201. ஈய இதழ் மின்னோக்கி – aluminum leaf electroscope / wilson electroscope
202. ஈய இலை மின்னோக்கி – aluminum leaf electroscope
203. ஈர்-மானி – g-meter : ஈர்ப்பு மானி > ஈர் மானி; சுருக்கமாக ஈ-மானி என்றால் ‘ஈ ‘ என்னும் உயிரியுடன் தொடர்புபடுத்தப்பட்டுத் தவறான பொருள் வரும்.
204. ஈர்ப்பளவி – suction gauge
205. ஈர்ப்பு உலவைமானி – suction anemometer
206. ஈர்ப்புமானி / எடைமானி – gravimeter : நீர்ம அல்லது திடப்பொருளின் புவிஈர்ப்பை வரையறுப்பதற்கான அளவுக் கருவி. பொறியியல் துறையில் எடைமானியும் கிராவிமீட்டர்(gravimeter) எனப்படுகின்றது.
207. ஈர – உலர்க்குமிழ் ஈரமானிwet – dry bulb hygrometer ஈரமுள்ளீரமில்குமிழீரமானி(ஐ) எளிமை கருதி ஈர – உலர்க்குமிழ் ஈரமானி எனலாம்.
208. ஈர – உலர்க்குமிழ் வெப்பமானி : wet and dry bulb thermometer
209. ஈர நோக்கி hygroscope வளிமண்டில ஈரநிலை நோக்க உதவுங் கருவி . ஈரப்பதங்காட்டி, ஈரங்காட்டி என இருவகையாகக் குறிப்பிடுகின்றனர். சொற்சீர்மை கருதி ஈர நோக்கி எனலாம்.
210. ஈர வெப்பவரைவி – hygrothermograph : வெப்பநிலையையும் தொடர்புடைய ஈரப்பதத்தையும் பதியும் வரைகருவி. ஈர வெப்ப வரைவி எனலாம்.
211. ஈரக்குமிழ் வெப்பமானி – wet-bulb thermometer
212. ஈரப்பதமானி – moisture meter
213. ஈரமானி – hygrometer ஈரநிலை அளக்கும் கருவி. ஈரப்பதமானி, ஈரப்பத அளவி, ஈர அளவுமானி, ஈரப்பத அளவைக்கருவி,
ஈரப்பதன் அளவி, ஈரமானி, காற்று ஈரஅளவி, சூழல் நப்பு மானி எனப் பலவகையாகக்
கூறப்படுவனவற்றுள் ஈரமானி என்பதே ஈரநிலை அளக்கும் கருவிக்கு சுருக்கமான
ஏற்ற சொல்லாக உள்ளது.
214. ஈரவரைவி – hygrograph : சூழ்மண்டிலத்திலுள்ள ஈரப்பத மாறுபாடுகளைப் பதிய உதவுவது.215. ஈரிழை ஈர்ப்புமானி – bifilar gravimeter இருநூலீர்ப்புமானி (-ஐ.), இருநூலிழை ஈர்ப்புமானி (-இ.), இருபடல ஈர்ப்புமானி எனக் கூறுகின்றனர். சுருக்கமாக ஈரிழை ஈர்ப்புமானி எனலாம்.
216. ஈரிழை மின்மானி – wulff electrometer
217. உச்ச மின்வலி மானி – crest voltmeter
218. உச்சத் தொலைநோக்கி – zenith telescope
219. உட்குவி தொலைநோக்கி – internal focusing telescope
220. உட்குழி கதிரி – cavity radiator
221. உட்குழி நிகழ்வெண் மானி – cavity frequency meter
222. உடல் வெப்பமானி / மருத்துவ வெப்பமானி – clinical thermometer
223. உடல்மாற்ற வரைவி – plethysmograph : குருதி ஓட்டத்தால் உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களை அளவிடும் கருவி
224. உடல்மானி – Anthropometer : உடலளவுமானி < உடல்மானி
225. உடலிய வேதிய வெப்பமானி – physiochemical thermometer: இயற்பியல் வேதியியல் வெப்பமானி ( -இ.) எனச்சொல்லப்படுகிறது. உடலிய வேதிய வெப்பமானி எனலாம்.
226. உடனிலைத் தொலைநோக்கி – guiding telescope : இணை தொலைநோக்கி(-இ.),
வழிப்படுத்து தொலைநோக்கி(-இ.) எனக் குறிக்கப் பெறுகின்றன. ஒளிப்படத்
தொலைநோக்கியுடன் இணைந்து உடன் செயல்படுவதால், இவ்வாறு கூறுகின்றனர்.
எனினும், உடனிலைத் தொலைநோக்கி என்றால் பொருத்தமாக அமையும்.
227. உணக்க மானி – psychrometer : ஈர உணக்கவெப்பமானி : ஈரக்குமிழுடன் ஈரநீக்கிய குமிழும் உடைய வெப்பமானி வகை(-செ.). சுருக்கமாக உணக்க மானி எனலாம்.228. உணர் வெப்பமானி – sensitive thermometer
229. உணர்வுமானி – sensitometer : பதிவுமானி : நிழற்படத் தகடுகள் வகையில் பதிவுதிற நுட்பமானி(-செ.).;
உணர்வுஅளவி (-இ.)உணர்வு என்பது இங்கே ஒளி வெளிப்பாட்டுப்
படிநிலைகளில்(graduated series of exposure to light) நிறமாலையின்
தரம்,செறிவு, காலம் ஆகியவற்றினைக் கட்டுப்படுத்தும் நுண்ணிய பதிவளவையே
குறிக்கிறது.பதிவுமானி என்பது சரியாக இருந்தாலும்,
சென்சிட்டிவ்வு(sensitive) என்பதை உணர்வு நோக்கி்ல் உணர்பவர்களுக்குத்
தவறான சொல்லாட்சியாகத் தோன்றலாம். எனவே பழகுபொருள் கொண்டு உணர்வுமானி
எனலாம்
230. உணரிழையளவி – feeler gauge231. உணவுக்குழல் நோக்கி – oesophagoscope
232. உந்தல்மானி – thrust meter : தாரை, ஏவுகணை முதலானவற்றை முற்தள்ளும் உந்தல் திறனை அளவிடும் கருவி. உந்தல்மானி எனலாம்.
233. உந்தியளவி – piston gauge : உந்துதற்குதவும் தண்டு அல்லது கோல் என்பதைச் சுருக்கமாக உந்தி எனலாம். உந்தியை அளவிடும் கருவி.
234. உந்திமானி – piston meter
235. உந்திப் பாகுமைமானி – piston viscometer : இடி(pound)
என்னும் பொருள் கொண்ட மூலச் சொல்லில் (pestare) இருந்து பிறந்ததே பிசுடன்/
piston என்னும் சொல்லாகும். இதனை உந்து தண்டு என்கின்றனர். சுருக்கமாக
உந்தி எனலாம். உந்தி என்பதற்கு வயிறு முதலான வேறு பொருள்கள் உள்ளன. எனினும்
பொறியியல் கலைச்சொல்லாக உந்தி என்பதை இந்த இடத்தில் பயன்படுத்தலாம்.
236. உந்துகை காந்தமானி – ballistic magnetometer237. உந்துகை மின்கடவுமானி – ballistic galvanometer
238. உந்துவிசை நோக்கி – chronoscopeஉந்து
விசைப்பொறிகளின் விசை அளக்கும் பொறியமைவு. உந்துவிசைமானி (-செ.)
என்பதைவிடச் சீர்மை அடிப்படையில் உந்துவிசை நோக்கி என்பதே பொருந்தும். (2.
காலக்கூறுநோக்கி)
239. உப்பு இருப்புமானி – salimeter
240. உப்புத் திசைப்புமானி – salt velocity meter
(பெருகும்)
No comments:
Post a Comment