Sunday, January 4, 2015

கலைச்சொல் தெளிவோம் 24 : யாணர் – fresh income


currency01
kalaicho,_thelivoam01

24. யாணர்fresh income

யாணர்(86), யாணர்த்து(7), யாணரஃது(1), எனப் புலவர்கள் சங்க இலக்கியங்களில் கையாண்டுள்ளனர். பொதுவாகப் புது வருவாய் என்பது செல்வத்தை மட்டுமல்லாமல் புதிய விளைச்சல், புதிய உணவு என்ற வகையில் எல்லா வளத்தையும் குறிக்கின்றது. புதிது படற்பொருட்டே யாணர்க் கிளவி என்னும் தொல்காப்பியத்திற்கேற்ப (உரி.21) புதியனவெல்லாம் யாணர் எனக் குறிக்கப்பட்டுள்ளன.
சான்றுக்குச் சில பார்ப்போம்.
பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே. (பதிற்றுப்பத்து : 24.30)
அறாஅ யாணர் அகன் றலைப் பேரூர்ச் (பொருநர் ஆற்றுப்படை: 1)
இருங் கதிர் நெல்லின் யாணர் அஃதே (நற்றிணை : 311.2)
கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர் (பரணர்: குறுந்தொகை : 24.1)
யாணர் ஊரன் வாழ்க (ஐங்குறு நூறு : 1.5)
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை (புறநா. 66, 6)
எனவே புதுவருவாய் (new income / fresh income) என்பதற்கு யாணர் என்று சொல்வோம்.

யாணர்-fresh income

- இலக்குவனார் திருவள்ளுவன்


No comments:

Post a Comment

Followers

Blog Archive