முதுகெலும்பில் முதல் எலும்பு அட்லாசு
எனப்படுகிறது. இதனை முள்ளெலும்பு என்று சொல்வதைவிடப் பிடர்(௨)+என்பு(௧௧)
> பிடரென்பு எனலாம்.
ஆனால் புவிப்பரப்பைக்
காட்டும் நிலப்படம்-அட்லாசு/atlas நிலப்படத்தொகுதி [(ஆட்.), (புவி.),
(மனை.)] எனக் குறிக்கப் பெறுகின்றன. ஐந்திணைப் பாகுபாட்டுச் சிறப்புடைய
தமிழர் நிலவகைகளைத் திணை (௧௮)என்று சொல்வதுதான் எளிமையாயும் மரபாயும
அமையும். ஐந்திணைப் படங்களைக் குறிப்பதால் திணைப்படம் என்பதே பொருத்தமாக
அமையும்.
திணைப்படத்தைக் கோளவடிவில் காட்டும் கோள வடிவிலான குளோபு-globe என்பதைத் திணைக் கோளம் என்று சொல்ல வேண்டும்.
பிடரென்பு – atlas (உடற்கூறு)
திணைப்படம்- atlas (புவியியல்)
திணைக் கோளம்-globe
No comments:
Post a Comment