Thursday, February 5, 2015

கருவிகள் 1600 : 841-880 : இலக்குவனார் திருவள்ளுவன்

கருவிகள் 1600 : 841-880 : இலக்குவனார் திருவள்ளுவன்

841. திரிபளவு ஆய் கருவிகள் strain gauge testers  
842.  திரிபு அளப்பு முடுக்கமானி strain-gage accelerometer  
843. திரிபு நிலநடுக்க அளவி strain seismometer  
844.  திருக்க மானி torque meter  
845.  திருக்கக்குழாய் பாகுமைமானி torque-type viscometer  
846.   திருக்கக்குழாய் பாய்மமானி torque-tube flow meter  
847.  திருக்கச்சுருள் காந்தமானி torque-coil magnetometer  
848. திருகளவி screw gauge  
849. திருகிழைஅளவி screw pitch gauge  
850.  திருகுபுரி நுண்ணளவி screw-thread micrometer  
851. திருத்த அளவி corrective gauge  
852. திறன்மானி potentiometer மின்னிலை ஓப்பீட்டளவி, ஒப்புமின்னழுத்த மானி,   மின்னழுத்த மானி, மின்னழுத்த ஆற்றல்மானி எனப் பலவகையாகக் குறிக்கப் பெறுகிறது. எனினும்
மின்   அழுத்தத்திறன் மானி என்பதன் சுருக்கமாகத் திறன்மானி எனலாம். திறன்மானி என்றால் எதன் திறன்மானி என்ற வினா எழுந்தாலும் வேறு திறன்மானி இன்மையால் இதனையே குறிப்பதாகக் கொள்ளலாம்.
853. தீக்கேடு மானி fire-danger meter  
854. துடிநோக்கி stethoscope இதயத் துடிப்பு மானி , இதயத்துடிப்பளவி,
இதயத்துடிப்பு அறிவி,
இதயத்துடிப்புகாணி,
இருதயத் துடிப்பறி குழல்,
இருதயத் துடிப்பை அறிய உதவும் கருவி,
உடலொலிபெருக்கிக்காட்டி ,
துடிப்புக்காட்டி
துடிப்புணர் குழல்,
துடிப்புமானி ,
நாடிக்குழல்,
நாடித்துடிப்பு மானி,
நாடிமானி ,
நாடியறி கருவி,
மருத்துவர்களினால் இதயத்துடிப்பை அறிய உதவும் ‘சாதனம்’
மார்பாய்வி
மார்பு ஒலிமானி ,
மார்பு ஒலிமானி,
எனப் பலவகையாகக் கூறுவதால் குழப்பம்தான் வரும். இவற்றுள், இரு தொடர்கள் பொருள்விளக்கமாக அமைந்துள்ளன. இருதயம் என்று சொல்வதும் தவறு.   நாடி ஒலியை நாம் பல இடங்களில் உணரமுடியும். ஆனால், துடி ஒலியை மார்பில் மட்டும்தான் கேட்க இயலும். எனவே, சீர்மைச் சொல்லாக,   துடி நோக்கி எனலாம்.
855.  துடிமானி pulsometer  
856.  துடிப்பு உயரமானி pulse altimeter  
857. துடிப்பு ஒளிக்காட்சி வெப்பவரைவி pulsed video thermograph  
858.  துடிப்பு சுற்றுமானி pulse tachometer  
859. துடிப்பு நிகழ்வெண் மானி pulse frequency meter  
860. துடிப்பு வீத தொலைமானி pulse-rate telemeter  
861. துடிப்புவகைத் தொலைமானி pulse-type telemeter  
862. துணை வெப்பமானி auxiliary thermometer  
863. துரப்பணக் கூரளவி drill point gauge  
864. துருத்தி வளிமானி bellows gas meter  
865. துளிமானி stactometer  
866. துளை மானி orifice meter  
867. துளைப்பளவி drill guage  
868. துளைமானி apertometer  
869. தூசுமானி Konimeter/ coniometer காற்றில் உள்ள தூசியை அளவிடும் கருவி. காற்று பதம்பார்க்கும் கருவி(-இ.) எனச் சொல்வதைவிடத், தூசிமானி எனலாம்.
870. தூசு எண்ணு நுண்ணோக்கி dust-counting microscope  
871. தூசு நோக்கி koniscope காற்றில் உள்ள தூசினை நோக்க உதவும் கருவி.
872. தூண்டு சுற்றுமானி impulse tachometer  
873. தூண்டுமை உப்புமானி induction salinometer  
874. தூண்டுமை சுற்றுமானி inductor tachometer  
875.  தூண்டுமை திறன்மானி induction potentiometer  
876. தூண்டுமை திறனமானி induction watt-hour meter  
877. தூண்டுமை பாய்மமானி induction flowmeter  
878. தூண்டுமை வகை மின்னோடிமானி induction type ammeter  
879. தூண்டுமைமானி Inductometer/ inductance meter மின்சுற்றின் தன்தூண்டுமையை ( self-inductance) அல்லது இரண்டு சுற்றுகளின் ஒன்றுக்கொன்றான உடன்சார் தூண்டுமையை (mutual inductance ) அளவிடுவதற்கு உதவுவது. மின்தூண்ட அளவி(-இ.) எனச் சொல்வதைவிட, இதனைத் தூண்டுமைமானி எனலாம்.
880. தூண்டு-வகை தொலைமானி impulse-type telemeter  

- இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png



No comments:

Post a Comment

Followers

Blog Archive