அட்டை அல்லது ஒரு பரப்பின்
மேல்மேற்பரப்பு தெரியும்படியும் காப்பாகவும் இடப்படும் இழையை (இ)லேமினசேன்
lamination என்று குறிப்பிடுகின்றனர். இதனை மென்படல உறை(ஆட்.),
அடுக்காக்கம்(பொறி.), மெல்லடுக்கு(பொறி.,புவி.) மென்தகடு, அடுக்கு அமைப்பு
(மனை.) என வெவ்வேறு வகையாகக் குறிக்கின்றனர்.
மேல்(89)+இழை(256)>மேலிழை எனலாம்.
மென்(232), மென்பால்(2), மென்புல(7), மென்புலம்(1), மென்மெல(15),
மென்மை(5), மென்மொழி(1) என மென்மை பற்றிய சங்கச் சொற்கள் உள்ளன. மென்மையான
இழை என்பதால் மெல்லிழை என்றும் சொல்லலாம்.
மேலிழை/மெல்லிழை-lamination
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment