Sunday, October 14, 2018

தமிழ்க்கையொப்ப நீள் பதாகை



தமிழ்க்கையொப்ப நீள் பதாகை


பரிதி இளம் வழுதி பற்றிய நினைவுக் குறிப்பு ஒன்று.

 பரிதி இளம் வழுதி செய்தித்துறை அமைச்சராக இருந்த பொழுது நான், கலைபண்பாட்டுத்துறை, தென்னகப் பண்பாட்டுமையம் சார்பில் நடத்திய பொங்கல் கலைவிழாவிற்கு அழைத்திருந்தேன்தமிழில் கையொப்பமும் சுருக்கொப்பமும் இடுவதை வலியுறுத்தி அனைவரிடமும் கையொப்பம் பெறும் வகையில் நீள்பதாகையை வைத்திருந்தேன்அதில் முதல் கையொப்பம் இட்டுத் தொடக்கி வைக்க வேண்டும் என வேண்டியிருந்தேன். கண்டிப்பாக வருவதாகக் கூறினார். அழைப்பிதழையும் நேரில் அளிக்க நேரம் கிடடவில்லை. விழாவன்று தொலைபேசிவழி நினைவூட்டினேன். நண்பர்களுடன் வருவதாகக் கூறினார.
சரியான நேரத்திற்கு வந்தார். அவர் உடன் நடிகர் குமரிமுத்துவும் கட்சியினர் சிலரும் வந்திருந்தனர். இதில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்பதற்காக நண்பர்களையும் அழைத்து வந்திருப்பதாகவும் தொடர்ந்து மேலும் நண்பர்களை அனுப்பி வைப்பதாகவும் கூறி இம்முயற்சியைப் பாராட்டினார்5 நாள் விழாவின்பொழுது சென்னைக் கடற்கரையில் கண்ணகி சிலையிலிருந்து திருவள்ளுவர் சிலை வரை உள்ள தொலைவில் பதாகை வைத்திருந்தோம். அவர் சொன்னதுபோல் பிற நாள் சிலர் அவர் மூலம் அறிந்து வந்ததாகக் கூறினர். பெயருக்கு நிகழ்ச்சிக்கு வந்துபோகாமல், ஈடுபாட்டுடன் பங்கேற்றுப் பிறரையும் பங்கேற்கச் செய்த அவரது தமிழ் உணர்வு பாராட்டத்தக்கது.
 ஆனால், அப்பொழுது புதியதாகத் துறைச் செயலர் பொறுப்பேற்ற ... அதிகாரி, நேர்மையில்லாத துணைச்செயலர் கருத்தினை நம்பி, “இது தமிழ்வளர்ச்சித்துறை வேலை, கலைபண்பாட்டுத்துறை மூலம் ஏன் செய்ய வேண்டும்என்றார். “தமிழ் அனைவருக்கும் பொதுவானது. கலையில் இயற்கலையும் அடங்கும்/ கலை வழியாகவும் தமிழ் வளர்த்தலே துறையின் கடமைஎன்றேன்.
 “நான் இவ்வாறு செய்வதை வரவேற்கின்றேன். ஆனால் தமிழ் வளர்ச்சித்துறைதான் செய்ய வேண்டும். நம் துறையின் வேலை இதுவல்லஎன்றார். ஆனால், காலையில்  நடைப்பயிற்சி செல்பவர்களும் கையொப்பமிட்டு ஒருவருக்கொருவர் தகவல்  தெரிவித்துப் பலரும் கையொப்பமிட்டனர்ஊக்கப்படுத்த வேண்டிய மேலதிகாரி புறக்கணிக்கும் பொழுது (அப்போதைய) அமைச்சர் பரிதி இளம் வழுதி இளம் வழுதி ஆர்வம் காட்டியதால் மறக்கமுடியாகத நினைவுகளில் ஒன்றாக இஃது அமைந்து விட்டது.


நினைவுப் பகிர்வில் இலக்குவனார் திருவள்ளுவன்

No comments:

Post a Comment

Followers

Blog Archive