- காந்த நிறமாலைமானி-magnetic spectrometer
- காந்த வரைவி-maneto-graph : காந்தத் தாக்குதல்களின் மாறுதல்களைப் பதிவு செய்வதற்கான கருவி.
- காந்த வெப்பமானி- magnetic thermometer
- காந்தத் திசை காட்டி- magnetic compass
- காந்தத் திறன்மானி- magnetic potentiometer
- காந்தத் தூண்டல் சுழல் நோக்கி- magnetic induction gyroscope
- காந்தப் பாயமானி-flux meter
-
காந்தப்புல வலிமை மானி-hall-effect gaussmeter:காந்தப்புலத்தின் வலிமையை, எட்வின் ஆல் என்ற அமெரிக்க இயற்பியலாளரால் (1879 இல்) கண்டுபிடிக்கப்பட்ட விளைவின் அடிப்படையில் அளவிடும் கருவி.
-
காந்தமானி-magnetometer : காந்தத் தாக்குதல்களின் மாறுதல்களைப் பதிவு செய்வதற்கான கருவி. காந்தமானி என்றும் காந்த ஆற்றல்மானி என்றும் குறிப்பிடப்படுகின்றது. சுருக்கமாகக் காந்தமானி என்றே சொல்லலாம்.
-
காந்தவிசைமானி – permeameter :காந்தவிசைமானி: ஒரு பொருளின் வழியாகச் செல்லும் காந்த விசைக்கோடுகளின் எண்ணிக்கையையும் காந்தமூட்டும் விசையினையும் அளிவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி. (-ம. 476) உட்புகவிடன் மானி, உட்புகுதகவுமானி, புரைவு அளவி,எனவும்(-ஐ.) பொசிமையளவி, பொசிவளவி எனவும் (-இ.) கூறப்படுவனவும் பொருளடிப்படையில் சரிதான். எனினும் ஒரே சொல்லே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால், காந்தவிசைமானி எனலாம்.
- காந்தவேகமானி- magnetic speedometer
- காப்பு வெப்பமானி- protected thermometer
- காரமானி-Alkalimeter:காரச்செறிவை அளக்கப் பயன்படும் கருவி.(-மூ.20)
- கால்வட்ட மின்மானி-quadrant electrometer
- கால இடைவெளி மானி-time-interval meter
-
கால வெப்பமானி-chrono thermometer:வெப்பநிலை மாற்ற விளைவுகளைக்கணக்கிட்டுச் சராசரி வெப்பநிலையைக் காட்டும் மணிப்பொறி.
-
காலக்கூறுநோக்கி- chronoscope: மிகச்சிறு காலக்கூறுகளைக் கணிப்பதற்கு நோக்க உதவும் கருவி. காலநுண்ணளவி (-இ.)என்றால் நுண்மை அளவியைக்குறிக்கும். எனவே பொருந்தாது. காலத்துளிமானி (-ஐ-) என்று குறிப்பதைவிட க் காலக்கூறுபாட்டை நோக்கும் கருவியைக் காலக்கூறு நோக்கி என்பதே பொருத்தமாக அமையும்.(2.) உந்துவிசை நோக்கி.
- காலநிலைமானி-weatherometer
-
காலமானி-chronometer :திட்பக்காலக் கணிப்பளவுக் கருவி(செ.)மின்னணு கடிகாரம், மாலுமி காலமானி, கடிகாரம், காலமாணி, கடிகை, நுட்பக்காலக் கணிப்பளவுக் கருவி. நுண்காலக்கணிப்பான் (-ம.159), திட்பக்காலக் கணிப்பளவுக் கருவி(செ.)மின்னணு கடிகாரம், மாலுமி காலமானி, கடிகாரம், காலமாணி, கடிகை எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. எளிமையாகக் காலமானி என்றே சொல்லலாம்.
- காலமுறை மின்கடவுமானி-periodic galvanometer
- காற்றடர்நோக்கி-baroscope: காற்றடர்த்தி மாற்றங்களைக் காட்டும் கருவி. அடர்த்தி காட்டி எனக் குறிப்பிடுகின்றனர். அடர்த்தி என்பது பொதுவான சொல்லாக உள்ளமையால் காற்றடர்நோக்கி என்று தெளிவாகச் சொல்லலாம்.
- காற்றரண் கதிரியக்கமானி-farmer dosimeter
- காற்றழுத்தமானி- barometer வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி. (-செ.); அழுத்தமானி என்றும் குறிப்பிடுகின்றனர். அழுத்தம் என்பது பொதுவான சொல்லாக உள்ளமையால் வளிமண்டிலத்திலுள்ள காற்றழுத்தத்தைக் காணும் கருவி என்பதைக் குறிப்பிடும் வகையில், காற்றழுத்தமானி என்று தெளிவாகச் சொல்லலாம்.
- காற்றளவி-air gauge
- காற்றாலை உலவை மானி-windmill anemometer
- காற்றியக்க உலவை மானி-eolain anemometer
- காற்றியக்கக் கருவிகள்-pneumatic tools:காற்றழுத்தக் கருவிகள் : காற்றழுத்தத்தின் மூலம் இயக்கப்படும் கருவிகள். (-ம.491). (காற்றழுத்தக் கருவிகளின் பொதுச் சொல்)
- காற்று நோக்கி-anemoscope:காற்றின் போக்கை அல்லது காற்றுத்திசையின் மாற்றத்தை அல்லது வானிலை மாற்றத்தை ஆராய உதவும் கருவி.
- காற்று- வெப்பமானி- air-thermometer: இதள் (பாதரதசம்) பயன்படுத்தப்படாமல் காற்று பயன்படுத்தப்படும் வெப்பமானி.
- காற்றுத்தடை வெப்பமானி -air resistance thermometer
- காற்றுத்தூசு நோக்கி-koniscope
- காற்றுமானி- airometer/ airmeter: காற்றுவீச்சின் விகிதத்தை அளவிடுவதற்கான கருவி.(-ம.27); காற்றின் அல்லது வளிகளின் எடையை அல்லது செறிவை அளவிடும் கருவி(-செ.).
- கிடைக் காந்தமானி- horizontal magnetometer
600. கிடைச் செறிவு மாறல்மானி- horizontal intensity variometer
No comments:
Post a Comment