Tuesday, February 3, 2015

கலைச்சொல் தெளிவோம் 59 : ஒடுக்குச் சீட்டு – tax receipt

kalaichol-thelivoam03 
  ஒடுக்கம்(7) சங்க இலக்கியங்களில் உடல் அல்லது உள்ளம் ஒடுங்கும் நிலையைக் குறிக்கிறது. எனினும், பின்னர் ஒடுக்கு என்பது அரசுக் கருவூலத்தில் பணம் செலுத்துவதற்குத் தரும் பெறுகைச் சீட்டைக் குறித்துள்ளது. (தமிழ்ப்பேரகராதி : பக்கம்: 589) இச்சொல்லின் வளர்ச்சி அல்லது மாற்ற நிலை தெரியவில்லை. ஒடுக்கு என்பது செலவினை ஒடுக்குவதைக்-குறைப்பதைக்-குறிப்பிட்டுப் பின்னர், அரசின் செலவைக் குறைப்பதற்காக மக்கள் செலுத்தும் வரியைக் குறித்திருக்கலாம்.
  இப்போது, ரிசீப்ட் /receipt என்பதற்கு இரசீது என்றே பலரும் கையாள்கின்றனர். மனையியலில் பணவரத்து, இரசீது, பற்றுச்சீட்டு என்றும் ஆட்சித்துறை, வேளாண்துறை, வங்கித்துறை, வரலாற்றுத்துறை, சட்டத்துறை ஆகியவற்றில் பற்றுச்சீட்டு என்றும் கூடுதலாக ஆட்சித்துறையில் பெறுகை என்றும் வேளாண்துறையில் பெறுகை ஒப்பம் என்றும் பயன்படுத்தி வருகின்றனர்.
அரசுதரும் tax receipt-ஒடுக்குச் சீட்டு
பிறர்தரும் cash receipt-பணச்சீட்டு
வங்கிக் கணக்கில் பற்று வைப்பதற்குத் தரும்
debit receipt பற்றுச்சீட்டு என வகைப்படுத்தலாம்.
 – இலக்குவனார் திருவள்ளுவன்



கருவிகள் 1600 : 721-760: இலக்குவனார் திருவள்ளுவன்



கருவிகள் 1600 : 721-760:

 இலக்குவனார் திருவள்ளுவன்

721. சுருள்மின்னியக்க விசைமானி Siemens’ electrodynamometer மின்தொடரில் உள்ள அனைத்துச் சுருள்கள் வாயிலாகவும் மின்னோட்டம் பாய்வதை அளவிடும்   மின்காந்தக் கருவி வகை.
722. சுருள்வரைவி helicograph சுருள்களை வரைவதற்குரிய கருவி.
723.  சுருள்வலயத் திறன்மானி helical potentiometer  
724.  சுழல் உணக்க மானி whirling psychrometer  
725.  சுழல் கற்றை முகில்மட்டமானி rotating-beam ceilometer  
726. சுழல் நோக்கி gyroscope
சுழல் வேகமானியால் சம நிலைப்படுத்தப்பட்டு எந்தத் திசையிலும் திருப்பு வளையங்களின் உட்புறம் அமைந்த சமனுருள். (-ம.326) சுழல்பொருள்களின் இயக்கத்தை நோக்க உதவும் கருவி.
கொட்பளவி,
கொட்புநோக்கி,
கொட்புமானி,
சுழல் கருவி,
சுழலாழிக் கருவி
சுழல் காட்டி
சுழல் வேகமானி
சுழலாழி
சுழிகாட்டி
சுழிப்புக்காட்டி
சுழலியக்கம்   காட்டி
திருகுசுழலாளி
என அரசுத்துறைகளில் வெவ்வேறு வகையாகக் குறிக்கின்றனர். சுழற்சியைக்குறிக்கும் கொட்பு என்னும் சொல்லடிப்படையில் கொட்பி என்பது சரிதான். ஆனால், இச்சொல் வேறிடத்தில் (whirl)பயன்படுவதாலும், நடை முறையில் சுழல் தொடர்பான சொல் இருக்கையில் வேறு சொல்லைத் தேட வேண்டிய தேவை இன்மையாலும் சுழல் நோக்கி என எளிமையாகக் கூறலாம்.
727.  சுழல் பொருட்பெயர்வு மானி rotary abutment meter  
728. சுழல் மடல்மானி rotary-vane meter  
729. சுழல் மின்னழுத்த மானி rotary voltmeter  
730. சுழல்நோக்கித் திசைகாட்டி gyroscopic compass/ Martenssen gyroscopic compass  
731.  சுழல்வுமானி rotameter பாய்வுவீத மானி (-செ.), சுழலும் பாய்ம வேகமானி (-செ.). மூடிய குழாயில் நீர்ம அல்லது வளிம ஓட்டத்தை அளவிட உவுவது.
சுருக்கமாகச் சுழல்வுமானி எனலாம்.
732. சுழலகற்சித் திரள் பாய்மமானி Coriolis-type mass flowmeter  
733. சுழலமைவு பாகுமைமானி rotational viscometer  
734. சுழலுருளைப் பாகுமைமானி rotating cylinder viscometer  
735. சுழலோட்டத் திசைகாட்டி gyre compass / gyro compass  
736. சுழற்சிநோக்கி stroboscope இயங்குபொருள் நிகழ்வெண் காணி (-இ). செயலளவில் சரிதான். என்றாலும், தொடராக உள்ளது. சுழல் வேகம் காட்டி(-இ) சுழல் வேகத்தைக் காட்டுவது நோக்கமில்லை. சுழல் வேகத்தில் நோக்க உதவுவது.
சுழற்சிநோக்கி :ஒரு சுழலும் எந்திரத்தின் வேகத்தை அளவிடுவதற்கான அல்லது அதன் இயக்கத்தை ஆராய்வதற்கான ஒரு கருவி. இதில் மாறுகிற வேகமுடைய பொறிவிளக்கு இருக்கும். இதனைச் சுழலும் எந்திரத்திற்கேற்ப ஒருங்கியைபு செய்து கொள்ளலாம். இவ்வாறு ஒருங்கியைபு செய்த வேகத்தில் சுழலும் உறுப்புகள் நிலையாக இருப்பதுபோல் தோன்றும்(மின்னியல்). (-ம.595)
சுழல்பொருள் நோக்கி :சீரான இயக்கத்துடன் விரைவாகச் சென்று கொண்டிருக்கும் பொருள்களை, அவை நிலையாக இருப்பதுபோல் பார்க்கும் கருவி (இயந்திரவியல்). (-மூ.676). செயற்பாட்டுஅடிப்படையில் இரண்டும் சரிதான். சுழற்சி நோக்கி என்றால் சுழற்சியை நோக்குவது என்று எடுத்துக் கொள்ளாமல் சுழற்சியில் உள்ள பொருள் நோக்கி என விரி பொருளாகக் கொள்ளலாம்.
[சுழல் நோக்கி (gyroscope ) என மற்றொரு கருவி உள்ளதால் அவ்வாறு குறிப்பிட இயலாது.]
737. சுழற்சிப் பாகுமைமானி couette viscometer/ rotational viscometer/ rotation viscometer  
738. சுழற்சிமானி tropometer விழிச்சுழற்சி போன்ற சுழற்சியை அளவிடும் கருவி. முறுக்கஅளவி, விழிச்சுழல்மானி, விழிச்சுழற்சிமானி, எலும்பு முறுக்கமானி எனப் பலவகையாகக் கூறுப்படுவனவற்றுள் சுழற்சிமானி என்பதே சுருக்கமான பொருத்த சொல்லாகும். எலும்பு முறுக்கத்தை அளவிடுகையில் முறுக்கமானி என்பது சரியாக அமைந்தாலும் பொதுவான சொல்லாகச் சுழற்சிமானியைக் கையாளலாம்.
739. சுழற்சிவரைவி gyrograph சுழற்சிகளைப் பதிவுசெய்யும் கருவி.
740. சுழிப்பு இறக்கமானி vortex-shedding meter  
741. சுழிப்பு முந்துகை பாய்மமானி vortex precession flow meter  
742. சுழிப்பு வெப்பமானி vortex thermometer  
743. சுழிப்புப் பாய்மமானி vortex cage meter  
744. சுழிவு உலவை மானி  rotation anemometer  
745. சுழிவு மின்கடவு சுற்றுமானி eddy-current tachometer  
746. சுற்று வரைவி
tachograph இரத்த ஓட்ட வேக வரைவி   (-த.), சுழல்வரைவி(-செ.), சுழற்சிப்பதிவு ( -ஐ.),எனக்கூறப்படுகின்றது. இரத்தச் சுற்று விரைவைக் கணக்கிடுவதால், சுருக்கமாகச் சுற்று வரைவி எனலாம். ஊர்தியின் விரைவையும் ஓட்ட நேரத்தையும் ஊர்திச்சக்கரச் சுற்று மூலம் அறியும் இயந்திரக் கருவியும் உள்ளது. அதற்கும் சுற்று வரைவி என்பது பொருந்தும்.
747. சுற்றுமானி tachometer ஊர்திச் செலவுச் தொலைமானி, சுற்றுமானி, சுழல் அளவி, சுழல் வேக அளவி, சுழற்சிமானி, சுழற்சிவீதமானி, தூர அளவி, விசைமானி, விரைவுமானி, வேகமானி எனப் பலவகையாகக் குறிப்பிடுகின்றனர். ஊர்திச் சக்கரம் சுற்றுவதை
அளவிடும் கருவி என்பதால்
சுற்றுமானி   என்பதே சரியாக உள்ளது.
748. சூட்டுக்கம்பி உலவை மானி hot-wire anemometer  
749. சூட்டுக்கம்பி மின்னோடிமானி hot-wire ammeter  
750. சூரிய அலைமாலை நோக்கி spectrohelioscope  
751. சூரியத் தொலைநோக்கி solar telescope  
752. சூரியப் பட வரைவி photoheliograph கதிரவனைப் படம் பிடித்துத்தரும் ஒளிப்படக்கருவி யமைப்பு
753. சூழிட நோக்கி periscope  
754. செங்குத்து உலவை மானி vertical anemometer  
755. செங்குத்துத் துளைவுத்திரிகை vertical boring mill செங்குத்துத் துளைக் கருவி: கடைசல் எந்திரத்தில் ஒரு சுழல் மேசையில் இழைப்புளியைச் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும்நகர்த்திக் கடைசல் வேலை செய்வதற்கான கருவி.( ம.660)
செங்குத்துத் துளைவுத்திரிகை எனலாம்.
756. செங்குத்துமானி vertimeter செங்குத்துமானி : வான் கூண்டின் ஏற்ற இறக்க வீதத்தைக் காட்டும் சாதனம். இது ஒரு தனி வகை நீரில்லா நுண்ணழுத்த மானியாகும். ஏற்ற வீதமானி ஏற்ற இறக்கத்தைக் காட்டுகிறது.( ம.660)
757.  செய்கோள் அகச்சிவப்பு நிறமாலைமானி satellite infrared spectrometer  
758.  செருகல்மானி insertion meter உந்திசிறு முற்செலுத்தி (propeller) அல்லது விசைச்சுழலியின்(turbine) சுழற்சிவீதத்தை அளவிடும் பாய்மமானி வகைக் கருவி. சுழல்வீதமானி என்று சொல்லலாம். ஆனால், செருகப்படும் நிலையில் இருப்பதால் செருகல்மானி எனப்படுகிறது.
759. செருகுஅளவி plug gauge செருகுஅளவி :   எந்திர வேலைப்பொருள்களின் உள் விட்டங்களை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி. (-ம.491) செருகிமானி,
சொருகி மானி,
சொருகும் மானி,
முளைக் கடிகை,
என்பன ஏற்றனவாக இல்லை.
760. செல்வழித் தொலைநோக்கி transit telescope கடப்புத் தொலைநோக்கி(-இ.) எனச் சொல்வதைவிடச் செல்வழித் தொலைநோக்கி என்றால் ஏற்றதாக அமையும்.





Sunday, February 1, 2015

கருவிகள் 1600 : 681-720: இலக்குவனார் திருவள்ளுவன்

கருவிகள் 1600 : 681-720: இலக்குவனார் திருவள்ளுவன்

681.  ங – கதிர் படிக நிறமாலைமானி X-ray crystal spectrometer
682.  ங – கதிர் படிகஅச்சுக் கோணமானி X-ray goniometer
683.  ங – கதிர் விளிம்புவிலகல்மானி X-ray diffractometer
684. ங- கதிர் நிறமாலைமானி X-ray spectrometer
685. சக்கரை நீரடர்மானி brix hydrometer சருக்கரைக் குறியீட்டு நீரடர்மானி. சுருக்கமாகச் சக்கரை நீரடர்மானி எனலாம்.
686. சக்கரைமானி saccharometer
687. சமன்தள ஆடிமுப்பருமநோக்கி wheatstone stereoscope விழியிடைத் தொலைவை விடப் பெரிதாக இடைவெளி உள்ள ஈருருவங்களின் உருகிடைப் படிமத்தை உருவாக்கச் சமன்தள ஆடியைப் பயன்படுத்தும் முப்பருமநோக்கி .
688. சமன்மானி idiometer செய்மீன்(artificial star) இயக்கத்தின் மூலம், உழலிகள்(விண்பொருள்கள்) இயக்கத்தின் தனிச்சமன்பாடு காண உதவும் கருவி.
689. சரிதல்மானி gradiometer கிடைமட்டத்திற்குச் சார்பான சரிவளவு வாட்டம்(gradient) எனப்படுகிறது. பொருளின் சரிவளவைக்குறிப்பதால் வாட்டமானி எனப்படுகிறது. ஆனால், வாட்டம் என்றால் வாடுதல் என்று பொருள்கொள்ள இடம் உள்ளது. படித்திறன் மானி என்றும் சாய்வு வீதஅளவி என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். சரிதல்மானி எனக் கூறலாம்.
690. சரிபார்ப்புமானி check meter
691. சரிவளவி bevel gauge/slope gauge சாய்வுமானி, தரங்குமானி தரங்களவுகோல், வழுக்குதரங்கு, சாய்தளஅளவி, எனப் பலவாறாகச் சொல்வதைவிட சரிவளவி
எனலாம்.
692. சரிவு மாறல்மானி declination variometer
693. சரிவுமானி declinometer
694. சலாகைவகை நீர்மமட்ட மானி probe-type liquid-level meter
695. ஊடுபரவல் நோக்கி osmoscope மண் அளவுதரமானி (-ஐ.), மண்அளவு தர உணர்ப்பிக் கருவி(-ஐ.),சவ்வூடுபரவல் நோக்கி, (-இ.) எனக் குறிக்கின்றனர். சொற்சீர்மை கருதி ஊடுபரவல் நோக்கி எனலாம்.
696. சாய்தல்மானி gammeter
697. சாய்மை வெட்டு அளவி bias cutting gauge
698. சாய்வளவி inclined gauge
699. சாய்வுக்குழாய் வளியழுத்தமானி inclined-tube manometer
700. சாய்வுக்கோணமானி dipmeter
701.  சாய்வுமானி inclinometer சாய்வுமானி: விமானம் பறக்கும் உயரத்தைக் காட்டும் கருவி. விமானத்தின் முன்புற-பின்புற அச்சின் வழியாகச் செல்லும் செங்குத்துத்தளத்துடனான சாய்வினைக் காட்டுவதற்கேற்ப அல்லது கிடைமட்ட அச்சின் வழியாகச் செல்லும் செங்குத்துத் தளத்துடனான அல்லது இரு தளங்களுடனுமான சாய்வினைக் காட்டுவதற்கேற்ப சாய்வுமானியை முன்-பின்மானி, கிடைமட்டச் சாய்வுமானி, பொது நிலைச் சாய்வுமானி என வகைப்படுத்துவர்(-ம.358). [தொடர்பான பெயர்கள்: சாய்வூசி, பதனவூசி             dip needle/ dipping needle/dip compass]
702. சாயமானி crockmeter துணிகள், தோல்கள் ஆகியவற்றின் சாய இழப்பை அளவிடும் கருவி. சாய மானி எனலாம்.
703. சாயமிலி நிறமானி saybolt chromometer சாயம் ஏற்றப்படாத தாரை எரிபொருள், மண்ணெண்ணெய், கல்லெண்ணெய்மெழுகு,வெண்மருந்தெண்ணெய் முதலானவற்றின் நிறத்தை அளவிடும் கருவி.
704.  சார்புக் காந்தமானி relative magnetometer
705. சிதறல்மானி scatterometer
706. துணுக்குமானி nephelometer கலங்கல்மானி (-ஐ.) என்பது சரியாக அமையாது; கலங்கல் மானி(turbidimeter) என மற்றொரு கருவி உள்ளதால் இங்கு வேறுகலைச்சொல்லே தேவை. துகள் சிதறல் சார்புஅளவி(-இ.) இதனை அளவி வகையாகக் குறிப்பிடாமல் சொற்சீர்மை கரதி மானி வகையாகக் குறிக்க வேண்டும். ஆனால், சிதறல்மானி (scatterometer) என வேறு கருவி உள்ளது.
நெபிலோமீட்டர் -நிற ஒளி அளவு மானி: தொங்கல் கரைசல்களின் செறிவினை, ஒளிச்சிதறல் மூலம் அளக்கும் கருவி. (-மூ.450)
தொங்கல் செறிவு என்பதைவிட மிதக்கும் துணுக்குகள்(suspended particles)என்பதே இந்தக்   கருவியின் பணியைக் குறிப்பிட ஏற்றதாக இருக்கும்.
பாய்மத்தில் குறிப்பாகக் கூழ்மத்தில் மிதக்கும் துணுக்குகளின் இயல்புகளை அளவிடப் பயன்படுவதால், துணுக்குமானி எனலாம்.
707. சிதறிலிப் பிறழ்ச்சித் தொலைநோக்கி baker-schmidt telescope பிறழ்ச்சி தொலைநோக்கியின் ஒரு வகை. இதில், அண்மைக் கோளவுரு முதன்மை ஆடியில் இருந்து எதிரொளிக்கும் ஒளி மீண்டும் சிறிய இரண்டாம் ஆடியின் வழியாக எதிரொளித்துச் சிதறலும் திரிவும் அற்ற உருவத்தை (an image that is free of astigmatism and distortion) அளிக்கிறது. சிதறிலிப் பிறழ்ச்சித் தொலைநோக்கி எனலாம்.
708.  சிமிட்டு ஒளிமானி flicker photometer
709.  சிறிய உச்சப் பாய்மமானி mini peak flow meter
710. நுண்ணளவளவி micrometer gauge சிறுதொலைவை அளவிடும் கருவி. [கடிகை   டைமர் ( timer) எனப்படுவதால்,] நுண்ணளவிக் கடிகை (-இ.) என்பதை விட நுண்ணளவு அளவி > நுண்ணளவளவி எனலாம்.
711. சிறுநீர்நாளநோக்கி urethroscope சிறுநீர்வடி குழாய் நோக்கி, யூரித்ர உட்காட்டி,
என்று சொல்லப்படுவதில் பின்னது கலப்புச் சொல். உடலுறுப்பைக் குழாய் என்பதைவிட நாளம் என்பதே சரியாகும். எனவே, சிறுநீர்நாளநோக்கி எனலாம்.
712. சிறுநீர்ப்பை நோக்கி cystoscope சிறுநீர்ப்பையின் உட்புறத்தை ஆய்வதற்கான கருவி.
713. சிறுநீர்மானி urinometer/ urogravimeter/urometer சிறுநீர் அடர்த்தி மானி சிறுநீர்மானி
சிறுநீர் எடையளவி
சிறுநீர் ஒப்படர்த்திமானி
சிறுநீர் எடைத் திறமானி
என வெவ்வேறாகக் கூறப்படும் சிறுநீர் ஒப்படர்த்திமானியைச் சுருக்கமாகச் சிறுநீர்மானி எனலாம்.
714. சிறும வெப்பமானி minimum thermometer
715.  சீராக்கித்திறன்மானி trimmer potentiometer
716. சுட்டாங்கல் ஈரஇழப்பு மானி clay atmometer நுண்துளைகளுடைய சுட்டாங்கல் கொள்கலன் கொண்ட ஈரஇழப்பு மானி. (சுட்டாங்கல் – பீங்கான்)
717. சுதைத்தகட்டு நுண்ணோக்கி smith-baker microscope ஒரு வகை குறுக்கீட்டு நுண்ணோக்கி. இதில் முனைவாக்கப்பட்ட ஒளிக்கீற்று கொண்மியின் முகப்பாடி (front lens of the condenser)யில் பிணைக்கப்பட்ட இருபக்கச் சிதறல் சுதைத்தகடு மூலம் பிரிக்கப்பட்டுப், பொருண்மியுடன் பிணைக்கப்பட்ட இது போன்ற தகடு மூலம்   மீளிணைக்கப்படுகிறது. சுதைத்தகட்டு நுண்ணோக்கி எனலாம்.
718. சுதைமானி calcimeter செயிபிலெர்(Scheibler) என்னும் அறிவியலர்   எலும்புத்தூளில் இருந்தும் பிற பொருளில் இருந்தும் உள்ள சுதையத்தை(சுண்ணாம்பை) அளவிடுவதற்கு உருவாக்கிய கருவி.உடல் பாய்மங்களில்(fluids) உள்ள சுதைய அளவை மதிப்பிடவும் உதவுவது. மண்ணில் உள்ள   சுதைய அளவை (சுண்ணாம்பினை) மதிப்பிடும் பொறியியல் கருவியாகவும் விளங்குகிறது.
குருதி சுண்ண அளவி (-ஐ.) சுண்ணம் மண்ணளவி(-இ.) எனக் கூறுவது சரிதான். என்றாலும் ஆங்கிலத்தில் உள்ளதுபோல் பொதுவாகச் சுதைமானி எனலாம்.
719. சுமையேற்ற அளவி loading gauge
720. சுருள் வெப்பமானி spiral thermometer

- இலக்குவனார் திருவள்ளுவன்

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png


Followers

Blog Archive