Showing posts with label know our shoclars. Show all posts
Showing posts with label know our shoclars. Show all posts

Sunday, December 18, 2011

Know our scholars 28: அறிவோம் அறிஞர்களை!- 28. அறிஞர் அ.நாராயணசாமி


அறிஞர் அ.நாராயணசாமி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 18/12/2011



28. பெரும்புலவர் தலைமணி பின்னத்தூர் கலைமணி
அறிஞர் அ.நாராயணசாமி ஐயர் (1862-1914).


28. தொல்காப்பியப் பொருளதிகாரப் பயிற்சிச் சிறப்பு விளங்க, அதில் எடுத்துக் காட்டியுள்ள மேற்கோள்களுக்கெல்லாம் ஓர் அகராதியை உருவாக்கிய இப்பெரும்புலவர் எழுதிய நூல்கள் ஐம்பதுக்கு மேற்பட்டவை.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்


Friday, November 18, 2011

know our scholars: H.G.Krishna pillai: அறிவோம் அறிஞர்களை - அறிஞர் கிருட்டிண பிள்ளை



அறிஞர் கிருட்டிண பிள்ளை ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 18/11/2011


10. காப்பியப் புலவர் கம்பரெனப் புகழுடையார் அறிஞர் கிருட்டிண பிள்ளை. (1827-1900).

“இரட்சணிய யாத்திரிகம்” என்னும் இப்பெருந்தகை வழங்கிய பெரு நூலைச் சுவைத்துத் திறம் உணர்ந்த அறிஞர் உலகம் ‘கிறித்தவக் கம்பர்’ என இப்பெருமகனாரைப் பாராட்டிப் போற்றியது.
0
 
or
 
 
 

Wednesday, November 16, 2011

Know our scholars- Puuvaalur Thiayarasar : பூவாளூர் தியாராசச் செட்டியார் ~ அறிவோம் அறிஞர்களை!

பூவாளூர் தியாராசச் செட்டியார் ~

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 16/11/2011



8. புலமைக்கோர் இமயம் புகழுக்கொரு கங்கை பூவாளூர் தியாராசச் செட்டியார் (1826-1888).

மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மனத்திற்கினிய மாணவராய்த் திகழ்ந்த இப்பெருமகனார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழைப் பேணிக் காத்த பெரியார்களுள் என்றும் நினைத்தக்கத்தவர்.

 
 
 

Tuesday, November 15, 2011

know our sholars - Vallalaar Ramalinga adigal



அருளாளர் இராமலிங்கர் ~ 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 15/11/2011



7. திருவருட் செல்வர் தெய்வத்தமிழ் வள்ளலார் அருளாளர் இராமலிங்கர் (1823-1874).

உருக்கமும், பக்திப் பெருக்கமும் மிளிர, உள்ளத்தைக் கனிவிக்கும் தித்திப்புத் தமிழில்… இப்பெருமான் உருவாக்கி அருளிய பாடல்கள் பக்தியுணர்வை மட்டுமின்றி பைந்தமிழுணர்வையும் செழிக்கச் செய்தன.
0

Monday, November 14, 2011

know our sholars! Arumuga naavalar : ஆறுமுக நாவலர் அறிவோம் அறிஞர்களை



ஆறுமுக நாவலர் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 14/11/2011



6. சிவநெறிச் செல்வர் 
   செழுந்தமிழ்ப் புலவர் அறிஞர் ஆறுமுக நாவலர் (1822).


தமிழில் என்ன இருக்கிறது?’ எனக் கேட்டு அறியாமையில் ஆழ்ந்து கிடந்த தமிழரை, நாவலர் பெருமானின் சொல்லாற்றல், எழுச்சி பெறச்செய்தது எங்கள் தமிழ்! எங்கள் தமிழ் எனப் பெருமிதம கொள்ள வைத்தது.

»

Sunday, November 13, 2011

Know our Scholars - G.U.Pope : அறிஞர். சி.யு.போப் அறிவோம் அறிஞர்களை!

November 13, 2011


அறிஞர். சி.யு.போப் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 13/11/2011


5. சீரியதமிழ்க் காதலர் செந்தமிழ்ச் செம்மல் 
முனைவர். சி.யு.போப் (1820-1908).

அற நூல்களான திருக்குறளை நாலடியாரை, சமய நூலான திருவாசகத்தை ஐரோப்பியர் கற்றுணர வேண்டுமென்னும் தாகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தருளிய பேரறிவாளர்.


 

Friday, November 11, 2011

know our scholars 3- Robert Caldwell : அறிவோம் அறிஞர்களை 3 - முனைவர் இராபர்ட் கால்டுவெல்


முனைவர் இராபர்ட் கால்டுவெல் ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 11/11/2011


3. ஆற்றல்மிகு மொழிவல்லார் அயர்லாந்துத் தமிழறிஞர் முனைவர் இராபர்ட் கால்டுவெல் (1814-1891). 

பெயர்களை ‘உயர்திணை’ என்றும், ‘அஃறிணை’ என்றும் தமிழ் இலக்கண நூலோர் வகுத்த முறை. உலகத்தில் வேறெந்த மொழியிலும் இல்லாத பகுப்பு. இது தமிழின் தனிச் சிறப்பு என்றார் இப்பேரறிஞர்.

Followers

Blog Archive