30: சேணாகம்- Pluto ; சேண்மம்- Neptune
சேய்மையன் (1), சேண் (96),சேணன்
(1),சேணோர் (1),சேணோன் (9) எனச் சேண் அல்லது அதனடிப்படையிலான சொற்கள் சங்க
இலக்கியங்களில் பயின்றுள்ளன. கண்ணுக்கெட்டாத தொலைவு, நினைவிற்கெட்டாத
தொலைவு என மிகுதொலைவை இவை குறிக்கின்றன. இவற்றின் அடிப்படையில்
மிகுதொலைவிலுள்ள கோள்களுக்குப் பெயர் சூட்டலாம்.
சேண்விளங்குசிறப்பின்ஞாயிறு (புறநா. 174, 2)
எனத் தொலைவிலுள்ள ஞாயிறு குறிக்கப்பெறுகிறது.
புளூட்டோ- Pluto என்பதனையும் நெப்டியூன் –
Neptune என்பதனையும் ஒலி பெயர்ப்பில் அல்லது தொலைவிலுள்ள கோள் என்றே
விண்ணியலிலும் பொறி. நுட்பவியலிலும் குறிக்கின்றனர். புளுட்டோ என்பதற்கு
அடைப்பில் (சேண்மியம்) என இ.ப.க. அகராதி கூறுகிறது. தொலைவிலுள்ள கோள்களைப்
பற்றிப் படிக்கும் கருத்தாக்கத்தைச் சேண்மியம் எனலாம். செ.ப.அகராதி
நெப்படியூன் என்பதற்குச் சேண்மம் எனப் பொருள் தருகிறது. இவற்றின் அடி
ஒற்றி, நாம் புளுட்டோ-சேணாகம் என்றும் நெப்டியூன்-சேண்மம் என்றும்
குறிப்பது பொருத்தமாக இருக்கும்.
சேணாகம்- Pluto
சேண்மம்- Neptune
No comments:
Post a Comment