அன்றே சொன்னார்கள் - 1
தென்புலத்தாரைக் காப்பாற்றுவோம்!
தெய்வப்புலவர் திருவள்ளுவர் மொழி அல்லது இனம் அல்லது வேறு எப்பிரிவையும் அடையாளம் காட்டாமல் உலகிற்கே பொதுவாகத் திருக்குறளை நமக்குத் தந்துள்ளார். எனினும் உலக முதல் இனம் என்ற வகையில் தமிழினத்தைப் போற்ற வேண்டிய கடமையை நமக்கு அவர் அளித்துள்ளார். இல்லறத்தார் கடமை எனக் கூறும்பொழுது அவர்,தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
என்கிறார்.
இல்லறத்தார் கடமைகளில் முதலாவதாகத் தென்புலத்தாரைப் போற்ற வேண்டும் என்கிறார். உலகத்தையே ஒரு குடும்பமாகக் கருதி வாழ்ந்த தமிழர் தம் பகுதியினரைப் போற்றாது பிற பகுதியினரைப் போற்றியது கண்டு தெய்வப்புலவர் உள்ளம் நொந்து நாட்டுப்பற்றுதலை வலியுறுத்தி இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பார் செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார்.
மற்றொரு காரணமும் உண்டு. பல்வேறு கடல்கோள்களால் (ஆழிப்பேரலை எனப்படும் சுனாமியால்) தென்மக்கள் அழிந்ததால் வருந்திய தெய்வப்புலவர் மூத்த முதல் இனமான தமிழினத்தில் எஞ்சியவர்களையாவது போற்றிக் காக்க வேண்டும் என்று அவர் கருதியதே.
இயற்கையால் தமிழினம் அழிந்தது போக நம் மொழிக் கொலையாலும் தமிழினம் அழிந்தது. அதுபோக பொல்லா அரசுகளின் பொறுப்பற்ற போக்கால் தென்திசையில் உள்ள ஈழத்தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துடன் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியிருப்போரையாவது நாம் காப்பாற்ற வேண்டாவா? தென்புலத்தில் வாழும் அவர்களை நலிவிலிருந்து காப்பாற்றி உரிமையுள்ள தங்களின் அரசில் அமைதியாகவும் நலமாகவும் வாழ வழி செய்ய வேண்டாமா?
தெய்வப்புலவர் கட்டளைக்கிணங்கத் தென்புலத்தாரைக் காப்போற்றுவோம் என உறுதி கொள்வோம்!
தெய்வப்புலவர் கட்டளைக்கிணங்கத் தென்புலத்தாரைக் காப்போற்றுவோம் என உறுதி கொள்வோம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment