Showing posts with label : ilakkuvanar thiruvalluvan. Show all posts
Showing posts with label : ilakkuvanar thiruvalluvan. Show all posts

Wednesday, March 27, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் 216-220 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச் சொற்கள் விளக்கம் 211-215 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 216-220

216. absolute monarchமுழு முடியாட்சியர்  

முழுமை முடியாட்சி என்பது மன்னர் அல்லது ஆட்சித் தலைவர் தம் சொந்த உரிமை அல்லது அதிகாரத்தில் ஆட்சி செய்யும் அமைப்பாகும்.
217. absolute monopolyமுழு முற்றுரிமை  

தனி வல்லாண்மை
முழு வணிக உரிமை
முழு நிறைவுத் தனியுரிமை
முழுத் தனி வல்லாண்மை  

தொழிலில் அல்லது வணிகத்தில் அல்லது துறையில் விற்பனையாளர் அல்லது உற்பத்தியாளர் முழு உரிமையுடன் ஆதிக்கம் செலுத்தும் சந்தைக்கட்டமைப்பாகும்.
218. absolute occupancy rightமுழு இருப்புநிலை உரிமை  

இது நிலையான குத்தகையாளர்,  பாதுகாக்கப்பட்ட குத்தகையாளர், துணைக் குத்தகையாளர் அல்லது பிற குத்தகையாளர் எனக் குறிக்கிறது.
219. Absolute or strict liabilityகடுங் கடப்பாடு  

குற்றமனம் அல்லது கவனமின்மை இல்லாமலேயே ஒருவரைக் கடுமையான பொறுப்புக்கு ஆளாக்கும் நிலை
220. absolute orderமுற்றான கட்டளை   முழுமையான நிறைவான ஆணையைக் குறிப்பிடுகிறது. காண்க: absolute decree

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, February 4, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:141-145

 




(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:136-140 – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் : 141-145

141. Abortive trial  கைவிடப்பட்ட உசாவல்
விசாரணை    முடிவு எட்டப்படாத  உசாவல் / விசாரணை  
சில காரணங்களுக்காக விசாரணை முழுமையுறாத, தீர்ப்பளிப்பதற்கு முன் முடிக்கப்படுகிற உசாவல்/விசாரணை  
142. Aboundமிகுந்திரு
நிரம்பியிரு பொங்கு மல்கு  
மிகுதியான எண்ணிக்கையில் அல்லது பேரளவிலான அளவில் உள்ளனவற்றைக் குறிப்பது.
143. Aboutபற்றி  
குறித்து
இங்குங்குமாய், சுற்றி, ஏறத்தாழ, கிட்டத்தட்ட. கப்பலின் போக்கினை எதிர்ப்புறமாகத் திருப்புதல்   எ.கா. இவ்வழக்கு மகளிர் நலம் பற்றியது. இம்முறையீடு சிறார் நலம் குறித்தது. கிட்டத்தட்ட/ஏறத்தாழ நூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
144. About that dateஅந்த நாளைப் பற்றி  
முதலில் குற்றம் நிகழ்ந்ததாகவோ வேறு எதன்காரணமாகவோ சொல்லப்படும் நாள் குறித்துப் பின்னர்த் தெரிவிக்கையில் அந்தநாள் குறித்த கருத்தை அல்லது வாதுரையைத் தெரிவித்தல்.
145. About to make, a complaint, he isஅவர் முறையிட இருக்கிறார்  
ஒரு தவறு அல்லது முறைகேடு அல்லது குற்றம் நேர்ந்த பொழுது அது குறித்து வழக்கு மன்றத்தில் அல்லது உரிய தக்க அதிகார மன்றத்தில் முறையிடப் போகிறார்.  

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, January 28, 2024

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்-131-135

 




(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 126-130 – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம்  131-135

131. Abolition of titles  பட்டங்களை ஒழித்தல் விருதுகளை ஒழித்தல்‌   இந்திய அரசியல் யாப்பு 18 ஆம் இயல் பட்டங்கள் ஒழிப்பு (Abolition of titles)பற்றிக் கூறுகிறது.
132. Abolition of untouchabilityதீண்டாமை ஒழிப்பு   தீண்டாமை என்பது மனிதருள் இனம், பிறப்பு, குலம் காரணமாக உயர்வு தாழ்வு கற்பித்து வேற்றுமை பாராட்டும் குமுகாயக் குற்றம்.    அரசியல் யாப்பு கூறு 17இல் தீண்டாமை ஒழிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தீண்டாமையை எந்த வடிவத்திலும் நடைமுறைப்படுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய  குற்றமாகும்.
133. Abolition of zamindari system  நிலக்கிழார் முறை ஒழிப்பு   சமீன்தாரி முறை ஒழிப்பு என்பர். சமீன்தாரி தமிழ்ச்சொல்லல்ல.   இந்தியத்துணைக் கண்டத்தில் முகலாயப் பேரரசின் ஆட்சிக் காலத்தில், நிலக்கிழார் எனக் குறிப்பிடும் முறை வந்தது. இந்தியாவின் தலைமை ஆளுநராக 1786-1793 ஆம் ஆண்டுகளில் இருந்த காரன்வாலிசு( Lord Cornwallis) நிலக்கிழார் முறையை அறிமுகப்படுத்தினார்.   இந்திய விடுதலைக்குப் பின்னர் நிலக்கிழார் முறை சடடத்தின்படி ஒழிக்கப்பட்டது.
134. Aboriginalதொல் பழங்குடி   தொன்முதுவர் தொன்முதிய   Latin ab origine என்னும் இலத்தீன் தொடரின் பொருள் தொடக்கத்திலிருந்து. தொடக்கக்காலத்திலிருந்து உள்ள குடிமக்களை/மொழியைக் குறிக்கிறது.   தொல்பழங்காலத்தில் அறியப்பட்டதைக் குறிப்பதால், தொல்முதுமொழியையும் குறிக்கும். எ.கா. தமிழ் ஒரு தொல்முதுமொழி
135. Aborignesபழங்குடியினர்   நடைமுறையில் ஆத்திரேலியப் பழங்குடியினரைக் குறிக்கின்றது. எனினும் எல்லாத் தொல்குடியையும் குறிக்கும் பொதுச்சொல்லாகவே கருத வேண்டும்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, December 31, 2023

சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன்




(சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95

91. Abetment of suicide of childகுழந்தைத் தற்கொலைக்கு உடந்தை  

குழந்தை அல்லது இளவர் தற்கொலை புரிந்துகொண்டால் அதற்கு உதவிய அல்லது உடந்தையாக இருந்து அல்லது தூண்டுதலாக இருந்தவர் தண்டிக்கப்படுவார்.  

18 அகவைக்குட்பட்ட / மனநலங் குன்றிய/பிற ழ் மனம் உடைய/மடமை மிகுந்த/போதையில் உள்ள/ எவரேனும் தற்கொலை புரிந்து கொண்டால், இதற்கு உடந்தையாக இருப்பவர் மரணத் தண்டனை அல்லது வாணாள் தண்டனை அல்லது பத்தாண்டுத் தண்டனையும் ஒறுப்புத்தொகையும் விதிப்பதற்குரியவர். (இ.த.ச.305/IPC 305)
92. Abetment of suicide  தற்கொலைக்கு உடந்தை  

ஒருவர் தன்னுயிரைப் போக்குவதற்கு உதவும் வகையில் அவருக்கு உயிர்போக்கும் நஞ்சு, தூக்குக்கயிறு உயிர்போக்குவதற்குரிய வேறு பொருள் முதலியவற்றை வாங்கித் தருதல் அல்லது வாங்குவதற்கான வழிமுறை கூறுதல் அல்லது உயிர்போக்கும் செயலுக்குத் துணையாக இருத்தல். ‌அத்தகையவர் உடந்தைக் குற்றவாளி அல்லது குற்ற உடந்தையர் எனப்படுவா
ர்.
93. Abettingதூண்டுதல்

குற்றம் புரியத் தூண்டுதல்   போதைப்பொருட்களை விற்பதற்கு அல்லது உட்கொள்வதற்குத் தூண்டுதல்   போதைப் பொருட்கள் – மனநோய் சார்ந்த பொருட்களில் சட்ட முரண் போக்குவரத்தைத் தடுக்கும் சட்டம், 1988 பிரிவு 2
94. Abetting of waging warபோர் நடத்த உடந்தை  

(இந்திய அரசிற்கு எதிராகப்) போரை நடத்துபவர், அல்லது அத்தகைய போரை நடத்த முயல்பவர் அல்லது அத்தகைய போர் நிகழ உடந்தையாக இருப்பவர், மரணத்தண்டனை அல்லது வாணாள் தண்டனையுடன்  ஒறுப்புத் தொகை விதிப்பதற்குஉரியவர்.   (இ.த.ச.பிரிவு 121)
95. Abettor



 
உடந்தைக் குற்றவாளி,
குற்ற உடந்தையர் குற்றவுடந்தையர்
  உடந்தையாளர்

தற்கொலைக்கு உடந்தை   குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர் ஒருவர் குற்றச்செயல் புரிவதற்குச் செயல் வகையிலோ பொருள்வகையிலோ அறிவுரை வகையிலோ உதவுநராகவோ தூண்டுநராகவோத்  துணைநிற்பவர்.  

தூண்டுதல்
(ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 3. 1. ஆ.. /S. 3(1)(b) PCA, 1988)

குற்ற உடந்தை
(கொத்தடிமைத் தொழிலாளர் முறை (அழித்தல்) சட்டம், 1976/S. 20 BLS(A)A, 1976)

உடந்தையாயிருத்தல் (போதை மருந்துகள் உளப்பாதிப்புப் பொருள்கள் தடுப்புச்சட்டம், 1985 பிரிவு 29 / S. 29 NDPSA,1985)

தற்கொலைக்கு உடந்தையாக இருத்தல்‌ (உடன்கட்டைத் தடுப்புச்சட்டம் 1987, பிரிவு  4 / S. 4 COS(P)A,1987) 

தூண்டுதல் (போதை மருந்துகள் உளப்பாதிப்புப் பொருள்கள் போக்குவரத்துத் தடுப்புச்சட்டம், 1988, பிரிவு 2./S. 2 PIT NDPS, 1988)
 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, December 3, 2023

சட்டச்சொற்கள் விளக்கம் 26 -30 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சட்டச்சொற்கள் விளக்கம் 21-25 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 26 -30

26. a prioriமுற்கோள்  

முன்னறி, புலனுக்கு முன் எழு, புலச் சார்பற்ற, முந்தையதிலிருந்து.     நிகழ்வைப்பற்றிய அறிதலுக்குத் தேவையின்றி நிகழ்விற்கு முன் எழுப்பப்படும் வாதம். பொதுக் கோட்பாடுகளிலிருந்து ஊகிக்கப்படும் காரிய அறிவு.

  இலத்தீன் தொடர்
a quoஎதிலிருந்து  

எந் நீதிமன்றத்திலிருந்து இவ்வழக்கு இந்த நீதிமன்றத்திற்கு வந்துள்ளது என்பதைக்  குறிக்கின்றன.   மேல்முறையீட்டில் கீழே உள்ள நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, வழக்கு நிகழ்ந்த முதல் நீதி மன்றம் அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றம்.  

இலத்தீன் தொடர்
A share of profitsஆதாயப் பங்கு

ஆதாயப் பகிர்வு, ஆதாயப்  பாகீடு     ஊழியர்களுக்குத் தரப்படும் வழக்கமான ஊதியம், மீதூதியம் ஆகியவற்றுடன் நிறுவன ஆதாய அடிப்படையில் ஊக்கத்திட்டங்களுடன் நிறுவனப் பங்குகளையும் பங்கிட்டு வழங்குதல்.  

இவ்வாறு பங்குகளை ஊழியர்களுக்கு வழங்குவது ஊழியர்கள்-முதலாளி அல்லது நிறுவனத்தின் இடை யே  பிணக்குகளைக் குறைக்கவும் ஒத்துழைப்பைப் பெருக்கவும் உதவுகிறது.
A subsequent offence  தொடர் குற்றம்  

பின்புரிந்த குற்றம்   அடுத்து செய்த குற்றம்  

ஏற்கெனவே ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவர்  இரண்டாவதாகச் செய்யும் தொடர் குற்றம்.
A suit or proceeding between the parties to a marriageதிருமணம் தொடர்பான தரப்பாரிடையே வழக்கு அல்லது செயன்மை  
குடும்ப நல நீதிமன்றச் சட்டம், 1984 பிரிவு 7 (1) (ஆ).(இ) இது குறித்துக் கூறுகிறது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive