-stratoscope:தரையிலிருந்து தொலைவியக்கம் மூலம் கையாளப்படும், குவிமுகில் மண்டிலத்திலுள்ள காலூதி (balloon)யில் இயங்கும் தொலை நோக்கி. குவி முகில் மண்டிலத்தில் இயங்குவதால் குவிமுகில் நோக்கி எனலாம்.
621. குவியமானி- focimeter / focometer lensmeter or lensometer  :ஒளி அளவாடியின் குவியத் தொலைவை அளவிடும் கருவி. குவிய நீளஅளவி ( -இ) என்பதைவிடக் குவியமானி ( -ஐ) என்பதே சரியாகும்.
622. குழல் மின்வலி மானி -tube voltmeter
623. குழாய் வளைவு நீரோட்டமானி  – pipe elbow meter
624. குழைமமானி-plastometer
625. குளிர்-குழாய் தழல்மானி  – cooled-tube pyrometer
626. குளிர்விப்புத்திறன் உலவை மானி  – cooling-power anemometer
627. குளிர்விப்புமானி – coolometer : காற்றின் குளிர்விப்புத்திறனை அளவிடும் கருவி.
628. குறிகாட்டி வெப்பமானி  – index thermometer
629.  குறிகை வலிமைமானி  – signal-strength meter
630. குறிப்பி – indicator ;
  1.  காட்டடி,
  2. காட்டி, காட்டொளி,
  3. குறிகாட்டி,
  4. குறிப்பான் ,
  5. குறியீடு,
  6. சுட்டி,
  7. சுட்டிக் காட்டுக் கருவி;
  8. சுட்டிக் காட்டும் கருவி,
  9. சுட்டிக்காட்டி,
  10. சுட்டுகைக்கருவி,
  11. சுட்டுணர்வி ,
  12. செயல்வினை காட்டி,
  13. நிலைகாட்டி,
  14. புலப்படுத்தி
  15. மானி,
எனப் பலவகையாகக் குறிப்பிடுகின்றனர். மானி என்பது இதற்குப் பொருந்தாது. சுட்டி , காட்டி ஆகியன வேறு வகையாகப் பயன்படுத்தப்படுவதால்,   இங்கே தவிர்க்க வேண்டும். குறிப்பான் பொதுவாக இரண்டு இடத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதனையே ஏற்றுச் சுருக்கமாகக் குறிப்பி எனலாம்.
631. குறிப்பிஅளவி  – indicator gauge/indicated gauge
632. குறிப்பேற்றமானி – modulation meter
633. குறிமுள் சுற்றுமானி – pointer tachometer
634. குறியீட்டளவி- marking gauge / scratch gauge
635. குறு நீள்மைமானி  – huggenberger tensometer :  1200 மடங்கு உருப் பெருக்கிக் காட்டும் கலவை நெம்புகோல் முறையில் பயன்படுத்தப்படும் ஒருவகை நீட்சிமானி. குறு நீள்மைமானி எனலாம்.
636. குறு மின்வலிமானி – millivoltmeter
637. குறுக்கீட்டு உறழ்மானி – michelson interferometer
638. குறுக்கீட்டு நுண்ணோக்கி – interference microscope
639. குறுக்கு வெப்பமானி  – transverse thermometer
640. குறுக்குக் குறிமுள்மானி – crossed-needle meter
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png

- இலக்குவனார் திருவள்ளுவன்



Wednesday, January 28, 2015

கருவிகள் 1600 : 561-600 : இலக்குவனார் திருவள்ளுவன்


கருவிகள் 1600 : 561-600 : இலக்குவனார் திருவள்ளுவன்

  1. காந்த நிறமாலைமானி-magnetic spectrometer
  2. காந்த வரைவி-maneto-graph : காந்தத் தாக்குதல்களின் மாறுதல்களைப் பதிவு செய்வதற்கான கருவி.
  3. காந்த வெப்பமானி- magnetic thermometer
564. காந்தச்செறிவுமானி- coercimeter :    இயற்கைக் காந்தம் அல்லது மின்காந்தத்தின் காந்தச் செறிவை அளவிட உதவும் கருவி.
  1. காந்தத் திசை காட்டி- magnetic compass
  2. காந்தத் திறன்மானி- magnetic potentiometer
  3. காந்தத் தூண்டல் சுழல் நோக்கி- magnetic induction gyroscope
  4. காந்தப் பாயமானி-flux meter
569. காந்தப்பின்னடைவுமானி-hysteresimeter:   காந்த ஆற்றலுக்குக் காந்தத்தின் தூண்டுதல் இயக்கம் பிற்படும்நிலையை அளவிடும் கருவி. (காந்தத்தயக்கமானி (-இ.) எனச் சொல்வதைவிட) காந்தப்பின்னடைவுமானி எனலாம்.
  1. காந்தப்புல வலிமை மானி-hall-effect gaussmeter:காந்தப்புலத்தின் வலிமையை, எட்வின் ஆல் என்ற அமெரிக்க இயற்பியலாளரால் (1879 இல்) கண்டுபிடிக்கப்பட்ட விளைவின் அடிப்படையில் அளவிடும் கருவி.
  2. காந்தமானி-magnetometer : காந்தத் தாக்குதல்களின் மாறுதல்களைப் பதிவு செய்வதற்கான கருவி. காந்தமானி என்றும் காந்த ஆற்றல்மானி என்றும் குறிப்பிடப்படுகின்றது. சுருக்கமாகக் காந்தமானி என்றே சொல்லலாம்.
  3. காந்தவிசைமானி – permeameter :காந்தவிசைமானி: ஒரு பொருளின் வழியாகச் செல்லும் காந்த விசைக்கோடுகளின் எண்ணிக்கையையும் காந்தமூட்டும் விசையினையும் அளிவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி. (-ம. 476) உட்புகவிடன் மானி, உட்புகுதகவுமானி, புரைவு அளவி,எனவும்(-ஐ.) பொசிமையளவி, பொசிவளவி எனவும் (-இ.) கூறப்படுவனவும் பொருளடிப்படையில் சரிதான். எனினும் ஒரே சொல்லே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால், காந்தவிசைமானி எனலாம்.
  4. காந்தவேகமானி- magnetic speedometer
  5. காப்பு வெப்பமானி- protected thermometer
  6. காரமானி-Alkalimeter:காரச்செறிவை அளக்கப் பயன்படும் கருவி.(-மூ.20)
  7. கால்வட்ட மின்மானி-quadrant electrometer
  8. கால இடைவெளி மானி-time-interval meter
  9. கால வெப்பமானி-chrono thermometer:வெப்பநிலை மாற்ற விளைவுகளைக்கணக்கிட்டுச் சராசரி வெப்பநிலையைக் காட்டும் மணிப்பொறி.
  10. காலக்கூறுநோக்கி- chronoscope: மிகச்சிறு காலக்கூறுகளைக் கணிப்பதற்கு நோக்க உதவும் கருவி. காலநுண்ணளவி (-இ.)என்றால் நுண்மை அளவியைக்குறிக்கும். எனவே பொருந்தாது. காலத்துளிமானி (-ஐ-) என்று குறிப்பதைவிட க் காலக்கூறுபாட்டை நோக்கும் கருவியைக் காலக்கூறு நோக்கி என்பதே பொருத்தமாக அமையும்.
          (2.) உந்துவிசை நோக்கி.
  1. காலநிலைமானி-weatherometer
581. காலநோக்கி –chronoscope :             காலத்தின் நுட்பமான பகுதியையும் துல்லியமாக ஆராய்ந்து அறிய நோக்க உதவும் கருவி. காலநோக்கி எனலாம்.
  1. காலமானி-chronometer :திட்பக்காலக் கணிப்பளவுக் கருவி(செ.)மின்னணு கடிகாரம், மாலுமி காலமானி, கடிகாரம், காலமாணி, கடிகை, நுட்பக்காலக் கணிப்பளவுக் கருவி. நுண்காலக்கணிப்பான் (-ம.159), திட்பக்காலக் கணிப்பளவுக் கருவி(செ.)மின்னணு கடிகாரம், மாலுமி காலமானி, கடிகாரம், காலமாணி, கடிகை எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. எளிமையாகக் காலமானி என்றே சொல்லலாம்.
  2.  காலமுறை மின்கடவுமானி-periodic galvanometer
  3. காற்றடர்நோக்கி-baroscope: காற்றடர்த்தி மாற்றங்களைக் காட்டும் கருவி. அடர்த்தி காட்டி எனக் குறிப்பிடுகின்றனர். அடர்த்தி என்பது பொதுவான சொல்லாக உள்ளமையால் காற்றடர்நோக்கி என்று தெளிவாகச் சொல்லலாம்.
  4.  காற்றரண் கதிரியக்கமானி-farmer dosimeter
  5. காற்றழுத்தமானி- barometer வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி. (-செ.); அழுத்தமானி என்றும் குறிப்பிடுகின்றனர். அழுத்தம் என்பது பொதுவான சொல்லாக உள்ளமையால் வளிமண்டிலத்திலுள்ள காற்றழுத்தத்தைக் காணும் கருவி என்பதைக் குறிப்பிடும் வகையில், காற்றழுத்தமானி என்று தெளிவாகச் சொல்லலாம்.
  6. காற்றளவி-air gauge
  7. காற்றாலை உலவை மானி-windmill anemometer
  8. காற்றியக்க உலவை மானி-eolain anemometer
  9. காற்றியக்கக் கருவிகள்-pneumatic tools:காற்றழுத்தக் கருவிகள் : காற்றழுத்தத்தின் மூலம் இயக்கப்படும் கருவிகள். (-ம.491). (காற்றழுத்தக் கருவிகளின் பொதுச் சொல்)
  10. காற்று நோக்கி-anemoscope:காற்றின் போக்க‌ை அல்லது காற்றுத்திசையின் மாற்றத்தை அல்லது வானிலை மாற்றத்தை ஆராய உதவும் கருவி.
  11. காற்று- வெப்பமானி- air-thermometer: இதள் (பாதரதசம்) பயன்படுத்தப்படாமல் காற்று பயன்படுத்தப்படும் வெப்பமானி.
593. காற்றுச்சாய்மானி-anemoclinometer;காற்றுச் சாய்வளவி (-ஐ.),காற்றுத் திசைஅளவி (-இ.) என்பனவற்றைவிடக் காற்றுச்சாய்மானி என்பது சீர்சொல்லாக அமையும்.
  1. காற்றுத்தடை வெப்பமானி -air resistance thermometer
  2. காற்றுத்தூசு நோக்கி-koniscope
596. காற்றுத்தூய்ம மானி-eudiometer : பருமமாற்ற அளவி(பொறி.நு.), வளிம அளவி(இய.),காற்றுத் தூய்மமானி, வாயுமானி எனக் கூறுகின்றனர். காற்றுத் தூய்மையை அளப்பதற்குரிய கருவி என்பதால் காற்றுத்தூய்ம மானி என்றே சொல்லலாம்.
  1. காற்றுமானி- airometer/ airmeter: காற்றுவீச்சின் விகிதத்தை அளவிடுவதற்கான கருவி.(-ம.27); காற்றின் அல்லது வளிகளின் எடையை அல்லது செறிவை அளவிடும் கருவி(-செ.).
  2. கிடைக் காந்தமானி- horizontal magnetometer
599. கிடைக்கோணத் தொலைநோக்கி-altazimuth telescope; கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் சுழக்கூடிய தொலை நோக்கி. கிடைக்குத்துக்கோணத் தொலைநோக்கி > கிடைக்கோணத் தொலைநோக்கி
600. கிடைச் செறிவு மாறல்மானி- horizontal intensity variometer
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png

- இலக்குவனார் திருவள்ளுவன்


கருவிகள் 1600 : 521-560 : இலக்குவனார் திருவள்ளுவன்

கருவிகள் 1600 : 521-560 : இலக்குவனார் திருவள்ளுவன்

521. கப்பற்பயணவரைவி – loxodograph : கப்பல்பயணத்தைப்பதிய உதவும் கருவி.
522. கம்பளித்தரமானி – lanameter : கம்பளியின் தரத்தை அளவிடும் கருவி.
523. கம்பிவலைத் திருத்தி மானி -grid-rectification meter
524. கம்பிவலை நிறமாலைமானி – grid spectrometer
525. கம்பிவலை மின்னோட்ட மானி/ கம்பிவலை அலையியற்றி-grid-dip meter/ grid-dip oscillator : கம்பிவலை மின்னோட்டத்தை அறியக் கம்பிவலையில் ஒருங்கிணைந்த – பன்முகவீச்சு மின்னணுக் குழாய் அலையியற்றிக் – கருவி.
526. கயக்கமானி – taseometer : கட்டமைப்பின் கயக்கத்தை (stress in a structure) அளவிடும் கருவி.
527. கரடுமுரடு மானி-profilometer  தரை கரடுமுரடு மானி > கரடுமுரடு மானி
528. கரிமத் தடைய வெப்பமானி-carbon resistance thermometer
529. கரிமமானி-carbometer :எஃகில் உள்ள கரிமத்தை அளவிடும் கருவி.
530. கரிமவளிமானி-anthracometer
531. கரு நோக்கி-foetoscope:கருவுற்ற மகளிரின் வயிற்றின் மேல் வைத்துக் கருவின் இதயத்துடிப்பைக் கேடடு ஆய்வதற்கான கருவி. சிசு இதயமானி என்றுசொல்வதைவிடச் சுருக்கமாகக் கருவின் நெஞ்சத்துடிப்பை நோக்க உதவும் கருவி என்பதால் கரு நோக்கி எனலாம்.
532. கருங்குமிழ் வெப்பமானி-black-bulb thermometer
533. கருத்தலைமானி-labidometer   கருக்குழவியின் தலையை அளப்பதற்குரிய கருவி.
534. கருப்புரதமானி- albuminometer/ albuminimeter
535. கருப்பையூடுநோக்கி, கருப்பை உள்நோக்கி-hysteroscope/ uteroscope/ metroscope:கருப்பையின் உள்பகுதியை ஆராய நோக்கும் கருவி.
536. கருவாய் நோக்கி -colposcope :கருப்பையின் வாயிலை நோக்கி ஆராய உதவும் கருவி. அல்குல் ஊடுநோக்கி(-இ.) என்பது தவறாகும். பலர் கருதுவதுபோல் அல்குல் என்பது பிறப்பு உறுப்பல்ல. யோனி நோக்கி என்று சொல்வதும் நன்முறையாக இல்லை. கருவாய் நோக்கி என்றால் நேர்த்தியாக இருக்கும்.
537. கருவிழி நுண்ணோக்கி -corneal microscope :கருவிழியிலும் விழிப்படலத்திலும் உள்ள நுண்ணிய மாற்றங்களை அறிவதற்காக உயர் பெருக்குத்திறன் கொண்ட அளவாடி(lens) உடைய கருவிழி நுண்ணோக்கி .
538. கரைசல் கலங்கல் மானி-paar turbidimeter:கரைசல் கலங்கலை ( solution turbidity)அளவிடுவதற்கு உதவுவது.
539. கல்ம இழையளவி-quartz fibre gauge
540. கல்ம இழை கதிரியக்கமானி-quartz-fiber dosimeter
541. கல்ம இழை மின்னோக்கி-quartz-fiber electroscope
543. கல்ம கிடைமட்ட காந்தமானி-quartz horizontal magnetometer
543. கல்ம மின்னோக்கி-lauritsen electroscope:சார்லசு இலௌரிட்சன், தாமசு இலௌரிட்சன் ஆகியோர் பெயரில் அழைக்கப்படுகிறது. கரடுமுரடானதும் கூருணர்வு உடையதுமான மின்னோக்கி. கல்ம இழை கூருணர்விற்குப் பயன்படுகிறது. கல்ம மின்னோக்கி எனலாம்.
544. கல்ம வெப்பமானி-quartz thermometer
545. கலங்கல்மானி-turbidimeter :நீர்மம் கலங்கியிருப்பதை அளவிடும் கருவி. எனவே, கலங்கல்மானி எனலாம்.
546. கவர்-வட்டு மின் மானி-attracted-disk electrometer
547. கழியளவி-staff gauge:நீ்ர் மட்ட அளவி. எனினும் சொற்பொருத்தம் கருதி, கழி மூலம் அளக்கப்படுவதால் கழிஅளவி எனலாம்
548. களைவளவி-johanson gauge  இயோகன்சன் (johanson) என்னும் அறிவியலாளர் பெயரில் அழைக்கப்பெறுகிறது.
549. கற்றைப்பெருக்க உறழ்மானி-lummer-gehrcke interferometer: பல் பெருக்க ஒளிக்கற்றை உறழ்மானி(multiple-beam interferometer). சுருக்கமாகக் கற்றைப்பெருக்க உறழ்மானி எனலாம்.
550.  கா/கா மானி.-pH meter:ஊடகத்தின் காரத்தன்மையையோ காடித்தன்மையையோ காட்டுவதே பிஎச்/ pH எனப்படும். இதன் அளவு ஏழுக்குக் கீழிருந்தால் காடித்தன்மை; ஏழுக்கு மேலிருந்தால் காரத்தன்மை. காடி, காரம் ஆகியவற்றைக் குறிக்கும் அலகு என்பதால் கா/கா எனலாம். இதனைக் கண்டறியும் கருவி கா/கா மானி.
551. காசுசெலுத்திப்பொறி-slot machine:துளைவிளிம்பு பொறி : துளைவிளிம்பில் காசுபோடுவதனால் இயங்கும் இயந்திரம். (-ம.568); இயந்திரத்தில் நாணயம் விழுவதற்குரிய வடிவளவுத்துளை, தொடக்கத்தில் விளிம்பில் இருந்தாலும் இப்பொழுது பிற பகுதியிலும் உள்ளது. எனவே, காசுசெலுத்திப்பொறி எனலாம்.
552. காசுசெலுத்திமானி-slot-meter:காசுவீழ்வு அலகுமானி : காசுவீழ்வதனால் அலகு குறித்துக் காட்டும் கருவி. (-ம.568);காசு செலுத்துவதன் மூலம் உரிய அளவினைக் காட்டும் கருவி; ஆதலின் காசுசெலுத்திமானி எனலாம்.
553. காட்சி ஒளிமானி- Bunsen photometer:  ஆய்வுத்தட்டின் இருபுறமும் ஏதுவாக அமையும் வகையில் எளிய கண்ணாடி அமைப்பு உள்ள காட்சி ஒளிமானி. இராபர்ட்டு வில்ஃகெம் பன்சென் ( Robert Wilhelm   Bunsen :1811-1899) என்னும் செருமானிய வேதியலாளர் பெயரில் பன்சென் ஒளிமானி என அழைக்கப்பெறுகிறது. காட்சி ஒளிமானி எனலாம்.
554.  காட்சிப்பரப்புமானி- transmissometer-வளிமண்டிலத்தின் குணக அணைவு(extinction coefficient) -ஐ அளவிடும் , காட்சிப்பரப்பை வரையறுக்கும் ஒளியியக் கருவி. காட்சி நெடுக்கஅளவி(-இ.), காட்சித் தொலைவளவி(-இ.) என்பனவற்றைவிடக் காட்சிப்பரப்புமானி எனச் சொல்வது சீர்மை முறையில் பொருத்தமாக இருக்கும்.
555. காட்பி /காட்சிப்பொறி-projector: எறிகருவி, ஒளி எறிவு படக் காட்டமைவு, படமெறிகருவி, ஒளி எறிவுக் கருவி, எனச்சொல்லப்படுவன, கருவியில் இருந்து ஒளிக்கற்றை வீசப்படுவதை அவ்வாறே எறிவு பொருள் எனக் கொண்டு நேரடியாக மொழிபெயர்த்தனவாக உள்ளன. சினிமாப்படக்காட்சி இயந்திரம் (சினிமா தமிழ்ச் சொல்லல்ல), படம்காட்டும் கருவி, திரைப்படக்கருவி, படம் காட்டும் இயந்திரம , ஒளிப்படக்காட்டி, படங்காட்டி என்று சொல்லப்படுவன பொதுவான பெயர்களாக அமைகின்றன. திரைப்பட வீழ்த்தி, பட வீழ்த்தி என்பனவும் ஏற்றனவாக இல்லை. இக்கருவி மூலம் ஒளிவருவதன் நோக்கம், இருளைப் போக்குவது அல்ல.பட உரு அல்லது எழுத்துருவைப் பெரிதாக்கித் திரையில் அல்லது மதிலில் அல்லது இதுபோன்ற தளத்தில் வீழச்செய்து காட்டுவதுதான். எனவே, பயன் அடிப்படையில் காட்சிப்பொறி எனப் பெயரிடுவதே பொருத்தமாக இருக்கும். காண்பிக்கும் காட்சிப் பொறியைக் காட்பி எனச் சுருக்கமாகக் கூறலாம்
556. காட்பு நுண்ணோக்கி-projection microscope
557. காட்பு வெப்பநிலை வரைவி-projection thermograph
558. காடிமானி-acidimeter/ acidometer : காடிமானி : காடிப் பொருள்களின் ஆற்றலை அளக்கும் கருவி. சேமக்கலத்திலுள்ள மின்பகுளியின் ஒப்படர்த்தி காணும் நீர்மானி(-மூ8)
559. காணாத் திரண்மை நிறமாலைமானி – missing mass spectrometer
560. காந்த உலவை மானி -magneto anemometer

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png- இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive