18: சூட்டடுப்பு–oven
அடுப்புஎன்னும் சொல்லைப் புலவர்கள் பின்வரும் இடங்களில் கையாண்டுள்ளனர்.
முரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி (பெரு 99)
ஆண்தலை அணங்கு அடுப்பின் (மது 29)
கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே! (பதி 18.6)
அடைஅடுப்பு அறியா அருவி ஆம்பல் (பதி 63.19)
உமண்சாத்து இறந்த ஒழிகல் அடுப்பில் (அக 119.8)
தீஇல் அடுப்பின் அரங்கம் போல (அக 137.11)
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ (அக 141.15)
உமண்உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின் (அக 159.4)
களிபடு குழிசிக்கல் அடுப்பு ஏற்றி (அக 393.14)
முடித்தலை அடுப்பு ஆக (புற 8)
ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின் (புற 164.1)
பொருந்தாத் தெவ்வர் அரிந்தலை அடுப்பின் (புற 372.5)
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை (புறநானூறு 228:3)
எனவே, அவென் (oven) என்பதற்கு அப்பொருளிலான சொல்லைக் கையாளுவது நன்றன்று.
ஆதலின்,
அடுப்பு – stove
சூட்டடுப்பு–oven
சூளை- kiln
எனக்குறிக்கலாம்.
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment