பெண்ணுரிமைக் காவலர்
பேராசிரியர் இலக்குவனார்
மகன் என்னும் சொல்லைத்
தெய்வப்புலவர்திருவள்ளுவர் கையாளும் இடங்களில் மகளைப் புறக்கணித்து
மகனைமட்டுமேஉயர்த்தும் வகையில் அவர் எழுதியுள்ளதாகப்
பலரும்தவறானவிளக்கங்கள்அளித்துள்ளனர். இவற்றை மறுத்து மகன் எனக்
குறிப்பிடும் இடங்கள் மகளுக்கும்பொருந்துவதைப் பேராசிரியர் விளக்குகிறார்.
சான்றோன் எனக் கேட்ட தாய்,
தந்தைமகற்காற்றும் நன்றி, மகன் தந்தைக்காற்றும் உதவி, கொழுநன்
தொழுதெழுவாள்முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய
அக்காலச்சூழலையும் திருவள்ளுவர் கருத்தையும் நன்கு விளக்கி யுள்ளார்.
இவ்வாறுபெண்களும் ஆண்களும் இணை என்ற பழந்தமிழ்நெறிக்கு மாறான பிறரின்
விளக்கங்களுக்குப் பேராசிரியர் தந்துள்ள மறுப்புகள் அனைவரும்
படித்தறிந்துபின்பற்ற வேண்டியன வாகும்.
பெற்றோர் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையாக,
‘தந்தை மகற்குஆற்றுநன்றிஅவையத்து
முந்தி இருப்பச் செயல்’ (திருக்குறள் 67)
என்கிறார் உலகப் புலவர்
திருவள்ளுவர்.பரிமேலழகர் வழியில் மொழிஞாயிறு பாவாணரும் மகனுக்குத் தந்தை
செய்ய வேண்டியகடமையாகத்தான் கருதுகிறார். ஆண்மகவையும் பெண்மகவையும் இணையாக
எண்ணாதது ஏன்என்று தெரியவில்லை. ஆனால், குறள்நெறி அறிஞர் பேராசிரியர்
இலக்குவனார், வேறுபா டின்றிப் பின்வருமாறு விளக்கம் தருகிறார்:
‘மகற்கு’ என்று கூறினாலும் ‘மகளும்’ அடங்கு
வர். தந்தை தம் குழந்தைகட்கு நற்கல்வியை அளித்து எங்குச்
செல்லினும்எவருக்கும் முற்பட்ட நிலையில் இருக்குமாறு செய்தல் வேண்டும்; அவை
கூடும்இடங்களில் அவையின் பின் இருக்கைகளில் அமராமல், முன் இருக்கைகளில்
அமரும்தகுதியைக் குழந்தை கட்கு உண்டாக்க வேண்டும். இக்குறட்பா
வாயிலாகப்பெற்றோரின் கடன் வலியுறுத் தப்பட்டுள்ளது.’தந்தை மகனுக்குச் செய்ய
வேண்டியகடமையாகச் சொல்லாமல் தந்தை, தாய் ஆகிய பெற்றோர் மகன், மகளாகிய
தம்மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையாகப் பேராசிரியர்
விளக்கியுள்ளதுஎந்நாட்டவருக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது.
ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தாய்
(திருக்குறள் 69) குறித்துப் பரிமேலழகர், பெண் இயல்பாய்அறியாமை
மிகுந்தவள்எனத் தவறாக விளக்கியுள்ளார். பேராசிரியர், இதனை மறுத்து,
‘‘பட்டங்கள்பெறுவோம்; சட்டங்கள் செய்வோம்; பாரில் எமக்கு ஈடில்லை’ என்று
கூறும்இக்காலத்துக்கு அவர் கூற்றுப் பொருந்தாது. எக்காலத்துக்கும்
பொருந்தாது.திருவள்ளுவரும் அவ்வாறு கருதிக் கூறினாரிலர். பரிமேலழகர்
பெண்ணறிவைப்போற்றாது தவறாக உரைகூறி விட்டார்’’என விளக்கி யுள்ளார்.
பெண்மைக்கு எதிராக எங்கு களைதோன்றி
னாலும்அதனைக் களையும் காவலராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். எனவேதான்
கல்விஆண் பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார்.இதனை
‘அறிவறிந்த மக்கட்பேறு (குறள் 71) என்பதை விளக்கும்பொழுதும்
பின்வருமாறுவெளிப் படுத்துகிறார்: ‘‘பரிமேலழகர் ‘அறிய வேண்டு வனவற்றை
அறிதற்குரிய’ எனப் பொருள் உரைத்ததும், ‘அறிவறிந்த என்றதானால் மக்கள்
என்னும் பெயர்பெண்ணொழித்து நின்றது’ என்றதும் பொருத்தமில்கூற்றேயாகும்.
மக்களாய்ப்பிறப்போர் அனைவரும் ‘அறிதற்குரியர்’தாம். அறிதற்குரியோருள்தான்
சிலர்அறிவுடையோராகவும் சிலர் அறிவற்ற வராகவும் வளர்ந்து விடுகின்றனர்.
அறிவறிந்தவர்தாம் செல்வமாகக் கருதற்குரியர். மக்கள் ஆண் பெண்
இருபாலார்க்கும்உரியசொல். பெண் ஒழித்து நிற்பதற்குக் காரணம் பெண்கள் அறிய
மாட்டாதவர்கள்என்னும் தவறான கருத்தேயாகும்
பெண்களும்ஆண்களைப்போன்றுஅறியும்ஆற்றல்உடையவர்களே என்பது வரலாறு உணர்த்தும்
உண்மையாகும்.’’
கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்
(திருக்குறள் 54) என்பதை விளக்கும் பொழுது, ‘இருபாலாரிடத்தினும் கற்பு
நிலைபெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்’எனக்
கற்புநெறிஇருவருக்கும் பொதுவே என்னும் தமிழர் நெறியை
விளக்குகிறார்.பெய்யெனப்பெய்யும் மழை (திருக்குறள் 55) என்பதை விளக்கும்
பொழுது, ‘நஞ்சுண்டவன்சாவான்’ என்றால், ‘நஞ்சுண்ட வளும் சாவாள்’ என்பது
வெள்ளிடைமாலை. ‘திருடிவயவன் ஒறுக்கப்படுவான்’ என்றால், ‘திருடியவளும்
ஒறுக்கப்படுவாள்’ என்பது தானே போதரும். அவ்வாறே இவ்விடத்தும் கருதுதல்
வேண்டும். “தெய்வம்தொழாஅன் மனை விதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும்
மழை” என்பதும்கொள்ளப்படல் வேண்டும்’’ என இரு சாரார்க்கும் பொதுவான விளக்கம்
நல்குகிறார்.
- தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்
ஆசிரியர் :இலக்குவனார் திருவள்ளுவன்
வெளியீடு: கோவை ஞானியின் தமிழ்நேயம் 49
No comments:
Post a Comment