Sunday, December 21, 2014

கலைச்சொல் தெளிவோம் 9 : கோளி – cryptogam


kalaicho,_thelivoam01

kolili-cryptogams01 

கோளி (பூவிலி) –cryptogam


சங்கஇலக்கியங்களில் உள்ள பயிரியல் செய்திகள் போல் வேறு எந்த அறிவியல் நூல்களிலும் காணஇயலாது. வேர், தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி, முதலான பல உறுப்புகளின் வடிவம் தன்மை, முதலான பலவும்  தெரிவிக்கப்பட்டு  உள்ளன.
இலக்கியம் கூறும் அறிவியல் செய்திகளே மிகுதியாக உள்ளன எனில் உரிய அறிவியல் நூல்களில் மேலும் கணக்கற்ற உண்மைகள் அல்லவா இருந்திருக்கும். ஆல், அத்தி, பலா முதலான பூவாமல் காய்க்கும் மரங்ககளைப் பற்றிச் சங்கநூல்கள் குறிப்பிட்டுள்ளன. சங்கநூல்கள் பூக்காத் தாவரங்களைக் கோளி எனக் குறிப்பிடுகின்றன.

கொழுமென் சினைய கோளியுள்ளும்   (பெருமபாணாற்றுப்படை 407)
முழுமுதல் தொலைத்த கோளிஆலத்து (புறநானூறு 58.2)
முன்ஊர்ப் பழுனிய கோளிஆலத்து (புறநானூறு 254.7)
கோடுபல முரஞ்சிய கோளிஆலத்து (மலைபடுகடாம் 268)
என்பன பூவிலி ஆகிய பூக்காத் தாவரங்களைக் குறிப்பிடும் சங்கப்பாடலடிகள் ஆகும். இதுபோல் பிற சொற்களைக் கண்டறிய வேண்டும். எனினும்,
 பூ(600), பூஉண்டு(1), பூக்க(1), பூக்குந்து(2), பூக்கும்(6), பூத்த(54),பூத்தலை(1), பூத்தல்(3), பூத்தன்று(2), பூத்தன(2), பூத்தனள்(2), பூத்தி(1),பூத்து(9),பூப்ப(13), பூப்பின்(1), சூல்(48), சூலி(1), வெற்று(1), வித்தி(9), வித்திய(11), வித்தியது(1), வித்து(8), விததுந(1), வித்துபு(1), வித்தும்(3), தண்டு(14), பாசி(11), நுண்(152), நுண்ணிதின்(9),  நுண்ணியது (1), நுண்ணியை(1), நுண்மைய(1), கோல்(153), கோள்(105), கோளி(4), சுருள்(1), முதலான சங்கச்சொற்களின் அடிப்படையில் நாம் பின்வருமாறு கலைச்சொற்களைப் படைக்கலாம்.

கோளி (பூவிலி) –cryptogam
பூப்பன-banerogams
வெற்றுச்சூலிகள்-gymnosperms
விதைச்சூலிகள்-angiosperms
தண்டகி (தண்டுடையன)-thallophyta
மாசிகள்-bryophyta
பாசி- alga
பாசிகள்-Algae
வித்திலி – pteridophyta
வித்தி-spermatophyta
நுண்ணி-bacteria
நுண்கோளி-coccus
நுண்கோளிகள்-cocci
கோலி(கோல்நுண்ணி) – bacillus
சுருளி (சுருள்நுண்ணி)-spirilli
பூஞ்சைகள்-fungi
பூக்குந் தாவரம் -banerogam
மாசி வித்திலி(பெரணி) -pteridophyta


No comments:

Post a Comment

Followers

Blog Archive