விசை(35), விசைத்த(1), விசைத்து(6), விசைப்ப(1), விசைப்பு (ள) என விசை பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. விசைத்திறன் பெற இணைப்பாக இருந்து இயக்குவதை விசைப்பி எனலாம். சுவிட்ச்(சு)/switch-(ஆட்.) பொருத்தி, இணைப்பி, திறப்பான், நிலைமாற்றி (வேதி.) இணைப்பி. (பொறி.) இணைப்பி, பாதைமாற்றி (மனை.), இணைப்புமாற்றி, நிலைமாற்றி, (தக.) நிலைமாற்றி என இப்பொழுது வெவ்வேறு வகையாகக் கூறுவதை விட விசைக்கு உதவுவதை விசைப்பி என்பது பொருத்தமாக அமையும்.
விசைப்பி-switch
- இலக்குவனார் திருவள்ளுவன்