Saturday, August 27, 2011

பிழைகளைத் தவிர்ப்போம்

பிழைகளின்றிப் பேசுவதும் எழுதுவதுமே கடமை என எண்ணுவோர்க்கும் மாணாக்கர்க்கும் தவறில்லாமல் எழுதுவது குறித்த காணொளி காண்க  : 

 

பிழைகளைத் தவிர்ப்போம்

இலக்குவனார் திருவள்ளுவன்


vaazhviyal unmaikal aayiram 221-230: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 221-230

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 26, 2011


221 அருளின்றி அல்லவை செய்தால் பொருள் நீங்கும்.
222
இவ்வுலகிற்குப் பொருளும் புகழ் உலகிற்கு அருளும் தேவை.
223
அருளற்றவர்க்கு ஆக்கம் எப்பொழுதும் இல்லை.
224
மெலியாரைத் துன்புறுத்தும் பொழுது வலியார் முன் தன்னை நினைத்துப்  பார்க்கவும்.
225
பேணாவிட்டால் பொருள் வளம் பெருகாது.
226
ஊன் உண்போர்க்கு அருளாட்சி இல்லை.
227
உடல்சுவை கண்டால் நல்லாக்கம் வராது.
228
புலால் என்பது பிற உடலின் புண்ணே! அதை உண்பானேன்?
229
ஆயிரம் வேள்வியினும் ஒன்றன் உயிர் பிரிக்காமையே நன்று.
230
ஊனை மறுத்தவனை உயிர்கள் தொழும்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்  211 – 220

Friday, August 26, 2011

vaazhviyal unmaikal aayiram 210-220 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 210-220

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 25, 2011


211 புகழ்ப்பணி புரிந்தவரையே போற்றும் உலகு.
212
புகழோ இகழோ காரணம் நாமே.
213
புகழ் வரும் வகையில் செயல்புரிக.
214
புகழ் பெறா வாழ்க்கை வசையுடைய வாழ்க்கை.
215
புகழில்லாமல் வாழ்ந்தால் நிலப்பயனும் குன்றும்.
216
புகழ் நீங்கி வாழ்பவரும் வாழாதவரே.
217
பொருட்செல்வம் கீழோரிடமும் இருக்கும்; அருட்செல்வமே செல்வம்.
218
அருளாட்சியே அனைத்து வழிக்கும் துணை.
219
அருளுடையார் துன்பம் அடையார்.
220
அருள் ஆள்வோர் அல்லல் அடையார்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 201 – 210


vaazhviyal unmaikal aayiram 201-210 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 201-210

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 23, 2011


201 கேட்போர் மகிழும் வகையில் கொடுக்க வேண்டும்.
202
பசி தாங்கும் துறவியைவிடப் பசியைப் போக்குவோரே வலிமையானவர்.
203
இல்லாதவர் பசி தீர்த்தலே பொருளைச் சேமிக்கும் இடம்.
204
பகுத்துண்பவரைப் பசிப்பிணி அண்டாது.
205
கொடையால் வரும் இன்பத்தை உணராதவரே பொருளைச் சேர்த்து இழப்பர்.
206
இரத்தலைவிட இழிவானது தனித்து உண்பதே.
207
கொடுக்க முடியாத பொழுது இறப்பதும் இனிமையே.
208
கொடுத்துப் புகழ் பெறுவதைவிட உயிர்க்கு ஆக்கம் வேறு இ¢ல்¢லை.
209
கொடையாளர் புகழையே அனைவரும் பேசுவர்.
210
உலகில் அழியாதது புகழே.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்   -   191-200

 

vaazhviyal unmaikal aayiram 191-200 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 191-200

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 22, 2011


191 ஒப்புரவைவிட உயர்வு எவ்வுலகிலும் இல்லை.
192
பேரறிவாளர் செல்வம் ஊருணி போல் உதவும்.
193
நல்லோர் செல்வம் பயன்மரம் போல் பயன்தரும்.
194
பெருந்தகையாளர் செல்வம் மருந்துமரம் போன்று உதவும்.
195
ஒப்புரவாளர் வாய்ப்பு இல்லாத பொழுதும் உதவத் தயங்கார்.
196
நல்லவர் வறுமை என்பது நல்லன செய்ய இயலாமையே.
197
ஒப்புரவினால் கேடு வந்தால், அது தன்னை விற்றாவது பெற்றுக் கொள்ளும்   சிறப்பு உடையது.
198
வறியவர்க்குக் கொடுப்பதே கொடை.
199
நல்லவழியில் வந்தாலும் பெறாதே; மேலுலகம் இல்லை என்றாலும் கொடுக்கத்   தவறாதே.
200      இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது உயர்ந்தோர் பண்பு.

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்


Thursday, August 25, 2011

vaazhviyal unmaikal aayiram 181-190: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 181-190

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 20, 2011


181 தீயன தீயினும் தீது.
182
தீயன செய்தார்க்கும் தீயன செய்யாமையே தலைசிறந்த அறிவு.
183
பிறர்க்குச் செய்யும் கேடு நம்மைச் சூழும்.
184
துன்பம் வேண்டாவிடில் பிறருக்குத் தீயன செய்யாதே.
185
தீச்செயலால் வரும் பகை அழிவைத் தரும்.
186
தீயவை செய்தாரை நிழல்போல் கெடுதி தொடரும்.
187
உன்னை விரும்பினால் தீயன விரும்பாதே.
188
தீயன செய்யாதவன் கேடு இல்லாதவன்.
189
மழைபோல் கைம்மாறு கருதாதே.
190
முயற்சியால் வரும் பொருள் பிறர் உயர்ச்சிக்கே.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்


vaazhviyal unmaikal aayiram 171-180 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 171-180

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 19, 2011


171 பிறர் குற்றம் போல் தம் குற்றம் காண்பதே சிறப்பு.
172
பயனில சொல்லுவான் எல்லாராலும் இகழப்படுவான்.
173
தீய செய்தலினும் தீது பயனில சொல்லல்.
174
பயனற்ற சொன்னால் சீர்மையும் சிறப்பும் நீங்கும்.
175
பயனில பேசுவான் பதடியே ஆவான்.
176
நயமற்ற சொல்லைவிடப் பயனற்றவற்றைச் சொல்லாதிருத்தல் நன்று.
177
அறிவுடையார் சொல்லார், பயனில்லாச் சொல்லை.
178
தூய மனத்தர் மறந்தும் பயனற்ற சொல்லார்.
179
பயனுடையன சொல்லுகங் பயனற்றன சொல்லற்க.
180
தீவினை செய்ய தீயோர் அஞ்சார்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 161-170

vaazhviyal unmaikal aayiram 161-170 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 161-170

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 18, 2011


161 அழுக்காறு உடையவர்க்கு அதுவே துன்பம் தரும்.
162
கொடுப்பதைத் தடுப்பவனின் சுற்றமும் கெடும்.
163
அழுக்காறு செல்வத்தைத் தேய்த்து அழிவினுள் தள்ளும்.
164
பொறாமையால் உயர்ந்தோர் யாருமிலர்.
165
பிறர் பொருள் விரும்பின் உன் குடி அழியும்.
166
உன்னிடம் இல்லை என்பதற்காகப் பிறர் பொருளை விரும்பாதே.
167
பிறர் பொருளைக் கொண்டு செல்வம் சேர்க்காதே.
168
அறம் செய்யாவிடினும் புறங்கூறாதே.
169
அறனல்ல செய்வதிலும் புறங்கூறல் தீது.
170
புறங்கூறி வாழ்வதைவிட சாதல் ஆக்கம் தரும்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 151-160

Tuesday, August 23, 2011

Vaazhviyal unmaigal aayiram 151-160 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 151-160

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 17, 2011


151 பொறுத்தவரைப் பொன்போல் போற்றுவர்.
152
ஒறுத்தால் ஒருநாள் இன்பம்; பொறுத்தால் என்றும் புகழ்.
153
பிறர் திறனல்ல செய்யினும் நீ அவர்க்கு அறனல்ல செய்யாதே.
154
செருக்கினை வெல்ல பொறுத்தலே வழி.
155
தீச்சொல் தாங்குவோர் துறவியினும் தூயர்.
156
தீச்சொல் பொறுத்தலே உண்ணா நோன்பினும் பெரிது.
157
அழுக்காறு இன்மையே ஒழுக்காறு ஆகும்.
158
அழுக்காறு இன்மைக்கு இணை ஏதும் இல்லை.
159
பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்பட்டால் அறன் ஆக்கம் வராது.
160
பொறாமையால் வரும் துன்பம் அறிந்தோர் அல்லவை செய்யார்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 141-150

Vaazhviyal unmaigal aayiram 141-150: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 141-150

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 16, 2011


141 பிறர் மனைவியை விரும்பாதவரே அறவாணர்.
142
எத்தகைய பெரியோரும் பிறன்மனை புகுந்தால் சிறியோனே.
143
பிறர் மனைவியை நாடுவோனைப் பழி நாடும்.
144
பிறர் மனைவியை விரும்பினால் பகை பாவம் அச்சம் பழி வரும்.
145
பிறர்மனைவியை விரும்பா வாழ்வே அறவாழ்வு.
146
பிறர் மனைவியைத் தழுவாதவரே அறத்தைத் தழுவியவர்.
147
அறம் செய்தலினும் நன்று பிறர் மனைவியை விரும்பாமை.
148
தோண்டுநரைத் தாங்கும் நிலம்போல் இகழ்வாரைத் தாங்குக.
149
பிறர் தீங்கைப் பொறுத்தலினும் மறத்தல் நன்று.
150
அறிவின்றித் தீங்கிழைப்போரைப் பொறுத்தலே வலிமையுள் வலிமையாகும்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

Vaazhviyal unmaigal aayiram 131-140 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 131-140

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 15, 2011


131 ஒழுக்கத்தைக் காத்தால் எல்லா இடத்திலும் துணையாய் வரும்.
132 ஒழுக்கமுடைமையே உயர்குடிமை.
133 கற்றது மறந்தால் மீண்டும் கற்கலாம்; ஒழுக்கம் தவறின் தவறியதுதான்.
134 அழுக்காறு உடையவனிடம் ஆக்கம் சேராது.
135 ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு வராது.
136 இழிவின் துன்பம் அறிந்து ஒழுக்கம் தவறார் உயர்வோர்.
137 நல்லொழுக்கம் நன்றே தரும்.
138 தீயொழுக்கம் துன்பமே விளைவிக்கும்.
139 ஒழுக்கமுடையார் தவறியும் இழிந்தன பேசார்.
140 உலகத்தாரோடு இணங்கி வாழ்தலே உண்மைக்கல்வி.

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் (121-130)

Saturday, August 13, 2011

vaazhviyal unmaigal aayiram 121-130 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 121-130

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13497  பதிவு செய்த நாள் : August 13, 2011


121 நடுவுநிலைமை வாணிகமே அற வாணிகம்.
122
அடக்கம் உடையவர் தோற்றம் மலையிலும் உயர்வு.
123
நாவைக் காக்காதோர் துன்பத்தைச் சேர்ப்பர்.
124
தீச்சொல் ஒன்றாயினும் நன்றெல்லாம் நீங்கி விடும்.
125
தீச்சூடு ஆறும்; நாச்சூடு ஆறாது.
126
அடக்கமுடையவரைத் தேடி அறவாழ்வு வரும்.
127
பணிதல் செல்வர்க்கும் செல்வமாகும்.
128
அடக்கம் பெருமை தரும்.
129
அடங்காமை சிறுமை தரும்.
130
நல்லொழுக்கத்தை உயிரினும் மேலாய் மதிப்பீர்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

Friday, August 12, 2011

Vaazhviyal unmaigal aayiram 111-120 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 111-120

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13444   பதிவு செய்த நாள் : August 12, 2011


111 பிறர் செய்யும் துன்பம் அவர் முன்பு செய்த நன்மையை நினைத்தால் மறந்து போகும்.
112
எந்நன்றி கொன்றாலும் செய்ந்நன்றி கொல்லாதே.
113
நடுவுநிலைமையை அனைவரிடமும் காட்டுக.
114
நடுவுநிலையாளர் செல்வமே வழிமுறையினருக்கும் பாதுகாப்பு.
115
நடுவுநிலையின்றி வருவது ஆக்கமாயினும் அன்றே ஒழி.
116
விட்டுச் செல்லும் பெயரே தக்கவரைக் காட்டும்.
117
நடுவுநிலை தவறாத நெஞ்சமே சான்றோர்க்கு அணி.
118
நடுவுநிலை தவறின் கேடு உறுதி.
119
நடுவுநிலையாளர் தாழ்வை இழிவாக எண்ணாது உலகு.
120
சொல்தவறாமை மனம் கோணாமையுடன் இணையவேண்டும்.

Thursday, August 11, 2011

vaazhviyal unmaigal aayiram 101-110: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 101-110

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13343 பதிவு செய்த நாள் : August 11, 2011
.

101 இன்சொல் எக்காலமும் இன்பம் தரும்.
102
இன்சொல் இனிமை தருகையில் வன்சொல் எதற்கு?
103
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஈடாகா.
104
உற்றநேரத்து உதவி சிறிதாயினும் உலகத்தினும் பெரிதே.
105
பயன்கருதாமல் செய்யும் உதவி பாற்கடலினும் பெரிது.
106
திணையளவு செயலும் பயன்தெரிவார்க்குப் பனையளவாகும்.
107
உதவியின் அளவு உதவப்பட்டோரின் உயர் எண்ணத்தைப் பொறுத்ததே.
108
தூயவர் உறவை மறக்காதே.
109
துன்பத்துள் துணையாவோர் நட்பை இழக்காதே.
110
கண்ணீர் துடைத்தவர் நட்பைக் காலமெல்லாம் போற்றுக.

Wednesday, August 10, 2011

vaazhviyal unmaigal aayiram 91-100: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 91-100

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13242   பதிவு செய்த நாள் : August 10, 2011


91 அன்புடையவர் பிறர்க்கென எல்லாம் தருவர்.
92
அன்பு அறத்திற்கும் துணை; மறத்திற்கும் துணை.
93
அன்பு இல்லாதவரை அறமே வருத்தும்.
94
அன்பின் வழியே உயிர்கள் நிலைத்திருக்கும்.
95
சாவா மருந்தாயினும் விருந்தினருடன் உண்க.
96
விருந்தோம்ப இயலாமையே வறுமையாகும்.
97
விருந்தினரைப் போற்றுவோன் வருந்துவது இல்லை.
98
மனமுவந்து கொடுப்பதைவிட முகமலர்ச்சி மேலானது.
99
அனைவரிடமும் இன்சொல் கூறுவோர் துன்பத்தைத் துரத்துவர்.
100
இனியன பேசின் அல்லவை தேயும்; அறம் பெருகும்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்  81-90

Tuesday, August 9, 2011

vaazhviyal unmaigal aayiram 81-90: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 81-90

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13078  பதிவு செய்த நாள் : August 9, 2011
..

81        நீக்க வேண்டியது பழிச்செயலே.
82      அற வழியிலான இன்பமே உண்மை இன்பம்.
83        பின்னர் செய்ய எண்ணுவது அறம் அன்று.
84        அன்றன்றே ஆற்றுவது அறம்.
85        பழிக்கு அஞ்சிப் பகுத்துண்டு வாழ்க.
86        இல்வாழ்வே அறவாழ்வு.
87        இல்லறத்தான் பணி தவமிருப்போரின் பணியினும் சிறந்தது.
88        வாழ்வாங்கு வாழ்பவர் வானவர்க்கு ஒப்பாவர்.
89        மனைமாட்சிக்கு அழகு மக்கள்பேறு.
90        அன்பிலார் எல்லாப் பொருளும் தம் பொருள் என்பர்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 71 – 80

Thursday, August 4, 2011

Vaazhviyal unmaigal aayiram 71-80: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 71-8

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=12970  பதிவு செய்த நாள் : August 4, 2011


71. சிறப்பும் செல்வமும் தருவது அறனே.
72. அறத்தைவிட வேறு ஆக்கம் இல்லை.
73. அறத்தை மறப்பதைவிட வேறு கேடு இல்லை.
74. இயன்ற வழியில் எல்லாம் அறம் செய்க.
75. மனமாசின்றி இருத்தலே அறமாகும்.
76. அழுக்காறு அகற்றி அறவாழ்வு வாழ்க.
77. அவாவினை நீக்கி அறப்பாதையில் செல்க.
78. வெகுளியைப் போக்கி அறநெறியில் நிற்க.
79. இன்னாச்சொல் அகற்றி அறமே போற்றுக.
80. செய்ய வேண்டியது அறச் செயலே.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 61 – 70

Wednesday, August 3, 2011

vaazhviyal unmaigal aayiram 61-70: வாழ்வியல் உண்மைகள் 61-70

வாழ்வியல் உண்மைகள் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=12877 பதிவு செய்த நாள் : August 3, 2011


61. கொடுப்பதும் மழையே; கெடுப்பதும் மழையே.
62. உணவாவதும் உணவைத் தருவதும் மழையே.
63. மரங்களை வளர்த்து மாசினைப் போக்கு.
64. மழைத்துளி இல்லையேல் புல் பூண்டும் இல்லை.
65. வானம் வறண்டால் வானவர்க்கும் பூசை இல்லை.
66. வானம் வழங்காவிடில் தானமும் இல்லை.
67. அறிவு வலிமையால் ஐம்புலன் காப்போர் வையகத்தின் வித்து.
68. செய்ய இயலாதவற்றையும் செய்வோரே பெரியோர்.
69. செய்யக் கூடியதையும் செய்யமாட்டாதார் சிறியோர்.
70. அந்தணர் என்போர் அறவோரே. (ஆரியர் அல்லர்).
வாழ்வியல் உண்மைகள் 51-60

Tuesday, August 2, 2011

vaazhiviyal unmaigal 51-60 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 51-60

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=12759 பதிவு செய்த நாள் : August 2, 2011

 
51. உயர்ந்தோர் போற்றுக.
52. நிலத்தைவிடப் பெரிதாக வானைவிட உயர்வாக அன்பு கொள்க.
53. கற்றவர்க்கு எங்கும் சிறப்பு.
54. கற்றவரை மறந்து செல்வம் உற்றவரைப் போற்றாதே.
55. பண்பாளரை மறந்து பணம் உடையவரைப் போற்றாதே.
56. சான்றோரைச் சேர்ந்தால் சான்றோர் ஆவாய்.
57. சிறியோரைச் சேர்ந்தால் சிறியோன் ஆவாய்.
58. பெரியார் துணை பெருமை தரும்.
59. சிற்றினம் சேர்தல் இழிவு தரும்.
60. புலி, யானை வேட்டையில் தோல்வியுற்றால், எலியை வேட்டையாடப்
போகாது.
வாழ்வியர் உண்மைகள் ஆயிரம் 41 – 50

Monday, August 1, 2011

vaazhviyal unmaigal aayiram 31-40: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 31-40

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=12551  பதிவு செய்த நாள் : July 30, 2011


31. தீயவழியில் பணம் சேர்க்காதே.
32. மதிக்காது கொடுப்பதை மான உயர்வினர் பெறார்.
33. நட்பைப் பெரிதாய்ப் போற்றுக.
34. செல்வத்தின் பயன் சுற்றம் சூழ வாழ்தல்.
35. இருப்பது கொண்டு சிறக்க வாழ்க.
36. முயற்சி கொண்டு பெருக்கி வாழ்க.
37. இல்லாமையை இல்லாமல் ஆக்குக.
38. தூய்மையான எண்ணம் கொள்க.
39. வாய்மையுடன் வாழ்க.
40. சொல்லுவது போல் செய்க.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 21-30

vaazhviyal unmaigal aayiram 41-50: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 41-50

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=12654  பதிவு செய்த நாள் : August 1, 2011


41. எண்ணம் போல் வாழ்வு.
42. விட்டுக் கொடுத்து வாழ்வீர்.
43. ஒரு முறை உதவியதால் மறு முறை உதவ மறுக்காதே.
44. தோல்வியை ஒப்புக் கொள்ளல் உயர்ந்த பண்பு.
45. நன்றே நினை ; நன்றே செய்; நன்றாய் வாழ்க,
46. நன்றியை நினைந்து வாழ்க.
47. நன்றல்லதை மறந்து வாழ்க.
48. ஊன் உண்ணாமல் உயிர்களைப் பேணுக.
49. உண்டி கொடுத்தல் உயிர் கொடுத்தலாகும்.
50. உற்றுழி உதவுக.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 31 – 40

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 21-30

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=12471 பதிவு செய்த நாள் : July 29, 2011



21. துன்புறுத்துபவர் துன்பம் காண்பார்.
22. செல்வம் பிறருக்கு உதவவே.
23. தானும் பயன்படுத்தாத பிறருக்கும் உதவாத செல்வரை விட ஏழையே
செல்வந்தன்.
24. செய்க பொருளை.
25. அறவழியில் பொருள் ஈட்டுக.
26.  பிறரை உயர்த்த நீ உயர்வாய்.
27. பிறர் வாழ நீ வாழ்வாய்.
28. மறதியை மற.
29. விலையை மிகுதியாகப் பெறாமல் பொருளைக் குறைவாகக் கொடுக்காமல்
வாணிகம் செய்க.
30. குறுக்கு வழியில் பணம் தேடாதே.
வாழ்வியல் உண்மைகள் 11 – 20

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 11-20

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=12192  பதிவு செய்த நாள் : July 27, 2011


11.  வாழ்க்கைத் துணை என்றும் ஒருவரே.
12.  காற்று, உணவு, மொழி முதலியவற்றில் தூய்மை பேணுவீர்.
13.  சுற்றுப்புறத் தூய்மையே நலவாழ்விற்கு அடிப்படை.
14.  உண்மை பேசி உள்ளத்தைத் தூய்மை ஆக்குவீர்.
15.  அன்பே வாழ்வின் அடிப்படை.
16.  அருள் வாழ்வே அறவாழ்வு.
17.  நல்லது செய்யாவிட்டாலும் தீயது செய்யாதே.
18.  சான்றோன் ஆக்குதல் பெற்றோர் கடமை.
19.  நல்லொழுக்கம் தருதல் ஆளுவோர் கடமை.
20.  செல்வம் அழியும் ; அறிவு அழியாது.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்  1 – 10

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 1-10

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=12084 பதிவு செய்த நாள் : July 26, 2011


நாள்தோறும் சில………..
1.  எல்லா ஊரும் நம் ஊரே ; எல்லா நாடும் நம் நாடே.
2.  அனைவரும் நம் உறவினர்.
3.  தீமைக்கும் நன்மைக்கும் நாமே காரணம்.
4.  பெரியோர் என யாரையும் வியந்து போற்றாதீர்.
5.  சிறியோர் என யாரையும் இகழாதீர்.
6.  தன்னலமாய் வாழாதீர்.
7.  பிறர் நலம் பேணி வாழ்வீர்.
8.  துன்பம் கண்டு துவளாதவரே வெற்றி காண்பார்.
9.  உள்ளம் உயர்வானால் வாழ்வும் உயரும்.
10. வெற்றி கண்டு மயங்காதீர்.

Followers

Blog Archive