அடார், அடாஅர்
பெருங்கல் லடாரும் (புறநானூறு: 19.6)
சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் (நற்றிணை :119.2)
இங்கே அடார், அடாஅர் என்பன விலங்குகளை அகப்படுத்தும் பொறியைக் குறிக்கின்றன.
ஆட்சியியல், வேளாணியல், தொல்லியல்,
பொறியியல், மீனியல், மனையியல், தகவல் நுட்பவியல், இயற்பியல், கால்நடை
மருத்துவ இயல் ஆகியவற்றில் trap-பொறி என்று குறிக்கப் பெற்றுள்ளது;
இவற்றுள் சில இயல்களில் கண்ணி அல்லது கண்ணிப் பொறி என்றும்
குறிக்கப்பெற்றுள்ளது.
பொறி என்பது ஐம்பொறி என்னும் பொழுதும்,
பொறியியல் என்னும் பொழுதும் வெவ்வேறு பொருள்களைக் குறிப்பதால்
‘டிராப்’/trap என்பதற்கு வேறு சொல்லைக் கையாளுவதே சரியாகும்,
அடார்-trap பொருத்தமாக இருக்கும்.
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment