Showing posts with label மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும். Show all posts
Showing posts with label மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும். Show all posts

Sunday, April 19, 2026

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் நிறைவுரை 6 கல்வியகங்கள் தொண்டு நிறுவனங்களாகச் செயற்படுக!

      20 April 2026      



(இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 5: கல்வி முறையை மாற்றுக!: தொடர்ச்சி)

  கல்வியகங்கள் வணிக நிறுவனங்களாக இல்லாமல் தொண்டு நிறுவனங்களாகச் செயல்படும் பொழுதுதான் இவர்களிடையே நல்லுறவு அமையும்; கல்வியிலும் மாணாக்கர்கள் சிறப்பர். ஆசிரியர்கள் பருவத்தேர்வு முடிவுகளின் பொழுது மட்டும் பெற்றோரை அழைக்காமல், சுழற்சி முறையில் தொடக்கக் காலத்திலிருந்தே பெற்றோரை வரவழைத்து மாணாக்கர் கல்விநிலை குறித்துக் கலந்து பேசி அதற்கேற்ப இரு தரப்பாரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மாணாக்கரின் வீட்டுச் சூழல் புரிந்தால்தான் அவர்களை எவ்வாறு வழி நடத்தலாம் என ஆசிரியர்களுக்குத் தெளிவு பிறக்கும்.  கல்வியகங்களில் தங்கள் பிள்ளைகளின் உண்மையான நிலை என்ன எனப்  பெற்றோர் அறிந்தால்தான் அவர்களை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்ற தெளிவு அவர்களுக்குப் பிறக்கும். மாணாக்கர்களின் திறமைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற துறைகளிலும் விளையாட்டு, கலைகளிலும் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இதற்குப் பெற்றோர் – ஆசிரியர் – மாணாக்கர்  சந்திப்பு உதவும்.

  மாணவர்களின் படிப்பார்வம்கற்கும்திறன்புரிதல் உணர்வுதன்னம்பிக்கைஉயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மைவிளையாட்டில் உள்ள ஈடுபாடுகலையார்வம்மந்த நிலைதேர்வு குறித்த அச்சம்தற்கொலை மனப்பாங்கு முதலானவை  பற்றி ஆசிரியர்கள் தொடக்கத்திலேயே பெற்றோர்களிடம் பேசி மாணாக்கர்கள் சிறப்பாகத் திகழ உரிய தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மதிப்பெண் பெறும் இயந்திரமாக மட்டும் மாணாக்கர்களை உருவாக்கும் நோக்கத்தில் பெற்றோர்களிடம் பேசுவதில் பயனில்லை. கல்விக்கூடங்களில் மனவளப் பயிற்சி அளிக்கும் வகையில் பாடத்திட்டம் இருப்பின்மாணாக்கர் சிறப்பர்ஆசிரியர் – பெற்றோர்  –மாணாக்கர் உறவு சீராக அமையும். கற்றலின் இடையே நிற்கும் போக்கும் நின்றுவிடும்.

 கல்வியகங்கள் அழைக்கும் பொழுது பெற்றோர்கள் செல்வதற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் தவறாமல் பெற்றோர் இத்தகைய கூட்டங்களுக்குச் செல்வர். அன்றாட வருவாயைமட்டுமே நம்பி உள்ள பெற்றோர் வருவாய் இழப்பு ஏற்படாத வகையில்பள்ளிக்கு வரக்கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும். இதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 ஆசிரியர்பெற்றோர்மாணாக்கர் உறவு குறித்துப் பார்க்கும் பொழுது ஆசிரியர்களுக்கும் மேல் அலுவலர்கள் அல்லது பள்ளி நடத்துநருக்கும் உள்ள உறவு முறை குறித்தும் காண வேண்டும்.

  மாணாக்கர்களை அடக்கி  ஒடுக்கும் ஆசிரியர்கள்கூட அவர்களின் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரிடம் அடிமைபோல்தான் நடந்து கொள்வர். அஞ்சும் இயல்புடைய ஆசிரியர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டா. தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் தாளாளர் அல்லது கல்வியகத்தை நடத்துநர் அல்லது தாளாண் குழுவின் (நிருவாகத்தின்)அடிமையாக ஒத்துழைத்துப்  போகாவிட்டால் பணிப்பாதுகாப்பில்லை என்ற நிலை.  இதுதான் தனியார் கல்வியகங்களின் சூழல். அரசின் கல்வியகங்களிலும் ஏறத்தாழ இதே போன்ற நிலைதான். ஒத்துப் போகாத அடிமைத்தனத்துடன் வாழும் ஆசிரியர்கள் எவ்வாறு தன்மானமுள்ள தலைமுறையினரை உருவாக்குவர் என்று தெரியவில்லை.

  நல்ல மதிப்பெண்களில் கருத்து செலுத்தினாலும் வேறு வகைப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கே முதன்மை அளிக்கும் போக்கே நிலவுகிறது. இதனால்நல்ல ஆசிரியர்கள் புறந்தள்ளப்படுகின்றனர்.  எனவேஆசிரியர்களின் சமநிலையில் கருத்து செலுத்த வேண்டும். பள்ளிகளின் கடமைகல்வியறிவும் தன்னம்பிக்கையும் ஆற்றலும் மிக்க தலைமுறையினரை உருவாக்குவதுதான். ஆனால்மதிப்பெண் பெறும் மனப்பாட இயந்திரமாக இளந்தலைமுறையினரை உருவாக்குவதே பெருங்கடமை எனக் கல்வியகங்கள் செயல்படுகின்றன. பெற்றோர்களும் மனித இயந்திரங்களை உருவாக்கும் கல்வியகங்களையே சிறந்த  கல்வியகங்கள் என எண்ணுகின்றனர். இயல்பாகச் சிந்தித்து உணரும் வகையில் பாடத்திட்டங்களை அமைத்துஎழுச்சியும் தன்னார்வமும் மிக்க  தலைமுறையினரை உருவாக்கும் அறிவுக்கூடமாகக் கல்வியகங்கள் அமைய வேண்டும்.

  கல்வியுடன் தொடர்புடைய பயிற்றுமொழியை ஆட்சி மொழியுடன் இணைத்து அடுத்துப் பார்ப்போம். ஏனெனில் ஆட்சிமொழியாக இல்லாத மொழியைப் பயிற்று மொழியாக ஏற்க மக்கள் தயங்குவர்.

Wednesday, March 4, 2026

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 3 கல்விக்கடமை : இலக்குவனார் திருவள்ளுவன்

      05 March 2026      கரமுதல



(இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 2 – தொடர்ச்சி)

 கல்விக்கடமை முழுவதும் அரசின் பொறுப்பு என்றானால் கல்வி நிலையம் யார் நடத்தினாலும்  வணிகமாய் இல்லாமல், மக்களுக்குப் பயனளிக்கும் வகையில்தான் இருக்கும். இருப்பினும் இன்றைய சூழலில் மக்களின் நாட்டம் தனியார் கல்வி நிலையங்கள் மீதே உள்ளது. தனியார் கல்வி நிலையங்கள் மிகப்பெரிய கட்டடங்களுடனும் ஏந்துகளுடனும் இருப்பதைப் பார்த்து அரண்டு போகக்கூடாது. இவ்வசதிகள் கல்வி நிலையம் நடத்துநர்களின் சொந்தச் செல்வத்தில் உருவானவையா? இல்லையே! பொதுமக்களின் செல்வத்தால் – படிக்க வருபவர்களின் செல்வத்தால் உருவாகின்றவைதாமே!

“ கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

என்பது கற்கையின் சிறப்பை உணர்த்தும். ஆனால்பிச்சை எடுக்காமல்கடன் வாங்காமல்இடர்ப்படாமல் கல்வி பெறும் நிலையை உருவாக்க வேண்டியது – பொருள்நிலைசாதிசமய வேறுபாடின்றி அனைவருக்கும் கட்டணச்சுமையில்லாக் கல்வி அளிக்க வேண்டியது – அரசின் கடமையாகும். எனவேகல்வி நிலையங்களை அரசே நடத்துவதே முறையாகும். ஆனால்இப்பொழுது தனியார் நடத்தும் கல்வி நிலையங்கள் பல உள்ளன. எனவேஇவற்றைக் கருத்தில் கொண்டு அரசு பின்வரும் முறையில்  கல்வி நிலையங்கள் நடத்த வகை செய்ய வேண்டும்.

  1. தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்டவர்களின் அமைப்பு எவ்வகைக் கட்டணத்தையும் மாணாக்கர்களிடம் இருந்து பெறாமல் அரசு வகுத்துள்ளவாறான வாய்ப்பு வசதிகளைக் கல்வி நிலையங்களில் அளித்துஅரசு வரையறுக்கும் ஊதியங்களை ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் வழங்கி அனைத்துத் தரப்பாருக்கும் கல்வி அளிக்க முன் வந்தால் இப்போதைய கல்வி நிலையங்கள் உரியர்களிடம் தொடரலாம். மாறாகப் படிக்க வரும் மாணாக்கர்களிடம் அல்லது பெற்றோர்களிடம் நன்கொடை திரட்டி நடத்தப்படுவதாயின் அந்நிலையங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும். இதனால் கல்வியை வணிகமாக நடத்துநர் கல்வித்துறையை விட்டு அகல்வர்.
  2. சொந்தப் பொறுப்பில் நடத்த இயலாத கல்வி நிலையங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
  3. புதிய கல்வி நிலையங்கள் யாவும் அரசின் கல்வி நிலையங்களாக அமைதல் வேண்டும்.
  4. கல்வி நிலையங்களை அரசு உடைமையாக்கும் பொழுது அவற்றை நடத்துநர்க்கு அவர்களின் தனிப்பட்ட பங்கின் அடிப்படையில் இழப்பீடு தந்தால் போதுமானது. மொத்த செல்வ மதிப்பின் அடிப்படையில் வழங்கத் தேவையில்லை. அவையாவும் மக்களிடம் பெறப்பட்ட செல்வத்தில் உருவானவையேஇந்நிலை தனியார் பல்கலைக் கழகங்களுக்கும் பொருந்தும். கூரை அறையில் கல்வி நிலையத்தைத் தொடங்குபவர்கள் பன்மாடி அடுக்க வளாகங்களை எழுப்புகின்றார்கள் எனில் மக்கள் பணத்தினால்தான். எனவேஇலவயக் கல்வி அளிக்காத எந்நிறுவனமாயினும் அரசே அதை ஏற்று நடத்த வேண்டும்.
  5.  கல்வியைக் கட்டணமின்றி அளித்தாலும் இலவயமாகப் பெற விரும்பாதவர்களுக்காக, ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆகும் செலவிற்கேற்ப கட்டணத்தை வரையறுத்து விரும்புபவர்கள் உரிய கட்டணத் தொகையையோ, இதை விடக் குறைவாக, ஓர் அடையாளமாகச் சிறு தொகையையோ, அதைவிடக் கூடுதலாகக் கொடுக்க முடிந்தோர் அக்கூடுதல் தொகையையோ   செலுத்த வாய்ப்பு வழங்கலாம். இதனைக் கல்விக்கூடங்களில் செலுத்தச் சொன்னால், படிப்போரிடையே வேறுபாடு எழும் வாய்ப்பு நேரலாம். எனவே, தனியாகக் கல்விவளர்ச்சி நிதியம் ஏற்படுத்தி இவ்வாறு பொருள் சேர்க்கலாம். எனவே, கட்டணமில்லாக் கல்வியும் இருக்கும். கல்வி வளர்ச்சிக்கான விருப்ப நிதியையும் பெற்று, இலவயம் விரும்பாதவர்களுக்கு மனநிறைவும் அளிக்கலாம்.

  கல்வி பற்றிப் பார்த்த நாம்கல்விக்கூடங்கள் பரவலாக இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்தும் காண வேண்டும்.

  13/10/12 அன்று அருகமைப் பள்ளி குறித்தும் சமச்சீர்க்கல்வி குறித்தும் சொற்பொழிவு நிகழ்ந்துள்ளது. எனவேஅருகமைப்பள்ளி குறித்தும் ஒரே வகுப்பிற்கு வெவ்வேறு பாடமுறை இருப்பதால் சமச்சீர்க்கல்வி குறித்தும் காண்போம்.

  சமச்சீர்க்கல்வி இருந்தால்தான் அருகமைப்பள்ளி என்பது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும்.

  கல்விமுறையில் பாடத்திட்டம் ஒரே வகையாக இருப்பது மட்டுமல்ல சமச்சீர்க்கல்வி. கல்வித்தரம்கல்வி நிலையங்களின் தரம் முதலியனவும் ஒரே வகையாக நன்முறையில் இருக்க வேண்டும். இக்கல்வி நிலையம் உயர்ந்ததுஅக்கல்வி நிலையம் தாழ்ந்தது என்று வேறுபாடில்லாமல்எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஒரே வகையான வாய்ப்பு நலனும்  சிறப்பும் தரமும் இருக்க வேண்டும். எக்கல்விநிலையமாயினும் அதில் சேர்ந்து படிக்கலாம் என்ற நிலை வரவேண்டும். இத்தகைய சமச்சீர்க்கல்வியும் தொலைவில் கிடைப்பதாக இருக்கக்கூடாது. எனவேதான் அருகமைப்பள்ளியாக இருக்க வேண்டும். அருகமைப்பள்ளி இன்மையால் மாணாக்கர்கள் போக்குவரத்து நேர்ச்சிகளாலும் வழியிடை இடர்ப்பாடுகளாலும் தீங்கிற்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.  எடுத்துக்காட்டிற்குச் சொல்வதானால்அண்மையில் புனிதா என்னும் மாணாக்கியர் பள்ளி செல்லும் வழியில் கற்பழித்துக்  கொல்லப்பட்ட அவலத்தைக் கூறலாம். அருகமைப்பள்ளியில் அம்மாணாக்கியர் சேரும் நிலை இருந்திருந்தால்இத்துயரம் நேர்ந்திருக்காது அல்லவா?

  சமச்சீர்க்கல்வியுடனான அருகமைப்பள்ளிகள் இருந்தால்இட மாற்றங்களால் ஏற்படும் இன்னல்கள் நேரா. எப்பள்ளியாக இருந்தாலும் ஒரே வகை பாட முறை என்பதால் எப்பள்ளியிலும் இடமாற்றத்தின் பொழுது இடையிலும்கூட சேர்க்கலாம். பெற்றோர் இடமாற்றத்தால் பிள்ளைகள் ஓரிடம் பெற்றோர் ஓரிடம் என்னும் இடர் நிலை ஏற்படாது. அதனால் ஏற்படும் துன்பங்களும் பெற்றோர்களுக்கு ஏற்படாது.

Followers

Blog Archive