ஒடுக்கம்(7) சங்க இலக்கியங்களில் உடல்
அல்லது உள்ளம் ஒடுங்கும் நிலையைக் குறிக்கிறது. எனினும், பின்னர் ஒடுக்கு
என்பது அரசுக் கருவூலத்தில் பணம் செலுத்துவதற்குத் தரும் பெறுகைச் சீட்டைக்
குறித்துள்ளது. (தமிழ்ப்பேரகராதி : பக்கம்: 589) இச்சொல்லின் வளர்ச்சி
அல்லது மாற்ற நிலை தெரியவில்லை. ஒடுக்கு என்பது செலவினை
ஒடுக்குவதைக்-குறைப்பதைக்-குறிப்பிட்டுப் பின்னர், அரசின் செலவைக்
குறைப்பதற்காக மக்கள் செலுத்தும் வரியைக் குறித்திருக்கலாம்.
இப்போது, ரிசீப்ட் /receipt
என்பதற்கு இரசீது என்றே பலரும் கையாள்கின்றனர். மனையியலில் பணவரத்து,
இரசீது, பற்றுச்சீட்டு என்றும் ஆட்சித்துறை, வேளாண்துறை, வங்கித்துறை,
வரலாற்றுத்துறை, சட்டத்துறை ஆகியவற்றில் பற்றுச்சீட்டு என்றும் கூடுதலாக
ஆட்சித்துறையில் பெறுகை என்றும் வேளாண்துறையில் பெறுகை ஒப்பம் என்றும்
பயன்படுத்தி வருகின்றனர்.
அரசுதரும் tax receipt-ஒடுக்குச் சீட்டு
பிறர்தரும் cash receipt-பணச்சீட்டு
வங்கிக் கணக்கில் பற்று வைப்பதற்குத் தரும்
debit receipt பற்றுச்சீட்டு என வகைப்படுத்தலாம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment