Wednesday, February 18, 2015

கலைச்சொல் தெளிவோம்! 74. மை-Altostratus

[மை-Altostratus]
[மை-Altostratus]
kalaicho,_thelivoam01 
 மை
6000 பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள இடைஅடுக்கு முகிலே மை என்பது.
மை(110) எனில், கருநிறம், வண்டி மை, பசுமை, குற்றம் என்பன போன்று பல பொருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் முகில் என்பது. மைபடு சென்னி (கலித். 43), “மைபடு மால்வரை”(நற்றிணை : 373:3. ) “மைபடு சிலம்பின்” (குறுந். 371 & பரிபாடல் : 16:2) “மைபடு குடுமிய குலவரை” (பரிபாடல் : 15:9-10) என்னுமிடங்களில், ‘மை’ மலைகளில் தவழும் முகிலைக் குறிக்கின்றது. மழைக் கருக்கொண்டபின் கருமையாய் அமையும் அடுத்த நிலையாகிய இது அல்தாசுதிரட்டசு/Altostratus எனப்படுகின்றது.
மை-Altostratus
- இலக்குவனார் திருவள்ளுவன்


No comments:

Post a Comment

Followers

Blog Archive