(சட்டச் சொற்கள் விளக்கம் 876-880 தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 881-885
881. animus manendi | தங்குகை நோக்கம் நிலை இருப்பிட நோக்கம் ஓரிடத்தில் காலரையறையின்றித் தங்கி அவ்விடத்தைத் தன் நிலையான இருப்பிடமாக ஆக்க எண்ணும் அகநிலை நோக்கமாகும். animus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள், உணர்வு, மனம், துணிவு, சினம் முதலியன. இச்சொல் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் குறிக்க மற்ற சொற்களுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது. manendus என்னும் சொல்லில் இருந்து உருவான வடிவமே manendi என்பது. இதன் பொருள் இருத்தல், இருப்பிடம், வசிப்பிடம் என்பன. எனவே இத்தொடரின் பொருள் நிலையான இருப்பிடத்தை நிறுவும் நோக்கம். அஃதாவது, குறுங்காலமாக இடப்பெயர்வு மேற்கொண்டாலும் மீண்டும் திரும்பி வந்து நிலையான தங்குமிடமாகக் கொள்ளுதல், பெரும்பாலும் தனியார் பன்னாட்டுச் சட்டத்தில் (private international law) நிலையான வசிப்பிடத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. |
882. animus nocendi | தீங்கு நோக்கம் சட்டத்திற்கு எதிரான அறிவுடன் செயல்படும் குற்றம் புரியும் ஒருவரின் அகமனநிலையைக் குறிக்கிறது. இலத்தீன் தொடர். காண்க : animus manendi |
883. animus possidendi | உடைமையாக்கும் எண்ணம் சொத்துடைமை வழக்கில் பொருளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருவரின் உடைமையாக்கும் எண்ணத்தைக் குறிக்கிறது. இலத்தீன் தொடர். காண்க : animus manendi |
884. Animus testandi | விருப்பாவண நோக்கம் animus என்னும் இலத்தீன் சொல்லிற்கு விருப்பம், நோக்கம் முதலான பல்வேறு பொருள்கள் உள்ளன. testandi என்னும் இலத்தீன் சொல் விருப்பாவணத்தைக் குறிக்கிறது. விருப்பாவணத்தை எழுதும் போது அஃது இறுதி முறியாகவும் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்பதை இந்த இலத்தீன் தொடர் உணர்த்துகிறது. காண்க : animus manendi |
885. animus revertendi | திரும்புதல் நோக்கம் இடப்பெயர்ச்சி நோக்கம் இல்வளம்படாத காட்டில் வாழ்கிற மாற்றமை Animus revertendi என்பது இலத்தீன் சொற்றொடராகும், இதன் பொருள் “இடமாற்றம் செய்யும் நோக்கத்துடன்” அல்லது “திரும்புவதற்கான நோக்கத்துடன்”. உரிமை வழக்கு, பொதுச் சட்டம் இரண்டிலும் பயன்படுத்தப்படும் சட்டம் சார் சொல், சொந்தமான விலங்குகள், சொந்தமாக இருக்க முடியாத காட்டு விலங்குகளை வேறுபடுத்துகிறது. இது மற்றொருவரின் பேணுகையில் உள்ள காட்டு விலங்கு அல்லாத விலங்கைக் குறிக்கிறது. இது சொத்துச் சட்டத்தால் (property law ) ஏற்கப்பெற்ற ஒரு வகை உடைமை உரிமையாகும். வேலை அல்லது படிப்பு நாடுநரின் aaaகாரணமாக வேட்பாளரின் வசிப்பிடத்தை கைவிடக்கூடாது என்ற நோக்கத்தையும் இந்த சட்டக் கருத்து ஆதரிக்கிறது. காண்க : animus manendi |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment