8.] மலையியல் கலைச் சொற்கள்
மலை தொடர்பான நாற்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன.
குறிஞ்சித்திணைப் பாடல்களில் இவை
காணப்படுவதால் புவியியல், மலையியல் என்பன போன்று குறிஞ்சியியல் என்றே நாம்
தனியியல் கண்டு பல கலைச்சொற்களைப் புதுப்பிக்க இயலும்.
சங்கச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச்
சொற்களையோ பிறமொழிச்சொற்களையோ நாம் காண இயலாது. சான்றாக எதிரரொலிக்கும
மலையைச் சிலம்பு என்றனர். ஆனால், அத்தகைய வகைப்பாடு பிற மொழியாளரிடம்
இல்லாததால் நாம் பொருள் விளக்கம்தான் அளிக்க இயலும். பின்வரும் சொல்
ஒவ்வொன்றுமே கலைச்சொல் என்பதை உணர்ந்து உரிய துறை ஆசிரியர்கள் இவற்றைப்
பயன்படுத்தி நூல்கள் எழுத வேண்டும்.
அடுக்கம் (range) (72),அடுக்கல் (range) (5),
அருப்பம் (small hill) (13),
அரைமலை (Middle of a mountain slope) (1),
அறை (huge rock) (78),
அறைவாய் (mountain pass) (1),
இகுப்பம் (large boulders, hillock) (1),
இறும்பு (foothill) (21),
ஏகல்(high hill) (3),
ஓங்கல் (mountain top) (13),
கடறு (mountain slopes) (9),
கது (mountain cleft)(8),
கல்(rock) (245),
கல்லளை (mountain caves) (3),
கவாஅன் (slopes) (32),
கன்முழை (mountain cavern)(1),
கிழிப்பு (mountain cleft) (1),
குடுமி(Summit or peak of a mountain ) (26),
குவடு(Hillock ) (1),
குன்று ( mountain) (180),
கோடு(Summit of a hill ),(hill) (167),
சாரல் (mountain slopes)(99),
சிகரம் (peak)(1),
சிமையம் (peak) (2),
சிலம்பு(mountain which has resound or echo) (128),
சென்னி (peak) (44),
நவிரம் (peak) (2),
பிளப்பு (mountain cleft) ,
பிறங்கல்(hillock ) (20),
பெருங்கல்(rock ) (28),
பொறை(small hill) (51),
மலை(mountain) (337),
முகடு (peak) (5),
முகை(mountain cave) (134),
வசி (mountain cleft) (8),
வரை(big mountain) (379),
விடர் (mountain cleft) (33),
விடரகம் (mountain caves) (29),
விடரளை (Cleft in a mountain cave) (1),
விண்டு (mountain) (8),
விலங்கல் (blocking mountain) (3)
வெற்பு (hill) (20),
முதலானவை அனைததும் மலையியல் கலைச் சொற்களே.
No comments:
Post a Comment