681. | ங – கதிர் படிக நிறமாலைமானி | X-ray crystal spectrometer | |
682. | ங – கதிர் படிகஅச்சுக் கோணமானி | X-ray goniometer | |
683. | ங – கதிர் விளிம்புவிலகல்மானி | X-ray diffractometer | |
684. | ங- கதிர் நிறமாலைமானி | X-ray spectrometer | |
685. | சக்கரை நீரடர்மானி | brix hydrometer | சருக்கரைக் குறியீட்டு நீரடர்மானி. சுருக்கமாகச் சக்கரை நீரடர்மானி எனலாம். |
686. | சக்கரைமானி | saccharometer | |
687. | சமன்தள ஆடிமுப்பருமநோக்கி | wheatstone stereoscope | விழியிடைத் தொலைவை விடப் பெரிதாக இடைவெளி உள்ள ஈருருவங்களின் உருகிடைப் படிமத்தை உருவாக்கச் சமன்தள ஆடியைப் பயன்படுத்தும் முப்பருமநோக்கி . |
688. | சமன்மானி | idiometer | செய்மீன்(artificial star) இயக்கத்தின் மூலம், உழலிகள்(விண்பொருள்கள்) இயக்கத்தின் தனிச்சமன்பாடு காண உதவும் கருவி. |
689. | சரிதல்மானி | gradiometer | கிடைமட்டத்திற்குச் சார்பான சரிவளவு வாட்டம்(gradient) எனப்படுகிறது. பொருளின் சரிவளவைக்குறிப்பதால் வாட்டமானி எனப்படுகிறது. ஆனால், வாட்டம் என்றால் வாடுதல் என்று பொருள்கொள்ள இடம் உள்ளது. படித்திறன் மானி என்றும் சாய்வு வீதஅளவி என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். சரிதல்மானி எனக் கூறலாம். |
690. | சரிபார்ப்புமானி | check meter | |
691. | சரிவளவி | bevel gauge/slope gauge | சாய்வுமானி, தரங்குமானி
தரங்களவுகோல், வழுக்குதரங்கு, சாய்தளஅளவி, எனப் பலவாறாகச் சொல்வதைவிட சரிவளவி எனலாம். |
692. | சரிவு மாறல்மானி | declination variometer | |
693. | சரிவுமானி | declinometer | |
694. | சலாகைவகை நீர்மமட்ட மானி | probe-type liquid-level meter | |
695. | ஊடுபரவல் நோக்கி | osmoscope | மண் அளவுதரமானி (-ஐ.), மண்அளவு தர உணர்ப்பிக் கருவி(-ஐ.),சவ்வூடுபரவல் நோக்கி, (-இ.) எனக் குறிக்கின்றனர். சொற்சீர்மை கருதி ஊடுபரவல் நோக்கி எனலாம். |
696. | சாய்தல்மானி | gammeter | |
697. | சாய்மை வெட்டு அளவி | bias cutting gauge | |
698. | சாய்வளவி | inclined gauge | |
699. | சாய்வுக்குழாய் வளியழுத்தமானி | inclined-tube manometer | |
700. | சாய்வுக்கோணமானி | dipmeter | |
701. | சாய்வுமானி | inclinometer | சாய்வுமானி: விமானம் பறக்கும் உயரத்தைக் காட்டும் கருவி. விமானத்தின் முன்புற-பின்புற அச்சின் வழியாகச் செல்லும் செங்குத்துத்தளத்துடனான சாய்வினைக் காட்டுவதற்கேற்ப அல்லது கிடைமட்ட அச்சின் வழியாகச் செல்லும் செங்குத்துத் தளத்துடனான அல்லது இரு தளங்களுடனுமான சாய்வினைக் காட்டுவதற்கேற்ப சாய்வுமானியை முன்-பின்மானி, கிடைமட்டச் சாய்வுமானி, பொது நிலைச் சாய்வுமானி என வகைப்படுத்துவர்(-ம.358). [தொடர்பான பெயர்கள்: சாய்வூசி, பதனவூசி dip needle/ dipping needle/dip compass] |
702. | சாயமானி | crockmeter | துணிகள், தோல்கள் ஆகியவற்றின் சாய இழப்பை அளவிடும் கருவி. சாய மானி எனலாம். |
703. | சாயமிலி நிறமானி | saybolt chromometer | சாயம் ஏற்றப்படாத தாரை எரிபொருள், மண்ணெண்ணெய், கல்லெண்ணெய்மெழுகு,வெண்மருந்தெண்ணெய் முதலானவற்றின் நிறத்தை அளவிடும் கருவி. |
704. | சார்புக் காந்தமானி | relative magnetometer | |
705. | சிதறல்மானி | scatterometer | |
706. | துணுக்குமானி | nephelometer | கலங்கல்மானி (-ஐ.) என்பது சரியாக அமையாது; கலங்கல் மானி(turbidimeter) என மற்றொரு கருவி உள்ளதால் இங்கு வேறுகலைச்சொல்லே தேவை.
துகள் சிதறல் சார்புஅளவி(-இ.) இதனை அளவி வகையாகக் குறிப்பிடாமல்
சொற்சீர்மை கரதி மானி வகையாகக் குறிக்க வேண்டும். ஆனால், சிதறல்மானி
(scatterometer) என வேறு கருவி உள்ளது. நெபிலோமீட்டர் -நிற ஒளி அளவு மானி: தொங்கல் கரைசல்களின் செறிவினை, ஒளிச்சிதறல் மூலம் அளக்கும் கருவி. (-மூ.450) தொங்கல் செறிவு என்பதைவிட மிதக்கும் துணுக்குகள்(suspended particles)என்பதே இந்தக் கருவியின் பணியைக் குறிப்பிட ஏற்றதாக இருக்கும். பாய்மத்தில் குறிப்பாகக் கூழ்மத்தில் மிதக்கும் துணுக்குகளின் இயல்புகளை அளவிடப் பயன்படுவதால், துணுக்குமானி எனலாம். |
707. | சிதறிலிப் பிறழ்ச்சித் தொலைநோக்கி | baker-schmidt telescope | பிறழ்ச்சி தொலைநோக்கியின் ஒரு வகை. இதில், அண்மைக் கோளவுரு முதன்மை ஆடியில் இருந்து எதிரொளிக்கும் ஒளி மீண்டும் சிறிய இரண்டாம் ஆடியின் வழியாக எதிரொளித்துச் சிதறலும் திரிவும் அற்ற உருவத்தை (an image that is free of astigmatism and distortion) அளிக்கிறது. சிதறிலிப் பிறழ்ச்சித் தொலைநோக்கி எனலாம். |
708. | சிமிட்டு ஒளிமானி | flicker photometer | |
709. | சிறிய உச்சப் பாய்மமானி | mini peak flow meter | |
710. | நுண்ணளவளவி | micrometer gauge | சிறுதொலைவை அளவிடும் கருவி. [கடிகை டைமர் ( timer) எனப்படுவதால்,] நுண்ணளவிக் கடிகை (-இ.) என்பதை விட நுண்ணளவு அளவி > நுண்ணளவளவி எனலாம். |
711. | சிறுநீர்நாளநோக்கி | urethroscope | சிறுநீர்வடி குழாய் நோக்கி,
யூரித்ர உட்காட்டி, என்று சொல்லப்படுவதில் பின்னது கலப்புச் சொல். உடலுறுப்பைக் குழாய் என்பதைவிட நாளம் என்பதே சரியாகும். எனவே, சிறுநீர்நாளநோக்கி எனலாம். |
712. | சிறுநீர்ப்பை நோக்கி | cystoscope | சிறுநீர்ப்பையின் உட்புறத்தை ஆய்வதற்கான கருவி. |
713. | சிறுநீர்மானி | urinometer/ urogravimeter/urometer | சிறுநீர் அடர்த்தி மானி
சிறுநீர்மானி சிறுநீர் எடையளவி சிறுநீர் ஒப்படர்த்திமானி சிறுநீர் எடைத் திறமானி என வெவ்வேறாகக் கூறப்படும் சிறுநீர் ஒப்படர்த்திமானியைச் சுருக்கமாகச் சிறுநீர்மானி எனலாம். |
714. | சிறும வெப்பமானி | minimum thermometer | |
715. | சீராக்கித்திறன்மானி | trimmer potentiometer | |
716. | சுட்டாங்கல் ஈரஇழப்பு மானி | clay atmometer | நுண்துளைகளுடைய சுட்டாங்கல் கொள்கலன் கொண்ட ஈரஇழப்பு மானி. (சுட்டாங்கல் – பீங்கான்) |
717. | சுதைத்தகட்டு நுண்ணோக்கி | smith-baker microscope | ஒரு வகை குறுக்கீட்டு நுண்ணோக்கி. இதில் முனைவாக்கப்பட்ட ஒளிக்கீற்று கொண்மியின் முகப்பாடி (front lens of the condenser)யில் பிணைக்கப்பட்ட இருபக்கச் சிதறல் சுதைத்தகடு மூலம் பிரிக்கப்பட்டுப், பொருண்மியுடன் பிணைக்கப்பட்ட இது போன்ற தகடு மூலம் மீளிணைக்கப்படுகிறது. சுதைத்தகட்டு நுண்ணோக்கி எனலாம். |
718. | சுதைமானி | calcimeter | செயிபிலெர்(Scheibler) என்னும் அறிவியலர்
எலும்புத்தூளில் இருந்தும் பிற பொருளில் இருந்தும் உள்ள
சுதையத்தை(சுண்ணாம்பை) அளவிடுவதற்கு உருவாக்கிய கருவி.உடல்
பாய்மங்களில்(fluids) உள்ள சுதைய அளவை மதிப்பிடவும் உதவுவது. மண்ணில் உள்ள
சுதைய அளவை (சுண்ணாம்பினை) மதிப்பிடும் பொறியியல் கருவியாகவும்
விளங்குகிறது.
குருதி சுண்ண அளவி (-ஐ.) சுண்ணம் மண்ணளவி(-இ.) எனக் கூறுவது சரிதான். என்றாலும் ஆங்கிலத்தில் உள்ளதுபோல் பொதுவாகச் சுதைமானி எனலாம். |
719. | சுமையேற்ற அளவி | loading gauge | |
720. | சுருள் வெப்பமானி | spiral thermometer |
Sunday, February 1, 2015
கருவிகள் 1600 : 681-720: இலக்குவனார் திருவள்ளுவன்
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Blog Archive
-
▼
2015
(276)
-
▼
February
(34)
- தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு : 2 –...
- நாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி!
- தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!
- தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு : 1 –...
- கலைச்சொல் தெளிவோம்! 77. கொண்மூ-Cirrus
- கலைச்சொல் தெளிவோம்! 76. கணம்-Cirrostratus
- கலைச்சொல் தெளிவோம்! 75. செல்-Cirrocumulus
- செம்மொழி காத்த செம்மல் மா.கோபாலசாமி இரகுநாத இராசா...
- தமிழ்ப்பற்றுக்கு வழி வகுக்கும் விசய் தொலைக்காட்சி!
- கலைச்சொல் தெளிவோம்! 74. மை-Altostratus
- கலைச்சொல் தெளிவோம்! 73. கார்-Altrocumulus
- கலைச்சொல் தெளிவோம்! 72. விண்டு-Stratocumulus
- கலைச்சொல் தெளிவோம்! 71. முதிரம்-Cumulonimbus
- கலைச்சொல் தெளிவோம்! 70. மஞ்சு-cumulus
- கலைச்சொல் தெளிவோம்! 69. விசும்பு-stratus
- கலைச்சொல் தெளிவோம்! 68. எழிலி-nimbostratus
- மும்மணி யாண்டுகள்: மொழிப்போர் பொன்விழா, தமிழியக்க ...
- கலைச்சொல் தெளிவோம்! 67. மேலிழை/மெல்லிழை-lamination
- கலைச்சொல் தெளிவோம்! 66. விசைப்பி-switch
- கலைச்சொல் தெளிவோம்! 65.முடுக்கி-accelerator
- கருவிகள் 1600 : 961-1000 : இலக்குவனார் திருவள்ளுவன்
- கருவிகள் 1600 : 921-960 : இலக்குவனார் திருவள்ளுவன்
- கருவிகள் 1600 : 881-920 : இலக்குவனார் திருவள்ளுவன்
- கருவிகள் 1600 : 841-880 : இலக்குவனார் திருவள்ளுவன்
- கருவிகள் 1600 : 801-840 : இலக்குவனார் திருவள்ளுவன்
- கருவிகள் 1600 : 761-800: இலக்குவனார் திருவள்ளுவன்
- கலைச்சொல் தெளிவோம் 64. உருமாறி-ameaba
- கலைச்சொல் தெளிவோம் 63 : அடார்-trap
- கலைச்சொல் தெளிவோம் 62. அடர்-blade
- கலைச்சொல் தெளிவோம் 61. பெயர்வுக் காலம்-transit period
- கலைச்சொல் தெளிவோம் 60. ஒப்புமொழி-agreement ; ஒப்பு...
- கலைச்சொல் தெளிவோம் 59 : ஒடுக்குச் சீட்டு – tax rec...
- கருவிகள் 1600 : 721-760: இலக்குவனார் திருவள்ளுவன்
- கருவிகள் 1600 : 681-720: இலக்குவனார் திருவள்ளுவன்
-
▼
February
(34)
No comments:
Post a Comment