Sunday, April 26, 2015

கலைச்சொல் தெளிவோம்! 149 புற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia

புற்றுநோய்வெருளி
புற்றுநோய்வெருளி
 புற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia

புற்று என்பது குறித்துப் பின்வருவனபோல் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த (அகநானூறு : 8:1)
செம் புற்று ஈயல் போல (புறநானூறு : 51: 10)
புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் (பதிற்றுப்பத்து : 45:2)
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி (நற்றிணை :59:2)
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் (பெரும்பாண் ஆற்றுப்படை : 277)
புற்று போன்ற தன்மையில் உடலில் ஏற்படும் நோய்தான் புற்று நோய். வேளாணியல், பயிரியல், பொறியியல்நுட்பவியல், சூழறிவியல், மனைஅறிவியல், மருந்தியல், கால்நடைஅறிவியல் ஆகியவற்றில் cancer-புற்று நோய் எனப் பயன்படுத்தி வருகின்றனர்.
புற்றுநோய் (வரும் என்பது) குறித்து ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய
புற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia
- இலக்குவனார் திருவள்ளுவன்


அகரமுதல 75 நாள் சித்திரை 6, 2046 / ஏப்பிரல் 19, 2015

கலைச்சொல் தெளிவோம்! 148 புதைவு வெருளி-Taphephobia


Taphephobiaபுதைவு வெருளி-Taphephobia
அடி புதை அரணம் எய்தி, படம் புக்கு (பெரும்பாண் ஆற்றுப்படை : 69)
வரைத் தேன் புரையும் கவைக் கடைப் புதையொடு (பெரும்பாண் ஆற்றுப்படை : 123)
முகம் புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே (ஐங்குறுநூறு : 197.2)
மயிர் புதை மாக் கண் கடிய கழற (பதிற்றுப்பத்து : 29.12)
தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான் (கலித்தொகை : 39.2)
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப (அகநானூறு : 86.23)
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல் (புறநானூறு : 120.12)
புதை (16), புதைஇய (1), புதைத்த (7), புதைத்தது (1) , புதைத்தல்(1), புதைத்து (2) புதைந்து(1), புதைப்ப (1), புதைய (23), புதையா (1) எனப் புதை தொடர்பான சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன.
உயிரோடு புதையுண்டு போவோமோ எனக் கருதி ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய
புதைவு வெருளி-Taphephobia

- இலக்குவனார் திருவள்ளுவன்


அகரமுதல 75 நாள் சித்திரை 6, 2046 / ஏப்பிரல் 19, 2015

கலைச்சொல் தெளிவோம்! 146 பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia; 147 புதுமை வெருளி-Neophobia

Coprophobia_Scatophobia 
பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia

faeces-மலம் எனச் சூழறிவியல், மீனியல், மனைஅறிவியல், மருந்தியல், கால்நடை அறிவியல் ஆகியவற்றில் பயன்படுத்தி வருகின்றனர்.
மலம் என்பதை இடக்கர் அடக்கலாகப் பவ்வீ (பகரத்தில் வரும் ஈகாரம்-ப்+ஈ) என்பது தமிழ் மரபு.
மலத்தைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய
பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia
neophobia 
புதுமை வெருளி-Neophobia

புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுநர் (புறநானூறு : 174.16)
இது தவிர, புதிது(14), புது(109), புதுவ(4), புதுவதின்(1), புதுவது(19), புதுவர்(1), புதுவன(1), புதுவிர்(2), புதுவை(1), புதுவோர்(5), புதுவோர்த்து(1),
எனப் புது என்பதன் அடிப்படையிலான சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
புதுமை கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம்
புதுமை வெருளி-Neophobia
- இலக்குவனார் திருவள்ளுவன்


அகரமுதல 75 நாள் சித்திரை 6, 2046 / ஏப்பிரல் 19, 2015

Followers

Blog Archive