Tuesday, May 5, 2015

கலைச்சொல் தெளிவோம்! 155. மாலைமாற்று வெருளி-Aibohphobia; 156. மாப்பொருள் வெருளி-Carbophobia

Aibohphobia
கலைச்சொல் தெளிவோம்! 155. மாலைமாற்று வெருளி-Aibohphobia
 ஒரு சொல்லைத் திருப்பிக் கடைசி எழுத்தில் இருந்து வாசித்தாலும் அதே சொல் வருதலை இருவழிச் சொல் என்பர். இதனை அவ்வாறு சொல்வதைவிடத் தமிழிலக்கணவியலில் உள்ள மாலைமாற்று என்னும் கலைச்சொல் பொருத்தமாக அமைகிறது. பிற மொழிகளில் அத்தகைய சொற்களைத்தான் பார்க்க முடியும். தமிழில் தொடர்களும் பாடல்களுமே உள்ளன. அத்தகைய பாடலுக்கு மாலை மாற்று எனப் பெயர். அதுவே இரு வழியாகவும் அமையும் சொல்லிற்கான பெயராக இங்குக் குறிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய இயல்பு மீறிய பேரச்சம்
மாலைமாற்று வெருளி-Aibohphobia
கலைச்சொல் தெளிவோம்! 156. மாப்பொருள் வெருளி-Carbophobia
 கார்போஃகைடிரேடு (carbohydrate) என்றால் மாவுச்சத்து(வேளாணியல், மருந்தியல்), மாவுப்பொருள்(பயிரியல், மருந்தியல், மீனியல்), தரசம்(மனையியல்), கரிநீரகி (மருந்தியல்), சருக்கரைச்சத்து(கால்நடையியல்), கார்போஃகைடிரேடு (மருந்தியல், வேதியல், சூழியல்) எனப் பலவகையாகக் கையாண்டு வருகின்றனர். மாப்பொருள் என அனைவரும் பின்பற்றுவதே பொருத்தமாக இருக்கும். மாப்பொருள் குறித்த தேவையற்ற பேரச்சம்
மாப்பொருள் வெருளி-Carbophobia


கலைச்சொல் தெளிவோம்! 153. பெருவெளி வெருளி-agoraphobia; 154. பேய் வெருளி-Phasmophobia/Spectrophobia


Fear
பேய் வெருளி
பேய் வெருளி
கலைச்சொல் தெளிவோம்! 153. பெருவெளி வெருளி-agoraphobia
 மனைஅறிவியல், மருந்தியல், ஆகியவற்றில் agoraphobia திறந்தவெளி அச்சம் எனப் பயன்படுத்துகின்றனர். திறந்த வெளி என்பதை விடப் பெரு வெளி என்பதே பொருத்தம்.
திறந்த பெரு வெளியைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம்
பெருவெளி வெருளி-agoraphobia
கலைச்சொல் தெளிவோம்! 154. பேய் வெருளி-Phasmophobia/Spectrophobia
 மாணா விரல வல் வாய்ப் பேஎய் (நற்றிணை : : 73: 2)
”பேஎய்க் கொளீஇயள்” இவள் எனப்படுதல் (குறுந்தொகை : : 263:5)
பேஎய் அனையம், யாம்; சேய் பயந்தனமே. (ஐங்குறுநூறு : : 70: 5)
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை (அகநானூறு : : 130:5)
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் (புறநானூறு : : 238: 4)
பேய் அல்லது ஆவி பற்றிய எண்ணத்தால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய
பேய் வெருளி-Phasmophobia/Spectrophobia
- இலக்குவனார் திருவள்ளுவன்


கலைச்சொல் தெளிவோம்! 150. பூண்டு வெருளி-Alliumphobia; 1 51. பெண் வெருளி-Gynephobia/Gynophobia;152. மகவு வெருளி-Kiddophobia


Alliumphobia01
கலைச்சொல் தெளிவோம்! 150. பூண்டு வெருளி-Alliumphobia
பூண்டு(7) வகை பற்றி ஏற்படும் தேவையற்ற பேரச்சம்
பூண்டு வெருளி-Alliumphobia

கலைச்சொல் தெளிவோம்!1 51. பெண் வெருளி-Gynephobia/Gynophobia
 பெண்(18), பெண்கோள்(1), பெண்டிர்(63), பெண்டிரேம்(1), பெண்டினை(1), பெண்டு (18), பெண்மை(6) எனப் பெண் என்னும் சொல்லைப் புலவர்கள் 108 இடங்களில் கையாண்டுள்ளனர்.
பெண்களைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய
பெண் வெருளி-Gynephobia/Gynophobia

கலைச்சொல் தெளிவோம்! 152. மகவு வெருளி-Kiddophobia

குழவி என்னும் சொல் 41 இடங்களில் வந்திருந்தாலும், இளங்குழந்தையரையே பெரிதும் குறிப்பதால் பொதுவான சொல்லாகக் கருத இயலவில்லை.
பிள்ளை என்னும் சொல் 30 இடங்களிலும், மகவு என்னும் சொல் 5 இடங்களிலும், சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பெற்றாலும், பெரும்பாலும் விலங்கினம், பறவையினம் முதலானவற்றின் மகவினையே குறிக்கின்றன. பெரும்பாணாற்றுப் படையில் மட்டும் மக்களின் குழந்தைகள் மகவு என்று குறிக்கப்பெற்றுளன.
மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்ப (பெரும்பாண் ஆற்றுப்படை :பெரும்பாண் ஆற்றுப்படை : 58)
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி (பெரும்பாண் ஆற்றுப்படை : 89)
மை இருங் குட்டத்து மகவொடு வழங்கி (பெரும்பாண் ஆற்றுப்படை : 271)
பிள்ளைகள் தம் மீது பாசம் காட்டுவதால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் மகவு வெருளி ஆகும்.
மகவு வெருளி-Kiddophobia
- இலக்குவனார் திருவள்ளுவன்


Followers

Blog Archive