Showing posts with label instruments. Show all posts
Showing posts with label instruments. Show all posts

Friday, February 6, 2015

கருவிகள் 1600 : 961-1000 : இலக்குவனார் திருவள்ளுவன்


கருவிகள் 1600 : 961-1000 : இலக்குவனார் திருவள்ளுவன்

961.  நிலைத்தடை நேர்மின் திறன்மானி constant-resistance dc potentiometer  
962. நிலைநீர்மப் பாகுமைமானி stokes viscometer செங்குத்துக் கண்ணாடிக்குழாயில் நீர்மம் நிலையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டது. கேபிரியேல் இசுடோக்கு ( Sir George Gabriel Stoke :13.08.1819 – 01.02.1903) என்னும் அயர்லாந்து நாட்டைச் சார்ந்த கணக்கியல் இயற்பியலாளர் பெயரில் வழங்கப்படுகிறது. நிலைநீர்மப் பாகுமைமானி எனலாம்.
963. நிலைநீரியல்அளவி hydrostatic gauge  
964. நிலைப்பிலா ஈர்ப்புமானி astatized gravimeter  
965. நிலைமின் சுழல் நோக்கி electrostatic gyroscope  
966. நிலைமின் திறனமானி electrostatic wattmeter  
967. நிலைமின் மின்வலி மானி electrostatic voltmeter  
968. நிலையக நோக்கி statoscope  
969. நிலையிலி ஈர்ப்புமானி astatic gravimeter  
970. நிலையிலி காந்தமானி astatic magnetometer  
971. நிலையிலி திறனமானி astatic wattmeter காந்தப் பாதிப்பிலாதது
972. நிலையிலி மின்கடவுமானி astatic galvanometer  
973. நிழல் ஒளிமானி shadow photometer  
974. நிற ஒளிமானி   colour photometer  
975. நிற ஒளிநோக்கி chromascope  
976. நிற கலப்புக்கருவி chromatoscope  
977. நிற நோக்கி chromoscope வேறுவேறு நிற வடிவங்களை இணைத்து நோக்குவதற்குரிய கருவி. பொறியியல்   தொழில் நுட்பத்துறையில்   நிறச்செறிவு பகுப்பாய்வி என்றும் இயற்பியலில் நிறங்காட்டி என்றும் குறிக்கின்றனர். சுருக்கமாகவும் பிற ஒத்த   கலைச்சொற்கள் அடிப்படையிலும் நிறநோக்கி எனலாம்.
978. நிற விளக்க நுண்ணோக்கி color-translating microscope  
979. நிறஒப்புமானி Tintometer நிறக்கலவைமானி , நிறஏற்றமானி,வண்ணச் சாயல்மானி , மென்னிறச்சாயல் அளவைக் கருவி எனப் பலவாறாகக் கூறப்படுகின்றது. நேர் மொழிபெயர்ப்பாக இவை அமைகின்றன. நிறம் தரும் பொருளின் தன்மையை ஆராயவும் ஒப்பிடவும் உதவும் கருவி. எனவே, நிறஒப்புமானி எனலாம்.
980. நிறம்மாறு கதிரியமானி chromoradiometer  
981. நிறமாலை ஈரமானி spectral hygrometer  
982. நிறமாலை உடனொளிர் மானி spectro fluorometer  
983. நிறமாலை ஒளிமானி spectra photometer/ spectro photometer  
984.  நிறமாலை ஒளிர்வு ஒளிமானி spectra pritchard photometer ஒளிர்வுப் பரப்பை அளவிடும் ஒளிமின் கருவி. நிறமாலை ஒளிர்வு ஒளிமானி.
985. நிறமாலை முனைவுமானி spectro polarimeter  
986. நிறமாலை வெங்கதிர்மானி spectrobolometer கதிரியக்க அலைநீளத்தை வரையறுப்பதற்கான, அலைமாலை நோக்கியும்   வெங்கதிர்மானியும் இணைந்த கருவி.
987. நிறமாலை வெயில்மானி spectro pyrheliometer  
988. நிறமாலைநோக்கி spectroscope  
989. நிறமாலைமானி spectrometer அலைமாலை அளவி(-இ.), கதிர்நிரல் அளவி(-இ.), நிறமாலைமானி(-ஐ.), திருசிய மானி(-ஐ.),             நிறமாலை அளவி(-ஐ.), வண்ண அளவுமானி(-ஐ.), வண்ணப்பட்டைமானி(-செ.) , நிறமாலைக்கருவி என ஒவ்வொருவகையாகக் குறிப்பிடுகின்றனர். நிறமாலை ஒளிஅலை நீளத்தை அளவிடும் கருவி.
990. நிறமானி chromatoptometer கண்கள் நிறங்களை உணரும் திறனை அளவிடும் கருவி.
991. நிறமிலித் தொலைநோக்கி achromatic telescope  
992. நிறவரைவி chromatograph  
993.  நிறைநீராவி வெம்மிமானி Joly steam calorimeter இயோவான் இயோலி( John Joly :1857–1933)   என்னும் அறிவியலாளர் பெயரில் அழைக்கப்படும் இக்கருவியைப் பணி அடிப்படையில், நிறைநீராவி வெம்மிமானி எனலாம்.
994.  நீட்சி மானி tensometer  
995. நீர் ஊடுருவுமானி infiltrometer  
996. நீர் வெம்மிமானி water calorimeter நீரின் வெப்பநிலை உயர்ச்சியில் வானலை நிகழ்வெண் திறன் கணக்கிடுவது.
997. நீர்ப்பயன்மானி water-meter குடியிருப்பு மனைகள், வணிகக்கட்டடங்கள் முதலானவற்றிற்குக் குழாய் மூலம் வரும் நீரின் பயனளவைக் கணக்கிடும் கருவி. நீர்மானி என்றால் ஐடிரோமீட்டர் / hydrometer எனத் தவறாக எண்ணலாம். வடிகால் நீரளவி(-செ.) என்றால் சாக்கடைநீர் / drainage எனத் தவறாகக் கருதலாம். எனவே, நீர்ப்பயன்மானி எனலாம்.
998. நீர்-பாய்வு வெயில் மானி water-flow pyrheliometer  
999. நீர்ம அடர்த்திமானி arcometer அதன் திரண்மத்திலும் பருமத்திலும் (mass and volume) ஏற்படும் இழப்பை அளவிடுவதன் மூலம் நீர்மத்தின் அடர்த்தியைக் கணக்கிட உதவுவது.
1000. நீர்ம அடைப்பு மானி liquid-sealed meter  
- இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png





கருவிகள் 1600 : 921-960 : இலக்குவனார் திருவள்ளுவன்


கருவிகள் 1600 : 921-960 : இலக்குவனார் திருவள்ளுவன்

921. தொலைவுமானி tachymeter   / tacheometer/ trochometer நில அளவையில் பயன்படும்                  தொலைவை விரைவாக வரையறுக்கும்      அளவி. உடல் அசைவு வேகமானி,                பொருள் அசைவு வேகமானி, நில அளவாய்வாரின் விரை இடக் குறிப்பெடுப்புக் கருவி, ஊர்திச் செலவுத் தொலைமானி(-செ.), ஊர்தித்தொலைவுமானி(-இ.) எனப் பலவகையாகக் குறிக்கின்றனர். தொலைவுமானி என்றால் சுருக்கமாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.
922. தொலைவெப்பநிலைநோக்கி telethermoscope  
923. தொலைவெப்பமானி telethermometer  
924. நகர்-சுருள் மின்கடவுமானி moving-coil galvanometer  
925. நகர்த்து நுண்ணோக்கி , traveling microscope நீளத்தைத்   துல்லியமாக வரையறுப்பதற்காகக் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் நகர்த்தும்வகையில் தண்டவாளம் உடைய குறைந்த ஆற்றல் நுண்ணோக்கி.
926. நகர்தள எடைமானி poidometer  
927. நகர்வு மானி drift meter  
928. நடுக்க வரைவி seismograph நிலநடுக்க அதிர்வுகளைப்பதிவு செய்யும் கருவி. நிலஅதிர்ச்சி காட்டி,
நிலநடுக்கக் கருவி,
நில அதிர்ச்சி குறி கருவி,
நிலநடுக்கப்பதிவு கருவி,
புவியதிர்ச்சிபதிகருவி,
பூமிநடுக்கம் பதிகருவி, எனக் குறிக்கப்பெறுவன பொதுவான பெயர்களாக அமைகின்றன.

நில அதிர்ச்சி வரைபடம
என்பது இக்கருவி மூலம் உருவாக்கும் படத்தைக் குறிக்கின்றது.
நிலநடுக்கப் பதிவி, நிலநடுக்க வரைவி, பூகம்பவரைவி, என்பன அடிப்படையில் சுருக்கமாக நடுக்க வரைவி வரைவி எனலாம். அதிர்வு வரைவி என மற்றோர் கருவி(vibrograph) உள்ளதால்,   வேறுபடுத்தும் நோக்கில் நடுக்க வரைவி என்பதே பொருத்தமாக அமையும்.
929. நடுவரை தொலைநோக்கி equatorial telescope  
930. நடை எண்மானி   passometer பெடோ மீட்டர் / pedometer, பாசோமீட்டர்/passometer ஆகிய இரண்டையும் நடைத்தொலைவளவி (-இ.) எனக் குறிப்பது பொருந்தாது.முன்னது நடந்து செல்லும் தொலைவைக் குறிப்பது. பின்னது கடந்து செல்லும் எண்ணிக்கையைக் குறிப்பது. எனவே, முறையே   நடைத்தொலைவுமானி, நடைஎண்மானி எனலே பொருந்தும்.
931. நடைத்தொலைவுமானி pedometer  
932. நலிகுறிகைக் கதிரியமானி Dicke radiometer இரைச்சலில் நலிந்த குறிகைகளைக் (signals) கண்டறிய உதவுவது. இராபர்ட்டு தீக்கே (Robert Dicke) என்னும் அறிவியலாளர் கண்டறிந்த விசைப்பி முறையைப்பயன்படுத்தி இயங்குவதால் தீக்கே கதிரியமானி எனப்படுகின்றது-
933. நவச்சாரமானி ammonia meter  
934. நழுவுகம்பித் திறன்மானி slide-wire potentiometer  
935. நறவு வெப்பமானி alcohol thermometer  
936. நறவுமானி Vinometer தேறல் வெறியமானி ( -செ.) பழமதுவில் (wine) கலந்துள்ள நறவின் (alcohol) அளவீட்டை அளக்கும் கருவி. எனவே, நறவுமானி எனலாம்.
937. மீள்மமானி pachimeter மீள்திறனுடைய திண்மத்தின் மீள்பரப்பை அளவிடும் கருவி. நறுக்க எல்லைஅளவி (-இ.) எனக் கூறுவதைவிட, மீள்திறமானி > மீள்மமானி என்றால் பொருள் தெளிவாக இருக்கும்.
938. நறுக்கு   உறழ்மானி shearing interferometer  
939. நனைவு வளிமமானி wet-test meter  
940.  நாடி வளியழுத்தமானி Sphygmomanometer  
941. நாற்பகுதிமின்மானி Lindemann electrometer ஃபிரெடிரிக்கு இலிண்டெமண் (Frederick Lindemann) என்னும் அறிஞரால் மேம்படுத்தப்பட்ட மின்மானி. இரு தட்டுத்தொகுப்புகளுடைய நாற்பகுதிமின்மானி.
942. நான்முழமானி fathometer கடலின் ஆழத்தை அளக்கும் அலகு ஆறடி அளவுடைய பேதம்(fathom) எனப்படுகிறது. ஆறடிக்குச் சமமான நான்குமுழ அளவு என்னும்   பொருளில் நான்முழம் எனலாம். கடலின் ஆழம் எத்தனை நான்முழம் கொண்டது எனக் கணக்கிட உதவுவதால் நான்முழமானி எனலாம்.
943.  நான்முனை அலைப் பகுப்பாய்வி quadrupole spectrometer  
944.  நிகர எல்லொளிமானி net pyranometer  
945. கால வரைவி chronograph நிகழ்ச்சிப் பொழுதுகளைப் பதிவதற்கு உதவும் கருவி.
946. நிகழ்வெண் கதிர் நோக்கி ondoscope உயர் நிகழ்வெண்கதிர்வீச்சு கண்டறிய நோக்கப்படும் ஒளிர்விறக்கக் குழல்.
947. நிகழ்வெண் வகை தொலைமானி  frequency-type telemeter  
948. நிகழ்வெண்-கள எதிரொளிப்பு மானி frequency-domain reflectometer  
949. நிகழ்வெண்மானி counter/frequency meter or frequency counter நிகழ்விடை நேரவளவி(-இ.) என்றால் நிகழ்வுகளின் இடையே ஆகும் நேரத்தை அளப்பது எனத் தவறான பொருள் வரும். நிகழ்வு எண்மானி>நிகழ்வெண்மானி எனலே சரியாகும்.
950. நிரப்பு அமைவு வெப்பமானி filled-system thermometer  
951. நிரவல்மானி head meter பாய்மானியில் ஒரு வகை. எனவே, அழுத்த முகப்புசார் ஓட்டஅளவி (-இ.) என்பது பொருந்தாது. அழுத்த நிரவலில் (pressure head ) ஏற்படும் மாற்றங்களைப் பொருத்து இதன் செயல்பாடு அமைவதால், நிரவல்மானி எனலாம்.
952. நில வெப்பமானி pyrgeometer நில வெப்பவீச்சுமானி > நில வெப்பமானி
953. நிலத்தடி வெப்பமானி geothermometer பூமிக்கு அடியில் உள்ள பகுதியின் வெப்ப நிலையைக் காட்ட உதவும் கருவி. இதனைச் சிலர் புவிவெப்பமானி அல்லது புவிமானி என்பது பொருந்தாது. புவி மானி என்றால் புவியின் வெப்பநிலையை அளவிடும் கருவி என்று பொருளாகும். சுரங்கம் முதலான நிலத்தடிப்படிகுதியின் வெப்ப நிலையைக் கண்டறிய உதவுவதால் நிலத்தடி வெப்பமானி என்பதே ஏற்றதாக இருக்கும்.
954. நிலநடுக்க நோக்கி Seismoscope  
955. நிலநடுக்கமானி Seismometer  
956. நிலை அமிழ்வு நீரடர்மானி constant immersion hydrometer  
957. நிலை அழுத்த ஈடுசெய் வளி வெப்பமானி Callendar’s compensated air thermometer காலெந்தர் ( Hugh Longbourne Callendar: 1863-1930))என்னும் இங்கிலாந்து அறிவியலாளர் பெயரில் அழைக்கப்படும் நிலை அழுத்த வளிவெப்பமானியாகும்.     எனவே, நிலை அழுத்த ஈடுசெய் வளி வெப்பமானி எனலாம்.
958. நிலை அழுத்த வளிம வெப்பமானி constant-pressure gas thermometer  
959.  நிலைப்புக் கோணமானி stationary goniometer  
960. நிலைகுவிவுத் தொலைநோக்கி coude telescope நிலையாகப் பொருத்தப்பட்ட குவி மையம் உடைய எதிரொளிர்ப்புத் தொலைநோக்கி.

- இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png



கருவிகள் 1600 : 881-920 : இலக்குவனார் திருவள்ளுவன்

881. தூய்மி நிறமாலை ஒளிமானி dobson spectrophotometer வளிமண்டிலத் தூய்மியை அளவிடுவதற்குரிய தொடக்கக்காலக் கருவியாகும்; கோர்டன் தாபுசன் என்னும் அறிவியலாளரால் 1924 இல் கண்டுபிடிக்கப்பட்டது. தாபுசன் நிறமாலைஒளிமானி/ தாபுசன் நிறமாலைமானி/தாபுசன்மானி/ என்றும் அழைப்பர்.
882. தூள் பாய்மமானி powder flowmeter  
883. தெரிவுக் கதிரி selective radiator  
884. தெவிட்டு உள்ளகக் காந்தமானி saturable-core magnetometer  
885. தேக்க அலைவுநோக்கி storage oscilloscope  
886. தேய்கிளர்   அளவி limen gauge  
887. தேனிரும்பு மின்னோடிமானி soft-iron ammeter  
888. தொகு கோள ஒளிமானி integrating-sphere photometer  
889. தொகு சுழல் நோக்கி integrating gyroscope  
890.  தொகு நிகழ்வெண் மானி integrating frequency meter  
891. தொகு மின்கடவுமானி integrating galvanometer  
892. தொகு முடுக்கமானி integrating accelerometer  
893. தொகுமானி integrating meter  
894. தொகையீட்டு ஒளிமானி integrating photometer  
895.  தொங்கல் ஈரப்பத வெப்பமானி sling psychrometer  
896. தொங்கல் பாகுமைமானி rankines viscometer/ Ubbelohde viscometer  
897. தொங்கல் வெப்பமானி sling thermometer  
898.  தொங்குசுருள் மின்கடவுமானி suspended coil galvanometer  
899.  தொங்குவட்டு மானி nutating-diskmeter  
900. தொட்டி சூழிட நோக்கி tank periscope  
901. தொட்டி காற்றழுத்தமானி cistern barometer  
902. தொடர்ச்சி அளவி continuous gauge  
903. தொடுஉணர்வு மானி esthesiometer or aesthesiometer / tactometer தொடுஉணர்வின் கூர்மையை அளவிடும் கருவி
904. தொடுகைமானி haptometer தொடுஉணர்ச்சியை அளவிடும் தொடு உணர்மானி.
905. தொடுவகை உலவை மானி  contact anemometer  
906. தொடுவரை மின்கடவுமானி tangent galvanometer ஆரைமுள் மின்கடவுமானி சிறிய மின்னோட்டங்களை அளக்கப் பயன்படும் கருவி(-மூ.691.)
மையத்தில் செங்குத்தான கம்பிச்சுருளில் கிடைமட்ட சிறு காந்த ஊசியுடைய கருவி. கம்பிச்சுருளின் ஊடாகச் செல்லும் மின்சாரமே அளவிடப்படும்.
கிளெடு பௌலெட்டு       (Claude Pouillet   ) என்னும் பிரெஞ்சு அறிவியலாளரால்முதலில் விளக்கப்பட்டது.
தொடுவரை மின்கடவுமானி எனலாம்.
907. தொடுவெப்பவரைவு contact thermograph  
908. தொலை ஒருங்குமானி telepsychrometer  
909. தொலை ஒளிமானி telephotometer  
910. தொலை ஒளிவரைவு photo-telegraph தந்திப்பட அனுப்பீட்டமைவு
911. தொலை நுண்ணோக்கி telemicroscope  
912. தொலை புயல் வரைவி kerramograph தொலைமின் புயல்களைப் பதிவு செய்வதற்குரிய கருவி.
913.  தொலைஅளவீட்டு அலையுணரி telemetering antenna  
914.  தொலைஅளவீட்டு அலைவாங்கி telemetering receiver  
915. தொலைநிறமாலை நோக்கி telespectroscope தொலைநோக்கியும் நிறமாலைநோக்கியும் இணைந்த கருவி.
916. தொலைநோக்கி telescope  
917. தொலைபொருள்மானி macrometer தொலைவிலுள்ள பொருள்களை அளப்பதற்கான கருவி.
918. தொலைமானி telemeter  
919. தொலைவாசிப்புத்திசை காட்டி quadrantal deviation of compass  
920. தொலைவானிலை வரைவி telemeteorograph  

- இலக்குவனார் திருவள்ளுவன்

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png




Followers

Blog Archive