Tuesday, January 20, 2015

கலைச்சொல் தெளிவோம் 44 : அஞர்-mental distress ; கொடுமகிழ்வு-sadism


 வாங்க வாங்கநின்று ஊங்குஅஞர் நிலையே (நற்றிணை : 30.10)
ஆர வுண்டு பேரஞர் போக்கி (பொருநராற்றுப்படை : 88)
என்பனபோன்று, அஞர்(33) மனத்துயரத்தைக் குறிக்கின்றது. distress: உளஇடர்ப்பாடு என மனையறிவியல் கூறுகிறது.
அஞர்-mental distress
என்பது பொருத்தமாக அமையும்.
 தொல்பொருள் துறையில் sadism என்பதற்கு அஞரின்பம் என்றும் sadist என்பதற்கு அஞரின்பர் என்றும் சொல்கின்றனர். நம் துன்பத்தில் இன்பம் காண்பது என்பது நமக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு எதிர் நோக்குவது. ஆனால் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காண்பது என்பது கொடுஞ்செயல். எனவே, அவற்றிற்கு முறையே கொடுமகிழ்வு, கொடுமகிழ்நர் எனலாம்.
கொடுமகிழ்வு-sadism
கொடுமகிழ்நர்-sadist


No comments:

Post a Comment

Followers

Blog Archive