3.] சங்க இலக்கியச் சொல்லடைவு
இதில் தேடுபொறி இல்லை. அகரவரிசைப்படி நாம்
சொல்லைத் தேடுவதற்கு மாற்றாகச் சொல் தேடுதல் அமைந்தால் எளிதில் பொருள்காண
இயலும். நேரம் வீணாவது தடுக்கப்படும். நூற்பக்கங்களில் பக்க எண் தேடல்
உள்ளது.
4.] திருக்குறட் சொல்லடைவு
‘திருக்குறட் சொல்லடைவு சொல் தேடல்’
என்னும் தலைப்பு உள்ளது. இதன் மூலம் அகரவரிசையிலான முழுப் பக்கங்களைத்தான்
காண இயலும்(பட உரு 20). வேண்டும் சொல்லுக்கான பொருளை எளிதில் காண இயலாது.
ஆனால், இதில் பக்க எண் அடிப்படையில் மட்டுமே தேட முடியும். ஒரு சொல்லைத்
தேடுபவர்க்கு அதன் பக்க எண் எப்படி அறியலாகும்? இதன் பயன் என்ன?
சொற்பட்டியல் படி வரிசையாகப் பார்ப்பது தேடுபொறியின் பயன்போல் அமையாதே!
5.1. தொல்காப்பிய மூல நூற்பாப் பகுதியில் தேடுதல் பொறி இல்லை (பட உரு 21).
5.2. இப்பகுதியில் ‘உரை’ என்பதைச் சொடுக்கி உரை காண இயலும். அங்கும் தேடுதல் பொறி இல்லை(பட உரு 22).
5.3. மாறாக அட்டவணை வாயிலாக உரைப்பகுதிக்குச் சென்றால் மட்டும் அப்பகுதியில் தேடுதல் பகுதி உள்ளது. அங்கே சென்றால்,
பக்கம் தேடல்
சொல் தேடல்
என உள்ளன(படவுருக்கள் 23 & 24).
ஆனால், இந்த வாய்ப்பு உள்ளது
வெளிப்படையாகத் தெரியாமல் என்ன பயன் விளையப் போகிறது? உரைப்பகுதிக்குச்
செல்லும் பொழுதுதானே இவ்வாய்ப்பு இருப்பதை அறிய முடியும். தொல்காப்பிய
முகப்புப் பக்கத்தில் உள்ள அட்டவணையில் குறிக்கப் பெறாமையால், இதனைப்
பலரும் அறிய மாட்டார்கள் அல்லவா? மூலப்பகுதியிலேயே உரையையும் படிப்பவர்கள்
எதற்குத் தனியாக உரைப்பகுதிக்குச் செல்லப் போகிறார்கள்?
தான் தரும் தேடுதல் வாய்ப்பையும்கூட
அனைவரும் அறிந்து எளிதில் பயன்படுத்தும் வண்ணம் அமைக்காத குறைபாட்டைக்கூட
உணர முடியாத நிலையில்தான் தஇகக இயங்குகிறது என்பது வருத்தத்திற்கு
உரியதல்லவா?
5.4. உரைநூல் தெரிவு: தொல்காப்பியம் முகப்பு அட்டவணைப் பகுதியில் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் கீழ் உரைநூல் தெரிவு உள்ளது(படவுருக்கள் 25, 26 &27).
5.5. அதே நேரம் அட்டவணையின் இறுதியிலும் உரைநூல்கள் தெரிவு உள்ளது பட உரு 28).”நூற்பதிவில் இல்லாதனவும் தெரிவதில்லை! இருப்பனவும் தெரிவதில்லை!” என்னும் அறியா நிலையால் மீளவும் இடம் பெற்றுள்ளது.
6.] புறப்பொருள் வெண்பாமாலை
இதிலும் மூலப்பகுதியிலும் மூலப்பகுதியில் தரப்படும் உரைப்பகுதியிலும் தேடுதல் பொறி இல்லை. பொருளடக்கப் பகுதியில், பொதுவாகத் தொடக்கம் என்று அமையக் கூடிய மேல்தலைப்பில் தேடுதல் உள்ளது. ஆனால், நூற்பக்கங்கள் சென்றால் பக்கத் தேடுதல் மட்டுமே உள்ளது. சொல் தேடுதல் இல்லை. உரைப்பகுதிக்கு எனத் தனியாகச் சென்றால் மட்டுமே பக்கத் தேடுதலுடன் சொல் தேடலும் உள்ளது.
சூத்திர முதற் குறிப்பகராதி
துறையகராதி
இடம் விளங்கா மேற்கோள்கள்
கொளுவின் முதற்குறிப்பகராதி
வெண்பா முதலியவற்றின் முதற்குறிப்பகராதி
அரும்பத முதலியவற்றின் அகராதி
முதலிய அகராதிப் பக்கங்களிலும் தேடுதல் பகுதி இல்லை.
கமுக்கமாகச் சொல் தேடுதல் பகுதியை
அமைப்பதன் காரணம் தெரியவில்லை. முதலில் மூலம் மட்டும் வெளியிட்டுப் பின்னர்
உரைப்பகுதியைச் சேர்க்கையில் சொல் தேடுதலை அமைத்திருக்கலாம். அப்பொழுது
நூல் முழுமைக்கும் சொல் தேடுதல் தேவை என்ற உணர்வு எழாமல் போனது
வருந்தத்தக்கதே!
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment