961.  நிலைத்தடை நேர்மின் திறன்மானி constant-resistance dc potentiometer  
962. நிலைநீர்மப் பாகுமைமானி stokes viscometer செங்குத்துக் கண்ணாடிக்குழாயில் நீர்மம் நிலையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டது. கேபிரியேல் இசுடோக்கு ( Sir George Gabriel Stoke :13.08.1819 – 01.02.1903) என்னும் அயர்லாந்து நாட்டைச் சார்ந்த கணக்கியல் இயற்பியலாளர் பெயரில் வழங்கப்படுகிறது. நிலைநீர்மப் பாகுமைமானி எனலாம்.
963. நிலைநீரியல்அளவி hydrostatic gauge  
964. நிலைப்பிலா ஈர்ப்புமானி astatized gravimeter  
965. நிலைமின் சுழல் நோக்கி electrostatic gyroscope  
966. நிலைமின் திறனமானி electrostatic wattmeter  
967. நிலைமின் மின்வலி மானி electrostatic voltmeter  
968. நிலையக நோக்கி statoscope  
969. நிலையிலி ஈர்ப்புமானி astatic gravimeter  
970. நிலையிலி காந்தமானி astatic magnetometer  
971. நிலையிலி திறனமானி astatic wattmeter காந்தப் பாதிப்பிலாதது
972. நிலையிலி மின்கடவுமானி astatic galvanometer  
973. நிழல் ஒளிமானி shadow photometer  
974. நிற ஒளிமானி   colour photometer  
975. நிற ஒளிநோக்கி chromascope  
976. நிற கலப்புக்கருவி chromatoscope  
977. நிற நோக்கி chromoscope வேறுவேறு நிற வடிவங்களை இணைத்து நோக்குவதற்குரிய கருவி. பொறியியல்   தொழில் நுட்பத்துறையில்   நிறச்செறிவு பகுப்பாய்வி என்றும் இயற்பியலில் நிறங்காட்டி என்றும் குறிக்கின்றனர். சுருக்கமாகவும் பிற ஒத்த   கலைச்சொற்கள் அடிப்படையிலும் நிறநோக்கி எனலாம்.
978. நிற விளக்க நுண்ணோக்கி color-translating microscope  
979. நிறஒப்புமானி Tintometer நிறக்கலவைமானி , நிறஏற்றமானி,வண்ணச் சாயல்மானி , மென்னிறச்சாயல் அளவைக் கருவி எனப் பலவாறாகக் கூறப்படுகின்றது. நேர் மொழிபெயர்ப்பாக இவை அமைகின்றன. நிறம் தரும் பொருளின் தன்மையை ஆராயவும் ஒப்பிடவும் உதவும் கருவி. எனவே, நிறஒப்புமானி எனலாம்.
980. நிறம்மாறு கதிரியமானி chromoradiometer  
981. நிறமாலை ஈரமானி spectral hygrometer  
982. நிறமாலை உடனொளிர் மானி spectro fluorometer  
983. நிறமாலை ஒளிமானி spectra photometer/ spectro photometer  
984.  நிறமாலை ஒளிர்வு ஒளிமானி spectra pritchard photometer ஒளிர்வுப் பரப்பை அளவிடும் ஒளிமின் கருவி. நிறமாலை ஒளிர்வு ஒளிமானி.
985. நிறமாலை முனைவுமானி spectro polarimeter  
986. நிறமாலை வெங்கதிர்மானி spectrobolometer கதிரியக்க அலைநீளத்தை வரையறுப்பதற்கான, அலைமாலை நோக்கியும்   வெங்கதிர்மானியும் இணைந்த கருவி.
987. நிறமாலை வெயில்மானி spectro pyrheliometer  
988. நிறமாலைநோக்கி spectroscope  
989. நிறமாலைமானி spectrometer அலைமாலை அளவி(-இ.), கதிர்நிரல் அளவி(-இ.), நிறமாலைமானி(-ஐ.), திருசிய மானி(-ஐ.),             நிறமாலை அளவி(-ஐ.), வண்ண அளவுமானி(-ஐ.), வண்ணப்பட்டைமானி(-செ.) , நிறமாலைக்கருவி என ஒவ்வொருவகையாகக் குறிப்பிடுகின்றனர். நிறமாலை ஒளிஅலை நீளத்தை அளவிடும் கருவி.
990. நிறமானி chromatoptometer கண்கள் நிறங்களை உணரும் திறனை அளவிடும் கருவி.
991. நிறமிலித் தொலைநோக்கி achromatic telescope  
992. நிறவரைவி chromatograph  
993.  நிறைநீராவி வெம்மிமானி Joly steam calorimeter இயோவான் இயோலி( John Joly :1857–1933)   என்னும் அறிவியலாளர் பெயரில் அழைக்கப்படும் இக்கருவியைப் பணி அடிப்படையில், நிறைநீராவி வெம்மிமானி எனலாம்.
994.  நீட்சி மானி tensometer  
995. நீர் ஊடுருவுமானி infiltrometer  
996. நீர் வெம்மிமானி water calorimeter நீரின் வெப்பநிலை உயர்ச்சியில் வானலை நிகழ்வெண் திறன் கணக்கிடுவது.
997. நீர்ப்பயன்மானி water-meter குடியிருப்பு மனைகள், வணிகக்கட்டடங்கள் முதலானவற்றிற்குக் குழாய் மூலம் வரும் நீரின் பயனளவைக் கணக்கிடும் கருவி. நீர்மானி என்றால் ஐடிரோமீட்டர் / hydrometer எனத் தவறாக எண்ணலாம். வடிகால் நீரளவி(-செ.) என்றால் சாக்கடைநீர் / drainage எனத் தவறாகக் கருதலாம். எனவே, நீர்ப்பயன்மானி எனலாம்.
998. நீர்-பாய்வு வெயில் மானி water-flow pyrheliometer  
999. நீர்ம அடர்த்திமானி arcometer அதன் திரண்மத்திலும் பருமத்திலும் (mass and volume) ஏற்படும் இழப்பை அளவிடுவதன் மூலம் நீர்மத்தின் அடர்த்தியைக் கணக்கிட உதவுவது.
1000. நீர்ம அடைப்பு மானி liquid-sealed meter  
- இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png