>>அன்றே சொன்னார்கள்
அன்றே சொன்னார்கள்
தாழிமரம் அறிவோமா?
நம் நிலப்பகுதி முழுவதும் தமிழ்நாடாக இருந்த பொழுது இம்முறை தோன்றியிருக்கலாம்.
தாழிமுதல் கலித்த கோழிலைப் பருத்தி
(அகநானூறு 129.7 ) எனத் தாழியில் வளர்ந்துள்ள கொழுவிய இலையையுடைய பருத்தியைப் பற்றிக் குடவாயில் கீரத்தனார் என்னும் புலவர் கூறுகிறார்.
தலைவியைக் காணாமல் தாழியில் வளர்த்த குவளைச் செடியின் மலர் வாடியது குறித்துத்
தாழிக்குவளை வாடுமலர்
என அகநானூறு (165.11) கூறுகிறது.
கொடிவகைகளை உயரமான தாழியில் வளர்த்துள்ளனர் என்பது
ஓங்கும்நிலைத் தாழி மல்கச் சார்த்தி
குடைஅடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை பந்துஎறிந்து ஆடி
எனப் புலவர் கயமனார் கூறுவதில் இருந்து (அகநானூறு 275:1-3) அறியலாம்.
உயர்ந்த தாழியில் நிறைய வைத்துப் பனங்குடையால் நீரை மொண்டு ஊற்றி வளர்த்த வயலைக்கொடி படர்ந்த பந்தலின் கீழே பந்தை எறிந்து ஆடுவது குறித்து இதில் கூறப்பட்டுள்ளது.
நீர்வளம் இல்லாத பாலை நிலைத்தில் இவ்வாறு தாழியில் மண் இட்டு நீர் வார்த்துச் செடியை வளர்த்துள்ளனர்.
தோட்டவியலில் சிறந்திருந்த தமிழர் பானை அல்லது தாழியில் செடி வளர்க்கும் முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினர் எனலாம்.
- இலக்குவனார் திருவள்ளுவன்
Comments
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment