321. எதிர்முனைக்கதிர் மின்வலி மானி – cathode-ray voltmeter
322. எதிர்வினைப்பு மானி – reactive meter
323. எதிரிருமடி ஒளிமானி – jollys photometer : எதிர் இருமடி விதி (Inverse-square law) யின் அடிப்படை யில் உருவாக்கப்பட்ட ஒளிமானி.
324. எதிருரு நோக்கி – stratton pseudoscope : முப்பருமான நோக்கியில் ஒரு வகை. இதிலுள்ள கண்ணாடிகள், வல, இடப் பார்வைகளைத் தலைகீழ் முறையில் காட்டும்.
325. எதிரொலிமானி – echometer
326. எதிரொளி விகித மானி – glossimeter/ glossmeter : மேற்பரப்பின் ஒதிரொளிர்வை அளவிடும் கருவி; மேற்பரப்பிலிருந்து எதிரொளிக்கும் விகிதத்தை அளவிடுவது.
327.  எதிரொளிப்பு உயரமானி – reflection altimeter
328. எதிரொளிப்பு நுண்ணோக்கி – reflecting microscope
329. எதிரொளிப்பு நோக்கி – spectroscope
330. ஆடியொளிர் முகில்நோக்கி – mirror nephoscope : முகிலைக் கண்ணாடியில் எதிரொளிக்கச் செய்து ஆயும் கருவி.
331. எதிரொளிப்புத் தொலைநோக்கி – reflecting telescope  : எதிரொளிப்பு தொலை நோக்கி, எதிரொளிர்வுத் தொலைநோக்கி, தெறிதொலைகாட்டி, ஒளிவிலக்கத் தொலைநோக்கி, ஒளிவிலகு தொலைநோக்கி எனப் பலவகையாக வழங்குகின்றனர்.
 332. எதிரொளிப்புப் படிகக் கோணமானி – reflection goniometer
333. எதிரொளிப்புமானி – reflectometer : தெறிப்புமானி, எதிரொளிப்பு அளவி, எதிரொளிப்புமானி எனமூவகையாகக்கூறுகின்றனர். எதிரொளிப்புமானி என்றே குறிப்பிடலாம்.
334. எதிரொளிர் உறழ்மானி – fabry perot interferometer : இரண்டு எதிரொளிப்புக் கண்ணாடிகளை உடையது. ஆதலின் எதிரொளிர் உறழ்மானி எனலாம்.
 335. எதிரொளிர் நிலை உறழ்மானி – fabry-perot etalon interferometer : எடலான்(Etalon) என்னும் பிரெஞ்சு சொல்லிற்கு அளப்பதற்குரிய அல்லது நிலையான அளவி என்று பொருள். ஆதலின் எதிரொளிர் நிலை உறழ்மானி எனலாம்.
 336. எதிரொளிர்வுக் காந்தமானி – reflecting magnetometer
337. எதிரொளிர்வுத் தொலைநோக்கி – cassegrain telescope : எதிரொளிப்புத் தொலைநோக்கி. இதில் முதன்மை ஆடித் திறப்பு வழியாகக் கடந்து செல்லும் ஒளி, இரண்டாம் ஆடி மூலம் குறைந்த தொலைவில் குவிக்கப்பட்டு, உரு அல்லது படிமம் காட்டப்படுகிறது. கேசெகிரெய்ன் என்னும்ஃபிரெஞ்சு அறிவியலாளரால் உருவாக்கப்பட்டது.
338.  எந்திர ஈரமானி – mechanical hygrometer
339. எந்திரஒளியிய அதிர்வுமானி – mechanooptical vibrometer
340. எரிபொருளளவி – fuel gauge
341. எரிமநோக்கி – phosphoroscope : இருளில் ஒளி நீடித்திருப்பதை அளப்பதற்கான அமைவு (-செ.) , நின்ற ஒளி காட்டி, நின்றவொளிவீசற்காட்டி என இப்பொழுது சொல்லப்படுவன சொல்லப்படுவன கலைச் சொல்லாக அமையவில்லை. செயல்அடிப்படையில் ஒளி நிறைப்பு நோக்கி எனலாம். எனினும் பாசுபரசு என்பதை எரிமம் எனக் குறிக்க வேண்டும். எனவே, எரிமநோக்கி எனலாம்.
342. எரிவளி ஒளிவிலகல்மானி – jamin refractometer : எரிவளி ஒளிவிலகல் குறியீட்டெண்ணை அளவிடும் கருவி.
343. எல்லையளவி – limit gauge
344. எல்லொளிமானி – solarimeter / pyranometer : சூரியக்கதிரை அளக்கும் கருவி. கதிர்மானி என்றுமட்டும் குறிப்பிட்டால் ரேய்(ray) எனப் பொதுவான சொல்லாகத் தவறாகப் பொருள் கொள்ள வாய்ப்பு ஏற்படும். ஆதலின் கதிரவன்ஆகிய எல்லோனின் ஒளி எனக் குறிப்பிடும் வகையில் எல்லொளிமானி எனலாம்.
345. எழுத்துதவி – typhlograph / nyctograph : பார்வையற்றவர்கள் எழுதுவதற்கு உதவும் கருவி. முதலில் பார்வை யற்றவர் எழுத்துதவி என்னும் பொருளில் தைபுலோகிராப்பு / typhlograph எனப் பெயரிட்ட அறிவியலாளர் சார்லசு இலட்சுவிட்சு [ Charles Lutwidge Dodgson (better known as Lewis Carroll) ], பின்னர் இருட்டில் எழுத்துதவி என்னும் பெயரிட்டார். சுருக்கமாக நாம் எழுத்துதவி என்றே பொதுவாகக் குறிப்பிடலாம்.
346. எளிய நுண்ணோக்கி           simple microscope   ஒற்றை அளவாடி(lens) அல்லது ஒற்றைஆடி முறைமையில் அமைந்த எளிய நுண்ணோக்கி.  அளவாடி : உருவளவைச் சுருக்கியும் பெருக்கியும் காட்ட உதவும் ஆடி வில்லை. எனவே, சுருக்கமாக அளவாடி(lens) எனலாம். (ஆடி என்றும் வில்லை என்றும் சொல்வது பொதுவாக அமைவதால் தனித்துச் சொல்லும் பொழுது அளவாடி என்றும் இணைத்துச் சொல்லும்பொழுது குவியாடி என்றும் குழியாடி என்றும் சொல்லலாம்.)
347. ஏந்தானத் திசைகாட்டி  –  rack compass : ஓடுசட்டக்கவராயம் (-ஐ.)
348. ஏரிமட்டமானி  – limnimeter
349. ஏற்புமை மானி – susceptometer
350.  ஏற்றக்கோணமானி pantometer :  ஏற்றம், தொலைவு ஆகியவற்றிற்கான கோணங்களை அளவிடும் கருவி.  தொலைவு, உயரம்அளவி என்று சொல்வதைவிட ஏற்றக்கோணமானி எனலாம்.
351. ஏற்றமானி   –  elevation meter
352. ஒட்டுக் கதிரி  –  parasitic radiator
353. ஒட்டுறவு மீயொலி பாய்மமானி   – correlation ultrasonic flowmeter
354. ஒடுக்கமானி  –  decelerometer  :  நகரும் பொருளின் ஒடுக்கத்தை அறிய உதவும் கருவி.  வேகத்தணிப்புமானி(ம.211) என்பதை விட ஊர்தி விரைவை ஒடுக்குவதை(/குறைப்பதை)ப் பதிவதால் சுருக்கமாக ஒடுக்கமானி எனலாம்.
355.  ஒத்ததிர்வி அலைமானி – resonator wave meter
356. ஒத்திணக்க நோக்கி  – synchroscope  : இரண்டு இயந்திர இயக்கம் அல்லது இரண்டு அசைவூட்டம் ஒத்து இணக்கத்தில் உள்ளதா என அறிய உதவும் கருவி. ஒத்திணக்க நோக்கி
357. ஒத்தியக்க நோக்கி/ ஒத்தியங்கு நோக்கி  – synchronoscope/ synchronous scope
358. ஒப்படர்த்தி நீரடர்மானி   – specific-gravity hydrometer
359. ஒப்படர்த்திமானி   – areometer  நீர்மங்களின் ஒப்படர்த்தியை அளக்கப் பயன்படும் கருவி. நீர்மமானி வகையைச்சேர்ந்த ஒப்படர்த்திமானி.
360. ஒப்பீட்டு நுண்ணோக்கி            comparison microscope

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png

- இலக்குவனார் திருவள்ளுவன்