Thursday, September 29, 2011

Vaazhiviyal unmaikal aayiram 371-380 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 371-380

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 29/09/2011371 உலகம் எள்ளாததை எண்ணிச் செய்க.
372 செயல் வலிமையுடன் தன்வலிமை, மாற்றான் வலிமை, இருவர்க்கும் உதவுநர்  வலிமை அறிந்து செய்க.
373 முடியக் கூடியதை அறிந்து செய்தால் முடியாதது எதுவுமில்லை.
374 வலிமையறியாத ஊக்கம் கேடு தரும்.
375 தன்னை மிகுதியாய் மதிப்பிடுபவன் விரைவில் கெடுவான்.
376 மெலியோர் சேர்க்கையும் வலிமையாகும்.
377 அளவு கடந்த ஊக்கமும் அழிவே தரும்.
378 வரும் வழி அறிந்து கொடுத்தால் வளம் பெருகும்.
379 வரவிற்கேற்ப செலவினைச் சுருக்கினால் கேடு இல்லை.
380 வருவாய் அளவை அறியாதாவனின் வளம் இல்லாமல் போகும்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 361-370)
 

Wednesday, September 28, 2011

Vaazhviyal unmaikal aayiram 361-370: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 361-370

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 28/09/2011361 அழிவு, ஆக்கம், ஊதியம் கருதிச் செய்க.
362 அருந்துணையுடன் ஆராய்ந்து செய்தால் ஆகாதது ஒன்றும் இல்லை.
363 முதல் இழக்கும் ஆக்கம் அறிவுடையார் கொள்ளார்.
364 இழிவு கண்டு அஞ்சுவோர் தெளிவின்றித் தொடங்கார்.
365 வழிவகை ஆராயாது செய்தல் பகைவர்க்கு இடம் கொடுக்கும்.
366 செய்யக்கூடாததைச் செய்தால் கேடு வரும்.
367 செய்ய வேண்டியவற்றைச் செய்யாவிட்டாலும் கேடு வரும்.
368 எண்ணித் துணிக; துணிந்த பின் எண்ணாதே.
369 முறையற்ற முயற்சி பலர் துணைபுரிந்தாலும் வீணாகும்.
370 அவரவர் தன்மைக்குப் பொருந்தா நன்மையும் தவறாகும்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 351-360)

Vaazhviyal unmaikal aayiram 351-360: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 351-360


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 27/09/2011
351 நல்லவர் தொடர்பைக் கைவிடுவது பலரின் பகையினும் பன்மடங்குத்   தீமையாகும்.
352 சிற்றினம் கண்டு அஞ்சுவதே பெருமை.
353 சிற்றினத்தைச் சுற்றமாக்குவது சிறுமை.
354 சேர்க்கையைப் பொறுத்தே அறிவு அமையும்.
355 மனத்தால் அமையும் உணர்ச்சி; இனத்தால் அமையும் தன்மை.
356 மனத் தூய்மையும் செயல் தூய்மையும் இனத் தூய்மையால் அமையும்.
357 இனத் தூய்மையால் ஆகாத நல்லது எதுவுமில்லை.
358 மனநலம் ஆக்கம் தரும்; இனநலம் புகழ் தரும்.
359 மனநலம் இருப்பினும் இனநலமே பாதுகாப்பு.
360 நல்லினமே நல்ல துணைங் தீயினமே மிகுந்த துன்பம்.

Monday, September 26, 2011

vaazhviyal unmaikal aayiram 341-350 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 341-350

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 26/09/2011341 செய்யக் கூடாததைச் செய்பவன் செல்வம் அழியும்.
342 உன்னை நீயே புகழாதே.
343 நன்மை தராதவற்றை விரும்பாதே.
344 அறனறிந்த அறிவுடையாருடன் பழகு.
345 வந்த துன்பம் நீக்கி வரும் துன்பம் காப்போரைப் போற்றுக.
346 பெரியோரைப் பேணுதலே சிறந்த செயல்.
347 நம்மைவிடப் பெரியார் வழி நிற்றல் வலிமையுள் வலிமையாகும்.
348 இடித்துரைப்பாரைத் துணையாகக் கொண்டால் கெடுப்பார் யாருமிலர்.
349 இடித்துரைப்பார் இல்லையேல் தானே கெடுவான்.
350 முதல் இல்லையேல் ஊதியமும் இல்லை.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 331-340)Friday, September 23, 2011

Vaazhviyal unmaikal aayiram 331-340 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 331-340


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/09/2011


331 உலகத்தைத் தழுவி வாழ்வது அறிவு.
332 அறிவுடையார் நிகழக்கூடியதையும் அறிவர்.
333 அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாதிருத்தல் அறிவின்மை.
334 அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல்அறிவுடைமை.
335 வருமுன் காக்கும் அறிவாளருக்குத் துன்பம் இல்லை.
336 அறிவு இருப்பின் எல்லாம் இருக்கும்.
337 தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி நாணுக.
338 குற்றம் அழிவு தரும் பகை.
339 வரும் முன்னர்க் காக்காதவன் அழிவான்.
340 உன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்க.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 321-330)

Thursday, September 22, 2011

vaazhviyal unmaikal aayiram 321-330: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 321-330

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 22, 2011321 கற்காவிட்டாலும் கேட்க.
322 ஒழுக்கம் உடையார் சொல் ஊன்றுகோலாய் உதவும்.
323 நல்லவை கேட்டால் பெருமை சேரும்.
324 கேட்டறியாச் செவி கேளாச் செவியே.
325 செவிச்சுவை உணராதோர் இறந்தென்ன? இருந்தென்ன?
326 அறிவே அழிவிலிருந்து காக்கும் கருவி.
327 அறிவே பகைவராலும் அழிக்க முடியாத அரண்.
328 நன்மையின் பக்கம் செலுத்துவது அறிவு.
329 சொல்வது யாராயினும் உண்மைப் பொருள் காண்பதே அறிவு.
330 நுண்ணியன கேட்டு எளிமையாய்ச் சொல்லல் அறிவு.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 311-320)

Wednesday, September 21, 2011

vaazhviyal unmaikal aayiram 301-310: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 301-310

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 20, 2011
301. நடுவுநிலையுடன் காப்போர் மக்கட்கு இறை.
302. இடித்துரை பொறுக்கும் தலைவனின் கீழ் உலகம் தங்கும்.
303. கற்கவேண்டியவற்றைத் தீதின்றிக் கற்க வேண்டும்.
304. நம் குற்றம் நீங்கக் கற்க வேண்டும்.
305. கற்றதைப் பின்பற்றி வாழ்க.
306. கலையும் அறிவியலும் இரு கண்கள்.
307. கற்றவரே கண்ணுடையவர்.
308. அறிஞர் மகிழுமாறு கூடி வருந்துமாறு பிரிவர்.
309. கற்க கற்க ஊறும் அறிவு.
310. கற்றவர்க்கு எல்லா ஊரும் தம் ஊரே.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 291-300)


Vaazhviyal unmaikal aayiram 311-320: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 311-320

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 21, 2011


311 சாகும்வரையும் கற்க வேண்டும்.
312 ஒரு பொழுது கற்பது எப்பொழுதும் உதவும்.
313 கல்வியே கேடற்ற சிறந்த செல்வம்.
314 கற்றார் முன் சொல்லாவிடில் கல்லார் நல்லார்.
315 கல்லார் சிறப்பைக் கற்றோர் ஏற்கார்.
316 கல்லாதவர் களர்நிலம் ஆவர்.
317 நல்லார் வறுமையிலும் கல்லார் செல்வம் தீங்கானது.
318 கற்றவரே உயர்ந்தோர்.
319 கல்லா மக்கள் விலங்கு அனையர்.
320 செவிச்செல்வம் சிறந்த செல்வம்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்  301-310)
 

Monday, September 19, 2011

Vaazhviyal unmaikal aayiram 291-300: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 291/300

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 19, 2011


291. ‘நான்’, ‘எனது’ என்னும் செருக்கினை ஒழிப்போர் உயர்ந்தோர் உலகம் புகுவர்.
292. பற்றினைப் பற்றாதவரைத் துன்பங்கள் பற்றா.
293. பற்றினை விடப் பற்றற்றவரைப் பற்றுக.
294. சொல்லப்படுவது எத்தன்மையாயினும் அதன் உண்மைப் பொருள் காண்பதே அறிவு.
295. வேண்டாமையே சிறந்த செல்வம்.
296. ஆசைக்கு அஞ்சுவதே அறமாகும்.
297. ஆசை இல்லையேல் துன்பமும் இல்லை.
298. வேண்டுவன கிட்டா; வேண்டாதவை போகா; இதுவே ஊழாகும்.
299. நன்மையே ஏற்போர் தீயவற்றையும் தாங்குக.
300.ஆள்வோர் எளிமையாயும் இனிமையாயும் இருக்க வேண்டும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 281-290)

Saturday, September 17, 2011

Vaazhviyal unmaikal aayiram 281-290:வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 281-290


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 17, 2011281 துறவியிலும் உயர்ந்தவன் கொல்லாமை பேணுபவன்.
282 தன்னுயிர் போவதாயினும் பிற இன்னுயிர் போக்காதே.
283 கொன்றால் வரும் ஆக்கம் இழிவானதே.
284 நிலையற்றதை நிலையென எண்ணுவது அறியாமை.
285 சிறுகச் சிறுகச் சேருவதும் மொத்தமாகப் போவதும் செல்வத்
திற்கு இயல்பு.
286 நிலையற்ற செல்வம் பெற்றால் நிலையான அறம் உடனே செய்க.
287 நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் நிலையாமையே நிலைத்த உண்மை.
288 உறங்குவதும் விழித்தலும் போன்றது இறத்தலும் பிறத்தலும்.
289 எதன் எதன் மீதான பற்றை நீக்குகிறோமோ அதன் அதனில் இருந்து துன்பம்
இல்லை.
290      ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி வாழ்க.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 271-280)


Friday, September 16, 2011

Vaazhviyal unmaikal aayiram 271-280: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் : 271-280

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 16, 2011271 பிறர் துன்பத்தையும் தன் துன்பமாகக் கருதுவதே அறிவின் பயன்.
272 உனக்குத் தீயன எனக் கருதுபவற்றைப் பிறருக்குச் செய்யாதே.
273 எவர்க்கும் எப்பொழுதும் எவ்வழியிலும் தீங்கு செய்யாதே.
274 பிறருக்குச் செய்யும் தீமை உனக்கே திரும்பும்.
275 துன்பம் செய்தவர் துன்பமே அடைவார்.
276 துன்பம் வேண்டாம் எனில் துன்பம் செய்யாதே.
277 கொல்லாமையே உயர் அறமாம்.
278 பகுத்துண்டு வாழ்தலே தலைசிறந்த பண்பாம்.
279 பொய்யாமையினும் நன்று கொல்லாமையே.
280 கொல்லா வழியே நல்ல வழியாகும்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 261-270)Vaazhviyal unmaikal aayiram 261-270: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் : 261-270

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 15, 2011


261 சினம் கொண்டார் பிழைப்பது அரிது.
262 சினம் உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடுதரும்.
263 சினம் கொண்டவர் இனத்திற்கே துன்பம் தரும்.
264 தீப் பிழம்பு போன்ற தீமை செய்தாலும் சினம் கொள்ளாதே.
265 வெகுளியை மறந்தால் எண்ணியதை வெல்லலாம்.
266 சினம் உடையார் உயிர் இழந்தார்; சினம் இழந்தார் உயிர் உடையார்
போல்வர்.
267 செல்வமே கிடைத்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே.
268 துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாமையே சிறந்தது.
269 தீமை செய்தவர்க்குச் செய்யும் தீமையும் தீதே.
270 துன்புறுத்துவோர்க்குத் தண்டனை நன்மை செய்தலே.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 251-260)


Tuesday, September 13, 2011

vaazhviyal unmaikal aayiram 251-260: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 251–260

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 

251–260: திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 13, 2011251 வாய்மை என்னும் அறம் செய்தால் பிற அறம் எதுவும் தேவையில்லை.
252
நீரால் உடல் தூய்மை ஆவது போல் உண்மையால் உள்ளம் தூய்மை ஆகும்.
253
சான்றோர்க்கு உண்மை என்னும் விளக்கே உண்மையான விளக்கு ஆகும்.
254
உண்மை பேசுவதைவிட உயர் அறம் வேறு இல்லை.
255
எளியோரிடமும் வலியோரிடமும் சினம் தீமையே தரும்.
256
தீயன தரும் சினத்தை மற.
257
மகிழ்ச்சியைக் கொல்லும் சினமே நமக்குப் பகை.
258
உன்னைக் காக்க வேண்டும் என்றால் சினத்தில் இருந்து காத்துக் கொள்க.
259
சினம் கொண்டவனையே கொல்லும்.
260
சினத்தின் அழிவு இனத்திற்காகும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 241-250)


Friday, September 9, 2011

vaazhviyal unmaikal aayiram 241-250: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்: 241-250

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 9, 2011


241 பொருள்¢ ஆசையில் திருடுபவன் அருளும் அன்பும் கொண்டு வாழ முடியாது.
242
திருட்டு ஆசை உடையோர் ஒழுக்கமுடையராய் வாழமாட்டார்.
243
களவு அறிந்தோர் நெஞ்சில் வஞ்சனையே நிலைக்கும்.
244
களவு வாழ்க்கை அழிவு வாழ்க்கை.
245
தீமை விளைவிக்காத சொல்லே வாய்மையாகும்.
246
குற்றம் இல்லாத நன்மையைப் பிறருக்குத் தரும் பொய்யும் வாய்மையாகும்.
247
மனமறிய பொய் சொன்னால் மனமே துன்புறுத்தும்.
248
பொய் சொல்லா உள்ளத்தான் உலகத்தார் உள்ளத்துள் உள்ளான்.
249
தானம் தவம் இரண்டையும் விட வாய்மையே சிறந்தது.
250
பொய்யாமை ஒன்றே எல்லா அறப் பயன்களையும் தரும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 231 – 240)

Thursday, September 8, 2011

Vaazhviyal unmaikal aayiram 231-240: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 231-240

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 8, 2011
231 துன்பம் பொறுத்தலும் செய்யாமையுமே தவமாகும்.
232
ஆக்கமும் அழிவும் தவத்தால் வரும்.
233
சுட்டால் சுடரும் பொன்போல் துன்பம் பட்டால் ஒளிர்வர்.
234
தன்னலம் அற்றவரை மன்னுயிர் தொழும்.
235
உலகம் பழித்ததை ஒழித்தால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலும் வேண்டா.
236
கூடா ஒழுக்கம் கேடாய் முடியும்.
237
பிறரால் எள்ளப்பட வேண்டாதவன் கள்ளத்தனத்தில் இருந்து தன் நெஞ்சைக்  காக்கவும்.
238
திருட எண்ணுவதும் தீது.
239
திருட்டுச் செல்வம், பெருகுவது போல் தோன்றினாலும் அழியும்,
240
திருட்டு ஆசை தீராத் துன்பம் தரும்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 221 -230

Followers

Blog Archive