விசும்பு-stratus
[விசும்பு-stratus]
kalaicho,_thelivoam01 
 எழிலிக்கு அடுத்த அடுக்கில் 1000 பேரடி(மீட்டர்) தொலைவில் உள்ள பாவடி முகில் குறித்து அடுத்துப் பார்ப்போம்.
 விசும்பு என்னும் சொல்லைச் சங்கப் புலவர்கள் 164 இடங்களில் கையாண்டுள்ளனர்; விசும்பு வானத்தையும் குறிக்கின்றது, வானத்தில் உள்ள முகில்கூட்டத்தையும் குறிக்கின்றது.
முகில் என்னும் பொருளில் ‘விசும்பு’ வரும் சில இடங்கள் வருமாறு :
ஒருகை நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய
ஒருகைவான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட (திருமுருகு ஆற்றுப்படை : 115-116)
நீல் நிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும் (பெரும்பாணாற்றுப்படை : 135)
வானம் நீங்கிய நீல்நிற விசும்பின் (மதுரைக்காஞ்சி: 678)
வருமழை கரந்த வால் நிற விசும்பின் (நற்றிணை: 76: 1)
நிலத்திலிருந்து ஏறத்தாழ 2000 முதல் 7000 அடி தொலைவில் அகன்ற பரப்பில் அமையும் முகில் கூட்டத்திற்கு ஃச்ராட்டசு/stratus எனப் பெயர் கண்டனர், 19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில். விசும்புபோல் அகன்ற பரப்பில் அமைந்த முகில் கூட்டத்தை விசும்பு என்றனர் பழந்தமிழர். எனவே, விசும்பு-stratus என்பது மிகச் சரியாக அமையும்.
விசும்பு-stratus
- இலக்குவனார் திருவள்ளுவன்