(குஞ்சு)பொரித்தல்-hatch/hatching(வேளா.,பயி.,மனை.,கால்.); fry/frying(கால்., மனை., வேளா., வங்., மீனி., தக.); puff(மனை.);
வறுத்தல்-fry/frying(மனை.,கால்.); roasting (புவி., மனை., கால்., தக., வேதி., வேளா.)
என்று அடைகாத்துக் குஞ்சுபொரித்தல்,
வாணலியிலிட்டு வறுத்தல், தீயிலிட்டு வாட்டுதல், என ஒரே சொல்லையே
வெவ்வேறுவகைக்குக் குறிப்பிடுகின்றனர்.
கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு (நற்றிணை367.3)
[கரிய கண்ணையுடைய கிழங்கின் பொரிக்கறியோடு கூடிய செந்நெல் அரிசியாலாக்கிய வெளிய சோற்றுத்திரளை]
பசுங்கண்கருனைச்சூட்டொடுமாந்தி (புறநானூறு : 395.37)
உண்
மண்டையகண்டமான்வறைக்கருனை, (புறநானூறு : 398.23-24)
பரல்வறைக் கருனை, காடியின் மிதப்ப ( பொருநர் ஆற்றுப்படை: 115)
பொரி்த்த கறி வகை போல் மற்றோர் உணவுவகை அணலில் வாட்டி உண்பதாகும்.
மனைவாழ்அளகின்வாட்டொடும்பெறுகுவிர்
(பெரும்பாண்ஆற்றுப்படை :256) [மனையின்கண்வாழும் பெட்டைக்கோழியின் இறைச்சி]
இவற்றின் அடிப்படையில் அணலில் வாட்டித்தரப்படும் இறைச்சியை
வாட்டூன்எனலாம். வறுக்கப்படும் மரக்கறிவகைகளை பொரிக்கறி, வறுகறி என்றும்
இறைச்சி வகைகளை வாட்டூன், சூட்டூன் என்றும் வேறுபடுத்தலாம்.
குஞ்சுபொரித்தல் – hatch / hatching
கருனை – fry / frying
கருனைச்சோறு – fried rice
கருனைமீன் – fried fish
கருனைக்கோழி – fried chicken
நிணக்கருனை – shallow fat frying
வாட்டூன் – fried mutton / chicken
பொதிபொரி – puff
வறுகறி – roasted foods
வறுவல் – chips
பொரிக்கறி – frying vegetables
சூட்டூன் – broiled meat
No comments:
Post a Comment