25 : உலவி-moon / satellite
வானில்ஒருகோளைச்சுற்றி – உலவி – வரும் விண்பொருளைmoon/satellite என்கின்றனர். வானியல், மனையியல், கணக்கியல் ஆகியவற்றில் மூன்
/ moon – நிலா, திங்கள், மதி எனக் குறிப்பிட்டு இருப்பினும் காலத்தைக்
கணிக்க உதவும் திங்களை மட்டும்தான் இது குறிப்பதாக அமையும். இவ்வாறு நாம்
மூன்/moon என்றால் நிலவைத்தான் நினைப்போம். எனவே, நிலா என்னும் சொல்லைப்
பொதுவாகப் பயன்படுத்தினால் பொருட்குழப்பம்தான் வரும்.
உலவு(1) என்னும் சங்கச் சொல் அடிப்படையில்
வானில் உலவி வருவனவற்றை உலவி என்று சொல்வதே பொருத்தமாக அமையும்.
வானுலவிகளுள் ஒன்றுதான் நிலா.
உலவி-moon / satellite
சாட்டெலைட் என்றால்
செயற்கைக்கோள் என்றும் சொல்கிறோம். ஆங்கிலம் முதலான பிறமொழிகள் சொல்வறுமை
மிக்கன. எனவே, இயற்கைக்கும் செயற்கைக்கும் ஒரேசொல்லையே
பயன்படுத்துகின்றனர். இலங்கையிலும் ஈழத்திலும் செயற்கைக்கோள் என்று
சொல்லாமல் செய்மதி (செய்யப்பட்ட மதி) என்று சொல்வது நன்றாகவே உள்ளது.
நம்மால் செய்யப்பட்ட நிலவை – மதியைச்- செய்மதி என்பது எவ்வளவு
பொருத்தமாகவும் சுருக்கமாகவும் எளிமையாகவும் உள்ளது. மேலும் செயற்கைக் கோள்
என்பது பொருளளவில் தவறாகும். ஏனெனில் இயற்கையாக ஒளியைக் கொள்வனவே கோள்கள்.
அவற்றைச் சுற்றுவனவே நிலவுகள் அல்லது உலவிகள். நிலவின் மறு பெயர் மதி.
எனவே, செய்யப்பட்ட மதியைச் செய்மதி என்பது சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால்,
மதி என்பது குறிப்பிட்ட ஓர் உலவியைக் குறிப்பது; உலவி என்பதே பொதுவான ஒன்று
என்பதை ஏற்றுக்கொண்ட பின் செய்மதி என்பது தவறாகும். எனவே, செயற்கை
உலவியைச் சுருக்கமாகச் செய்யுலவி எனலாம். எனினும் நம்மால் ஏவி விடப்படும்
உலவி என்னும் பொருளில் ஏவுலவி என்பது இன்னும் சுருக்கமாக அமையும்.
ஏவுலவி/செய்யுலவி– artificial satellite
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment