(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 6 தொடர்ச்சி)

                      கலித்தொகை 149 : 6  7

 கலித்தொகை  நெய்தற் கலி
 பாடியவர்  நல்லந்துவனார்
 திணை  மருதம்
 கி.முகாலத்துப் பாடல்

ஒற்கம் என்றால் வறுமைதான் வறுமையுற்றபோது அத்துன்பம் நீக்க உதவியவருக்கு அவருக்குத் துன்பம் வரும்பொழுது அத்துன்பத்தைத் துடைக்க முன்வந்து உதவ வேண்டும்அவ்வாறு உதவாதவன் செல்வம் கெட்டுத் துன்பத்திற்கு ஆளாவான்.

அவன் மட்டுமல்ல அவனுக்கு எஞ்சி நிற்கும் வழிமுறையினருக்கும் கேடு வரும்.

அவன் மணமாகாதவனாகவோமணமாகியும் மகப்பேறு இல்லாதவனாகவோ இருந்தால் எப்படித் தீங்கு நேரும் என எண்ணலாம்.

அவன் மரணத்திற்குப் பின் எஞ்சி நிற்கும் நற்பெயர்புகழ் முதலானவற்றிற்கும் கேடு ஏற்படும்ஆதலின் உனக்கு உதவியவர்க்கு நீ உதவு என்கிறார் புலவர் நல்லந்துவனார்.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் செய்ந்நன்றியறிதல் எனத் தனி ஓர் அதிகாரமே வைத்துள்ளார்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (திருக்குறள்௱௰  110)

என்கிறார் திருவள்ளுவர்.

எத்தகைய அறக்கேடு புரிந்தாலும் தப்பிப் பிழைக்க வழியுண்டுஆனால்ஒருவர் செய்த உதவியை மறந்து தீங்கிழைத்தவனுக்கு அதனால் வரும் அழிவிலிருந்து தப்பிப் பிழைக்க வழியில்லை என்கிறார்.

இப்பாடலில் அடுக்கடுக்காகச் செல்வம் தேய்வதற்கான காரணங்களைப் புலவர் நல்லந்துவனார் கூறியிருப்பார்அதனைப் பின்னர்ப் பார்ப்போம்.

இப்பாடலடிகள் மூலம் புலவர் நல்லந்துவனார் நமக்கு உணர்த்துவது என்ன?

பிறருக்குக் கைம்மாறு கருதாமல் உதவவேண்டியது நம் கடமைஒருவேளை அதற்கான வாய்ப்பு இல்லாமல் போகலாம்.

ஆனால்நமக்குத் துன்பம் துடைத்தூன்றும் தூணாக இருந்தவருக்கு உதவி தேவைப்படும் பொழுது நாம் விரைந்து சென்று உதவ வேண்டும் என்கிறார்.

அத்தகைய நற்செயல் புரியாதவன் தீமைக்குள் ஆழ்ந்து அழிந்துபோவான் என எச்சரிக்கவே இப்பாடலை வழங்கியுள்ளார்.

தாய் மின்னிதழ் 04.04.2025