கோளுதிரி – asteroid
விண்ணியலிலும் கணக்கியலிலும்
அசுட்டிராய்டு/asteroid என்பதற்குச் சிறுகோள் என்றும் பொறிநுட்பவியலிலும்
புவியியலிலும் குறுங்கோள் என்றும் குறிப்பிடுகின்றனர். இவற்றைச்
சிறுகோள்கள் என்று சொல்வதை விட வேறு பொருத்தமான சொல்லால் அழைப்பதே
பொருத்தமாகும்.
கோள் பற்றி 105 இடங்களிலும் கோள்மீன் 5 இடங்களிலும் சங்க இலக்கியங்களில் வருகின்றன.
உதிர்பு(4), உதிர்க்கும்(4),
உதிர்த்த(20), உதிர்த்தலின்(1), உதிர்த்து(3), உதிர்தரு(1), உதிர்ந்த(6),
உதிர்ந்தன(1), உதிர்ந்து(4), உதிர்ந்தென(1)உதிர்ப்ப(3), உதிர்பு(2),
உதிர்வ(1), உதிர்வன(5), உதிர்வை(1), உதிர (22) என உதிர் தொடர்பான சொற்கள்
உள்ளன.
உதிர் + இ = உதிரி
இவற்றின் அடிப்படையில் விண்ணில் கோள்களின் உதிரிகளாக இருப்பவற்றைக் கோள்உதிரி எனலாம்.
கோள்உதிரி / கோளுதிரி – asteroid
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment