Tuesday, February 17, 2015

கலைச்சொல் தெளிவோம்! 72. விண்டு-Stratocumulus


[விண்டு-Stratocumulus]
[விண்டு-Stratocumulus]
kalaicho,_thelivoam01 
விண்டு
  விண்டு சங்க இலக்கியத்தில் 8 இடங்களில் பயன்படுத்தப் பெற்றுள்ளது. எனினும் மலையைத்தான் குறிக்கிறது. ஆனால்,
விண்டுச் சேர்ந்த வெண்மழை போல (பதிற்றுப்பத்து 55.15)
விண்டு முன்னிய புயல்(பதிற்றுப்பத்து (84.22)
என்பன போல், பெரும்பாலும் மழை முகிலோடு தொடர்பு படுத்தியே விண்டு குறிக்கப்பெறுகின்றது. பிங்கல நிகண்டு விண்டு என்பதன் ஒரு பொருளாக முகிலையும் குறிக்கின்றது.
  விண்டு ஆகிய மலையில் குவியும் முகில் பின்னர் விண்டு என்றே அழைக்கப் பெற்றிருக்க வேண்டும். எனவே, சங்க இலக்கியங்களில் பயன்பெற்ற சொல் என்ற முறையில் இங்கே கையாளப்படுகிறது. இசுதிரட்டோ கியூமுலசு/ Stratocumulus என்பது அடுக்காகக் குவிந்து கிடக்கும் முகில். மலையைச் சுற்றி உள்ள முகிலும் அடுக்காகக் குவிந்துதானே காணப்படும். எனவே விண்டு என்பது 4000 பேரடி உயரத்தில் உள்ள முகில்அடுக்கைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
விண்டு-Stratocumulus
- இலக்குவனார் திருவள்ளுவன்

No comments:

Post a Comment

Followers

Blog Archive