Showing posts with label சட்டச் சொற்கள் விளக்கம். Show all posts
Showing posts with label சட்டச் சொற்கள் விளக்கம். Show all posts

Wednesday, March 13, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 196 – 200 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 191-195: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம்  196 – 200

196. Absention from intoxicants(குடி) விட்டொழிப்பவர்    

குடிப்பழக்கத்தைக் கைவிடுதல் என்பது மதுபானங்களையும் போதைப்பொருள்களையும் முற்றிலும் தவிர்ப்பதற்கான நடைமுறையாகும்.  

மது பானங்களை அளிக்கும் பொழுது போதையில்லா நல்ல குடிவகைகளை அருந்தலாம்.  

மதி மயக்கம் தருகின்ற, வெறிஊட்டுகின்ற போதைப் பொருள்களை விலக்குதல் என்பது சமயம், நல் வாழ்வு, உடல் நலம், மெய்யியல்,குமுகம் போன்ற எதன் கரணமாகவேனும் இருக்கலாம்.   காண்க: Abstaine  
197.
Absoluta Sententia Expositore Non-Indeget
வெளிப்படை மொழிக்கு விளக்குரை வேண்டா  

வெளிப்படையாகவும் தெளிவாகவும் உள்ள வரிக்கு/கருத்திற்கு விளக்கவுரை தேவையில்லை.  

வெளிப்படையாகப் புரிந்து கொள்ளக்கூடிய தீர்ப்புரைகளுக்குத் தனியே விளக்கம் தேவையில்லை.  

இலத்தீன் தொடர். பல நீதிமன்றத்தீர்ப்புகளில்  இத் தொடர் மேற்கோளாகக் குறிக்கப்பட்டுள்ளது.
198. Absolute  முழுமையான  

 பூரண;முழு; இறுதி; நிபந்தனையற்ற; அறுதி   வரம்பற்ற வரையிலா தனித்த, நிறைவான, முற்று, முற்றுறுதியான  

எந்த நிபந்தனைகளும் வில்லங்கங்கமும் தகுதியும் வரம்பும் இன்றி.  

திருத்தத்திற்கு உட்படாத
முழுமையான.  

அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் எந்தவகைக்கட்டுப்பாடோ தடைக்கட்டோ இல்லாதிருத்தல்.  

வரம்பீடோ, வரைக்கட்டோ எதுவுமின்றி முழுமையான;
மாற்றுகைக்கோ முடிவு கட்டுவதற்கோ உட்பட்டிராத, அறுதிமுடிவான. விற்பனை முற்றுறுதியானது (பி.58, (இ)சொ.மா.ச.)
199. absolute assignment    முழுமையான தீர்ப்பாணை

முழுமைச் சொத்தாவணம்
முழுமையான உளத்தேர்வு உடனிணைந்த உரிமைகளற்ற கடமைகள்  

முழுமையான கொடு பணி    

முழுவுரிமைச் சொத்து
முழுமை நலன்
முழுமைச் சட்டம்
கடும்பொறுப்பு
முழுப்பொறுப்பு
தனிப்பெரும்பான்மை
முழு உரிமையாளர்
முழு அதிகாரம் வரையிலாச் சிறப்புரிமை
முழுஉரிமைச் சொத்து
முழுப் பொறுப்புரிமை,
முழுப் பொறுப்புநிலை
முழுமையான தடை  
  மாற்றாக்கத்தின் பேரில் முழுத் தடை
முழு உரிமை
முழுமையான உரிமைமூலம்  
ஒதுக்கீட்டாளரால் அல்லது உரிமையாளரால் ஒதுக்கீடு பெற்றவர் அல்லது மாற்றுரிமையர், வேறு ஒருவருக்கு மாற்ற இயலாத பரிமாற்றமாகும்.
ஆய்வுத்திட்டம், செயல் திட்டம் போன்ற ஒன்றை ஒப்படைக்கும் பொழுது அதனைக் கொடுபணி எனல் சரியாகும்.
200. Absolute authorityமுழுமை அதிகாரம்  
எவ்வகைக் கட்டுப்பாடும் இன்றி அதிகாரத்தைச் செயல்படுத்தும்
முழுமையான அதிகார நிலை.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, March 10, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 191-195: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 186-190: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம்  191-195

191. absentee          வராதவர்,

இல்லாதவர்  

வசிப்பிடம் அல்லது பணியிடம் முதலான வழக்கமாகக் காணப்படும் இடத்தில் இல்லாதவர்.            
காணாமல் போன ஒருவர் அல்லது எங்கே இருக்கிறார் என அறியப்படாதவர் வருகை தராதவராகக் கருதப்படுகிறார். சமூகம் (Presence) அளிக்காதவர் எனக் குறிப்பிட்டு வந்தனர்.
192. Absentee land lord  வராத /செல்லா நிலக்கிழார்;  

நிலத்தில் தங்கா நிலக்கிழார், வருகைதரா நிலக்கிழார்,   செல்லாக் கிழவன்  

குத்தகைக்கு விடப்பட்ட அசையாத் சொத்தில் இருந்து விலகி இருத்தல் அல்லது சொத்து தொடர்பான எச்சிக்கலையும் நேரடியாகத் தீர்ப்பதற்கு வராதிருத்தல்.
193. Absentee partyவராத தரப்பு  

வழக்கு நடைபெறும் பொழுது வழக்கு நாளன்று கேட்பிற்கு வராத தரப்பார்.
194. Absentee statementவராதோர் பட்டியல்  

வராதவர் விவரம் குறித்த அறிக்கை. எடுத்துக்காட்டாகச் சம்பளம் கோரும்பொழுது  யார் யார் – தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, இசைவின்றி வராமை முதலிய – எக்காரணத்தினால் வரவில்லை என்பது குறித்த விளக்க அறிக்கை.
195. Absenteeismவராமையம்

இராமையம்  

பணி நேரத்தில் தக்கக் காரணமின்றி வராமை குறித்த ஆராய்ச்சி.  
ஒரு குறிப்பிட்ட காலத்தில் தக்கக் காரணமின்றித் தனியர் அல்லது உழைக்கும் மக்கள் குழாம் பணிக்குச் செல்லாது பணியிலிருந்து விலகியிருக்கும் நாள்களின் நிலை.

பாலினம், பதவி நிலை, அகவை நிலை போன்ற ஏதேனும் ஒரு பிரிவினர் பணிக்கு வராதநிலைமை.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்


Wednesday, March 6, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 186-190: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 181-185: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம்  186-190

186. Absence, leave of  வாராததிற்கான அனுமதி  
வராமைக்கான இசைவு  

வர வேண்டிய நேர்வில் உரியவர்களிடம் முன் இசைவு பெற்று வராமையைக் குறிப்பிடுகிறது.
187. Absentஇராத

வந்திராத, இல்லாத  

காண்க: absence   Present என்பது நேர்வந்திருத்தல்/நேர் வருகை எனவே, Absent   என்பது நேர் வராமை.
188. Absent mindedகவனக்குறைவான  

மறதியான

நினைவற்ற
189. Absent on leaveவிடுப்பில் வராமை  

தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு போன்ற முறையான இசைவு பெற்று விடுப்பில் சென்றிருத்தல்.
190.
Absente reo
எதிர்வாதி வராமை    

சாட்டாளி(accused) வராமை,

குற்றஞ்சாட்டப்பட்டவர் வராமை, குற்றவாளி வராமை,
(பிரதிவாதி வராதிருத்தல்‌ – பிரதிவாதி தமிழ்ச்சொல்லன்று)  

இலத்தீன் தொடர்

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, February 29, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 176-180

 





(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 171-175 – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 176-180

176. Absconding personதலைமறைவாயிருப்பவர்  

காண்க: Absconder — தலைமறைவானவர்
177. absconding to avoid summonsஅழைப்பாணை தவிர்ப்புத் தலைமறைவு  
அழைப்பாணையைத் தவிர்க்க தலைமறைவாகுதல் எனப் பொருள்.   இ.த.ச. பிரிவு 172, அழைப்பாணை அல்லது பிற வழக்கு நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காகத் தலைமறைவாக இருத்தலைப்பற்றிக் கூறுகிறது.
178. Absence    வராமை  
வாராதிருத்தல்  

ஆவணங்கள், சான்றிதழ்கள் போன்றவற்றின் இருப்பு குறித்த தகவலில் இன்மை என்னும் பொருளில் வரும். எ.கா. absence of record – ஆவணமின்மை, பதிவுரு இன்மை
  எதிர்பார்க்கப்படும் அல்லது வேண்டப்படும் அல்லது பார்க்கப்படும் ஒன்று இல்லாத நிலை அல்லது இருப்பில்லாத நிலை.  

வழக்கமாக வரக்கூடிய அல்லது எதிர்பார்க்கக்கூடிய இடத்தில் அல்லது உறைவிடத்தில் இல்லாமல் இருப்பது.  

வேலையில் விளக்க முடியாத இல்லா நிலை  

பொருள் வேண்டப்படும் அளவு இல்லாத பற்றாக்குறையையும் குறிக்கும்.  
இல்லாதிருத்தல் (இருப்புப்பாதை சொத்து(சட்ட எதிர் உடைமை) சட்டம் 1966, பிரிவு 3. அ./S. 3(a) RP(UP)A, 1966)

இருத்தலின்மை

இருப்புப் பாதை என்பது இருப்பூர்தித்துறையைக் குறிக்கிறது.  

ஆசரின்மை எனச் சிலர் குறிக்கின்றனர். Hāzir என்னும் உருதுச்சொல்லின் தமிழ்வடிவமே ஆசர் என்பது. இசுலாமியர் ஆட்சியில் இச்சொல் செல்வாக்கு பெற்றிருந்தது. இப்பொழுது மறைந்து வருகிறது. எனவே, இச்சொல்லைப் பயன்படுத்த வேண்டா.
179. Absence from duty  வேலைக்கு வராமை  
விடுப்பு இசைவு எதுவும் பெறாமல் பணிக்குத் தொடர்ந்து வராதிருத்தல்.  
ஒருவேளை எதிர்பாரா நலக்குறைவு, நேர்ச்சிக்கு ஆளாதல், தவிர்க்க இயலாச் சூழல் போன்ற காரங்களால் பணிக்கு வரஇயலாமையைக் கூடிய விரைவில் தெரிவிக்க வேண்டும்.அவ்வாறு தெரிவிக்காமல் அலுவலுக்கு வராதிருத்தல் சட்ட நடவடிக்கைக்குட்பட்ட வராமையே ஆகும்.

இசைவின்றிப் பணிக்கு வராமை  வேலைநிறுத்தமாகவும் கருதப்படும்.
180. Absence of any specific provision to the contrary, in theமாறாகக், குறிப்பிட்டவகைக்கூறு இல்லாத நிலையில்  

கு.ந.தொ.பிரிவு 5:  காப்புரை: இத்தொகுப்பில் உள்ள எதுவும் குறிப்பிட்டவகைக்கூறு இல்லாத நிலையில் நடைமுறையில் உள்ள எந்தச்சிறப்பு விதியை அல்லது உள்ளூர் விதியை அல்லது வழங்கப்பட்டுள்ள எந்தச் சிறப்பு அதிகார வரம்பையோ அதிகாரத்தையோ அல்லது வழங்கப்பட்டுள்ள எந்த நடைமுறையையோ பாதிக்காது.( Section 5 in The Code Of Criminal Procedure, 1973)

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, February 21, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 166-170

 





(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 161-165- தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 166-170

166. Abrogate (வினைச்சொல்)  வழக்கொழியச் செய்
 வழக்கறு; 
அழி ; நீக்கு ; திரும்பப்பெறு முடிவு கட்டு  

நடைமுறையிலுள்ள விதியையோ சட்டத்தையோ பயன்முறையையோ செயல்பாட்டிலுள்ள எதையோ வழக்கொழியச் செய் அல்லது அதற்கு முடிவு கட்டு          
167. Abrogation (பெயர்ச்சொல்)தவிர்த்தல்
வழக்கொழித்தல்
சட்ட நீக்கம்
சட்டத்திருத்தம்  
அதிகார பூர்வமாக இரத்து செய்(தல்) என்பர். இரத்து தமிழ்ச்சொல்லல்ல. இரத்து செய் என்னும் இரு கலப்புச் சொற்களுக்கு மாற்றாக நீக்கு என ஒற்றைத் தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துவதே சிறப்பு.  

முன் இயற்றப்பட்ட சட்டம் ஒன்றை நீக்குதல்
168. Abruptதிடீரென
எதிர்பாராமல்  
எதிர்பாராததும் திடீரென நிகழ்வதுமான செயல்.
169. Abruptly(வினையடை)  திடீரென்று
தொடர்ச்சியற்ற
செங்குத்துச் செறிவு
170. Abscond  தலைமறைவாதல்  

குற்றச் செயல் புரிந்தமைக்காக அல்லது சட்ட மீறலுக்காகப் பிடிபடுவதிலிருந்தோ, தளையிடப்படுதிலிருந்தோ சட்ட நடவடிக்கையிலிருந்தோ தப்பிப்பதற்காக நீதிமன்ற எல்லைக்கு அப்பால் செல்லுதல் அல்லது இயல்பான உருவிலோ மாற்றுருவிலோ தன்னை மறைத்துக்கொள்ளுதல் அல்லது ஒளிந்து கொள்ளுதல்.  

குற்றம் புரிந்த இடத்திலிருந்தும் வசிப்பிடத்திலிருந்தும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக உள்ளூர் நீதிமன்ற வரம்பிற்கு அப்பால் விரைந்து கமுக்கமாக வெளியேறுதல்.  
கடனைத் திருப்பச் செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்காகக், கடனாளியின் வழக்கு தொடுப்பு,
நீதிமன்ற அழைப்பாணை பெறுதல்,
தளையிடப்படல் முதலான சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காக இருப்பிடத்தை விட்டு அகன்று வேறிடத்தில் மறைந்து வாழ்தல்.
மற்றவருடைய/மற்றவர்களுடைய / பொது நிறுவனத்துடைய / அலுவலகத்துடைய/ தனக்குரியதல்லாத பணத்தையோ சொத்தையோ  உரியவர் அல்லது உரிய முறையான இசைவின்றி எடுத்துக்கொண்டு அவர்/அவர்கள் அறியா வேறிடத்திற்குச் சென்று மறைந்து இருத்தல்.

நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர், நீதிமன்றம் குறித்த நாளில் அல்லது வழக்கு நாளில் வரத்தவறினால் அதுவும் தலைமறைவேயாகும்.  

உசாவல் மடல் ( inquiry letter) பெற்ற பின்னர் தொடர்பினைத் துண்டிக்கும் வகையில் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காமல் இருப்பதும் இந்தியச் சான்றுச் சட்டம் பிரிவு 8, விளக்கம் எச்./ Indian Evidence Act. Sec.8, illustration (h) இன்படித் தலைமறைவே.  

கருப்புச்சந்தை தடுப்பு, இன்றியமையாப் பொருள்கள் வழங்கல் சட்டம் 1980 பிரிவு 7, சிறை/காவல் வைப்பு ஆணையிலிருந்து தப்பிப்பவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விளக்குகிறது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, February 18, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 161-165

 




(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 156-160 – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 161-165

161. Abridged editionசுருக்கப் பதிப்பு  
புத்தகத்தின் சுருக்கப்பட்ட பதிப்பாகும். இது முழுமையான நூலல்ல. எனினும் படிக்க நேரமில்லாவிட்டாலும் புத்தகத்தைப் படிக்க ஆர்வம்
 உள்ளவர்களுக்குச் சுருக்கப்பட்ட பதிப்பு உதவியாக இருக்கும். கதையோ புதினமோ கட்டுரையோ நாடகமோ நூலின் சுருக்கமாக இருப்பினும் நூலின் அடிப்படைக் கருத்துகள் வெட்டப்படாமலும் நூலோட்டம் சிதையாமலும் இருக்கும். ( அல்லது இருக்க வேண்டும்.)
162. Abridged formசுருங்கிய வடிவம்  
சில சொற்கள், சில தொடர்கள், சில பத்திகளைத் தவிர்த்துச் சுருக்கிச் செறிவாகத் தருவது சுருங்கிய வடிவம் ஆகும்.  
காண்க: Abridged edition
163. abridged reportசுருக்க அறிக்கை  
திட்ட அறிக்கை அல்லது ஆண்டறிக்கை அல்லது முன்னேற்ற அறிக்கை போன்ற அறிக்கைகளின் சுருக்கிய அறிக்கை.
164. Abridgment        சுருக்கம்
அருக்கம்  
Abbreviation என்பது சொல் அல்லது தொடரின் சுருக்கக் குறியீடே. ஆனால் Abridgment என்பது நூல் அல்லது ஆவணத்தின் சுருக்கப்பகுதி. எனவே Abbreviation என்பதைச் சுருக்கம் என்று சொல்லலாகாது ஆனால், சுருக்கக் குறியீடு எனலாம்.
அருகுதல் = குறைதல், சுருங்குதல் முதலான பொருள்கள் உள்ளன. “அருக்கமாய்ப் பெருக்க மாகி” என்கிறது தேவாரம்.(4.32;7)

மூலப்பொருண்மை மாறாமல் ஒன்றன் பகுதிகள் சிலவற்றை – சொற்கள் அல்லது பத்திகளை நீக்கிவிட்டு அதனைச் சுருக்குதல்.
நூலின் சில பகுதிகளை நீக்கிச் சுருக்கிப் பதித்தல் .   எடுத்துக்காட்டாக,  சுருக்கப்பட்ட அகராதி, சுருக்கப்பட்ட நூலின் பதிப்பு .  

முறை மன்றத்தில் உறுதிமொழி அல்லது சாற்றுரையைச் சுருக்குதல். ஆயத்தர் (Jury) மொழிவுரை(verdict)க்குப் பின்னும் தீர்ப்புரைக்கு முன்னும் வாதுரையைச் சுருக்கி அளிக்க இசைவளிக்கப்படுகிறது.   ஆயர்களின் கருத்துரையையும் இறுதியாக நீதிபதி அல்லது நடுவர் அளிக்கும் முடிபுரையையும் தீர்ப்பு என்றே சொல்வது வழக்கமாக உள்ளது. எனினும் இதனால் குழப்பம்தான் நேருகிறது.  எனவே, ஆயத்தார் தங்கள் கருத்தாக மொழிவதை மொழிவுரை எனலாம். நீதிபதி அல்லது நடுவர் அளிப்பது தீர்ப்புரை.   காண்க : Abridged edition
165. Abroadதொலைவில்,
வெளிநாட்டிற்கு,
வெளியே
பரந்த   ஒரு நாட்டின் எல்லைக்கு அப்பால் எனப் பொருள்.
எனவே, வெளிநாடு என்றாகிறது. அகன்ற பரப்பையும் குறிக்கும்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive