Showing posts with label இலக்கியங்கள். Show all posts
Showing posts with label இலக்கியங்கள். Show all posts

Thursday, October 27, 2016

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70 – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-இலக்கியம் கூறும் காவிரி, திரு ; thalaippu_thamizharkkaana-kaviri_ilakkuvanar-thiruvalluvan

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70

 51.காவிரி படப்பை பட்டினம்-தன்னுள் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் 5.151தோட்டச்சிறப்பு மிக்க காவிரி பாயும் பட்டினத்துள்
  52.கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 2.120கங்கைப் பேராற்றிலும் காவிரி நீரிலும்
53.முது நீர் காவிரி முன் துறை படுத்தல் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 25.123பழமைச்சிறப்பு மிக்க காவிரியின்துறைக்கண் நீர்ப்படுத்தல்
 54.காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 27.171(பஞ்சக்காலத்திலும்) பேணும்  காவிரிக்குரிய சோழனுக்கு
 55.காவிரி நாடனை பாடுதும் பாடுதும் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 29.131 காவிரிக்குரிய சோழ நாட்டானைப் புகழ்ந்து பாடுவோம்
56.கரகம் கவிழ்த்த காவிரி பாவை – மணிமேகலை 0/12கமண்டலத்தைக் கவிழ்த்து நீர்எடுத்த காவிரிப்பாவை
 57.தவா நீர் காவிரி பாவை-தன் தாதை – மணிமேகலை 3/55குறையாத நீர்ப்பெருக்கினையுடைய காவிரியின் தந்தை போன்ற தோற்றுவாயும்
58.கடல் மண்டு பெரும் துறை காவிரி ஆடிய – மணிமேகலை 5/39காவிரி கடலிற் கலக்கும்இடமாகிய பெரிய சங்க முகத்துறையில் நீராடுவதற்கு
59.சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் – மணிமேகலை 15/48காவிரியில் நீர் சுரந்து பெருகி உயிர்களைக் காத்துப் பரந்து செல்லவும்
60.தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம் – மணிமேகலை 22/40தெளிந்த நீரையுடைய காவிரியாற்றில் நீராடி வருகின்றவள்
61.காவிரி வாயிலில் சுகந்தன் சிறுவன் – மணிமேகலை 22/43 காவிரியாற்றின் கரையில் இருக்கும் பொழுது, சுகந்தன் மகன் நீ என்று சொல்ல
62.காவிரி படப்பை நல் நகர் புக்கேன் – மணிமேகலை 25/16காவிரியாற்றங்கரையின் பக்கத்தே உள்ள  நல்ல நகராகிய புகாரை யடைந்தேன்
63.காவிரி பட்டினம் கடல் கொளும் என்ற – மணிமேகலை 28/135
காவிரிப்பட்டின நகர் கடலால் கொள்ளப்படும் என்ற(தைக் கேட்டமையால் அங்கே போகாதிருந்தான்)
  64.    வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன் – பொய்கையார், களவழி நாற்பது, 7.3(சிவந்த கண்களையும்) வரிகளை(யும்) உடைய வரால் மீன் விளையாடும் காவிரிநாட்டிற்கு உரியவன்(செங்கட்சோழன்)
 65.    காவிரி நாடன்  – பொய்கையார், களவழி நாற்பது, 12.4காவிரிபாயும் நாட்டை உடையவன்
66.    கண் ஆர் கமழ் தெரியல் காவிரி நீர் நாடன் – பொய்கையார், களவழி நாற்பது, 24.4 கண்ணிற்கு நிறைவாகக் காட்சியளிக்கும் மாலையணிந்த காவிரி நீர் பாயும் நாட்டிற்கு உரியவன்
 67.    கரை கொன்று இழிதரும் காவிரி நாடன் – பொய்கையார், களவழி நாற்பது, 35.3 கரைகளை அழித்துச் செல்லும் காவிரி நாட்டை உடையவன்
68.    காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள் – பொய்கையார், களவழி நாற்பது, 36.2காவிரிநாட்டையுடைய செங்கட்சோழன் கழுமலம் என்னும் ஊரினைக் கைக்கொண்ட நாள்
69.    காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ – கம்பர், இராமகாதை, அயோத்தியா காண்டம், 13.1.2 காவிரிவாயும் தமிழகத்துச் சோழநாட்டைப்போல் உயர்ந்த, கழனிகள் கொண்ட அயோத்திநாட்டை நீங்கி
 70.    குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான் – கம்பர், இராமகாதை, ஆரண்ய காண்டம், 3. 46.4
(தொடரும்)
–  இலக்குவனார் திருவள்ளுவன்

Monday, October 3, 2016

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 01- இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-இலக்கியம் கூறும் காவிரி, திரு ; thalaippu_thamizharkkaana-kaviri_ilakkuvanar-thiruvalluvan

1

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி

 ‘இந்தியத்தால் இழந்த காவிரி’ என்னும் கட்டுரை மூலம் முன்னரே, நமக்கே உள்ள காவிரியை நாம்  இழந்து விட்டதைக் குறித்து உள்ளோம்.
    நமக்கே உரிமையான காவிரி குறித்து இற்றைநாள் தமிழ் இலக்கியங்கள் வரை ஆயிரக்கணக்கான குறிப்புகளை நாம் காணலாம். எனினும் பழந்தமிழ் இலக்கியங்களில்  உள்ள நூற்றுக்கணக்கான குறிப்புகளை நாம் இத் தொடரில் பார்க்கலாம்.
  இவற்றை காவிரி தொடர்பான முறையீட்டுத்தளங்களில் நாம்அளிக்கலாம். கன்னடத்தில் மொழி பெயர்த்துக் கன்னட மக்கள் அறியச்செய்யலாம். என்ன தெரிவித்தாலும் கண்மூடித்தனமாகவும் வெறித்தனமாகவும் உள்ள அவர்கள் திருந்தாமல் போகலாம். எனினும் கற்றறிந்த பண்பாளர்கள் உணரவும் பின்னர்  நாட்டுமக்களிடம் உணர்த்தவும் வாய்ப்பாகலாம்.
  இந்திய நிலமே ஒரு காலத்தில் தமிழர் நிலமாக இருந்துள்ளது. எனவே, இந்திய நிலத்தின் ஒரு பகுதியான மைசூரும் தமிழர் நிலமாக இருந்துள்ளதைத் தனியே விளக்கத் தேவையில்லை. எனினும் ஊர்ப்பெயர் குறித்த சில விவரங்களை முதலில் பார்ப்போம். அதன் பின்னர் இலக்கியங்களில் உள்ள காவிரி குறித்துக் காண்போம்.
   நார் அரி நறவின் எருமையூரன் (-பன்னாடையால் அரிக்கப் பெற்ற கள்ளினையுடைய எருமை யூர்க்குத் தலைவன்) என எருமையூருக்குத் தலைவனான எருமையூரன் குறித்துப்  புலவர் நக்கீரர் பாடிய பாடல் அகநானூற்றில்(36) உள்ளது- எருமைகள் மிகுதியாக உள்ள ஊர் என்பதால் இவ்வூர் எருமையூர் எனப்பெயர் பெற்றுள்ளது. இப்பொழுதும் இவ்வூரில் எருமைகள் மிகுதியாக உள்ளன.
  பேரிசை எருமை நன்னாடு என நக்கீரர் பெரும்புகழ்மிக்க எருமை என்னும் நல்ல நாட்டின் தலைவன் என்று குறிப்பிடுகிறார்(அகநானூறு 253.19)
   எருமை என்பதற்குச் சமற்கிருதச் சொல் மகிசம்;  எருமை ஊர் மகிசஊர் என்றாகிப் பிறகு மைசூர் என்றாயிற்று என்பர். ஊர்ப்பெயரின் தோற்றம் அறியாமல் பிற்காலத்தில் நாம் கருதிக்கொண்டதே இவ்விளக்கம். எருமையூராகிய மையூர் என அழைக்கப்பெற்று மைசூர் என்றாகிய இப்பெயரே இம்மாநிலம் முழுவதற்கும் உரிய பெயராய்ப் பின்னர் விளங்கத் தொடங்கியது.
  பெண்களின்அழகை அழகிய நகருக்கு  ஒப்பிட்டுக் கூறுவது பழந்தமிழர் வழக்கம். (அந்த அளவிற்கு அக்காலத்தில் நகரங்கள் அழகுடன் திகழ்ந்துள்ளன.) தலைவி ஒருத்தி,  தொழில்நுட்பம் மிகுந்த  அழகுறு பூண் அணிந்த எருமை என்பவனது குடாநாட்டை ஒத்த என் அழகு நலம் எனக் கூறும் பொழுது
நுண்பூண் எருமை குடநாட் டன்னஎன்
ஆய்நலம் (நக்கீரர், அகநானூறு 115.-6)
என்கிறாள். எனவே, எருமையூரன் ஆட்சியில் குடா நாடும் இருந்துள்ளதை அறியலாம். குடா நாட்டில்தான் காவிரி உற்பத்தியாகிறது.
 எருமையூர் என்பது சுருக்கமாக மையூர் என அழைக்கப்பெற்றது.
சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறையின் அமைச்சன் பெயர்  மையூர் கிழான். இந்தச் சேரவேந்தனின் தந்தை குட்டுவன் இரும்பொறைக்குப் பெண் கொடுத்தவன். வேளிர் குடியைச் சேர்ந்தவன். (மையூர் கிழான் என்றால் மையூர் நாட்டிற்கு உரிமையாளன் எனப் பொருள்.) இதனை
குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன்
 எனப் பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பதிகம் குறிக்கின்றது.
 மையூர் என்பது மைசூராக மாறியுள்ளது. (கய முகம் என்பது கசமுகம் என்பதுபோல் யகரம் சகரமாக மாறியுள்ளது.)
   காவிரி என்றால் ஆற்றின் இருபுறமும் பூஞ்சோலை விரிந்து அமைந்த ஆறு என்று பொருள். இப்பொருள் விளக்கத்தைக் காவிரி குறித்த ‘தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக் காவிரி’ என்பது போன்ற இலக்கிய வரிகள் மூலம் நாம் அறியலாம்.
.. தான் பாயும் பகுதிகளைப் பொன்விளையும் பூமியாக மாற்றும் காவிரியைப் பொன்னி என்று அழைப்பதும் பொருத்தம்தான். எனினும், காவிரியாற்று நீரில் பொன்தாது கலந்து வந்தமையால் பொன்னி என்று மறுபெயர் பெற்றது இது.
  எனவே, ஆற்றின் பெயரான காவிரி, அதுதோன்றும் இடமான தலைக்காவிரி, ஆறு அமைந்த குடகுமலை,  மாநிலத்தின் பெயர் மைசூர் முதலானவை யாவுமே காவிரிக்கும் தமிழ்நாட்டவர்க்கும் உள்ள பிணைப்பையும் உரிமையையும் உணர்த்தும்.
இனி, நாம் இலக்கியத்தொடர்களைப் பார்ப்போம்.
  1. கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம்: பரணர், அகநானூறு 6
(துடுப்பாகப்பயன்படும் கோல் நிலைத்து நிற்க முடியாதபடி உள்ள மிகுதியான நீர்ப்பெருக்கினை உடைய காவிரி)
  1. கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று: பரணர், அகநானூறு 9
(விரைந்தோடும் மிகுதியான நீர்ப்பெருக்கு உடைய காவிரிப் பேராறு)
  1. அம் தண் காவிரி பரணர், அகநானூறு 12
(அழகிய குளிர்ச்சியான காவிரி)
  1. கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை: காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக் கண்ணனார், அகநானூறு  11
(துடுப்புக்கோல் மறையுமாறு நீர்ப்பெருக்கு உள்ள காவிரி கடலில் சேருகின்ற பெருந்துறை)
  1. கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று: நக்கீரர், அகநானூறு 5
(கடற்கரையைக் கரைக்கும் காவிரிப்பேராறு)
  1. புதுவது வந்த காவிரி: கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே: இடையன் நெடுங்கீரனார், அகநானூறு 1415
(கரையுச்சியைத் தேய்த்துக்கொண்டு மிகுதியாக வரும் புது வெள்ளம் உடைய காவிரி)
  1. கழல் கால் பண்ணன் காவிரி வடசுவயின்: செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார், அகநானூறு, 177.16
(காவிரியின் வடக்கே உள்ள, வீரக்கழல் அணிந்த பண்ணன் .)
  1. காவிரி பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி: பரணர், அகநானூறு, 181.12
(காவிரிப்பேராறு கொண்டுவரும் நுண்மணல் திரள)
  1. காவிரி வைப்பின் போஒர் அன்ன என்: பரணர், அகநானூறு, 186.16
(காவிரி பாயும் நாட்டிலுள்ள போர் என்னும் ஊரைப்போன்ற)
  1. காவிரி படப்பை பட்டினத்து அன்ன: நக்கீரர், அகநானூறு, 205.12
(காவிரிபாயும் தோட்டங்களை உடைய பட்டினம் போன்ற)
(தொடரும்)
[தொடர்களை அறிய உதவியாக உள்ளமை  சொல்லடைவு நூல்கள். இவை எல்லா நூல்களுக்கும் இல்லை. அக்குறையை நீக்கவும் எளிதில்  கணிணியில் பயன்படுத்தவும் முனைவர் ப.பாண்டியராசா உருவாக்கத்தில் அமைந்த தமிழ் இலக்கியத் தொடரடைவு <  http://tamilconcordance.in/  > / < http://tamilconcordance.in/concordance_list-B.html >  பேருதவியாக உள்ளது. நன்றிக்காக மட்டும் இதைக் குறிப்பிடவில்லை. இலக்கிய ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் பயன்படுத்தவும் இவை போல் பிற நூல்களுக்குத் தொடரவைு அமைக்கவும் வாய்ப்பாக அமையும் என்பதால் தெரிவிக்கின்றேன்.]

 இலக்குவனார் திருவள்ளுவன்

Monday, May 20, 2013

இலக்கியங்களில் இடம் பெறும் தமிழ் - தமிழ்ச்சிமிழ்

இலக்கியங்களில் இடம் பெறும் தமிழ்


பக்க ஆக்கியில் சிரீலிபி எழுத்துருவில் கணியச்சிடப்பட்ட பக்கங்கள் எடுப்பு ஆவண அமை ப்பில் மாற்றும் பொழுது எழுத்துப்பிழைகள் (எ.கா. : இலக்குவனார் திருவள்ளுவன் என்னும் பெயரே தவறாக மாறிஉள்ளது.) வடிவமைப்புக் குலைவுகள் (எ.கா. :  தலைப்பில் குறிக்கப்பெறும் பாக்களுக்கான கட்டம்  கீழிறங்கி வந்துள்ளது), மூலத் தமிழ் எண்கள் இப்போதைய வழக்கு எண்கள் வடிவம் பெறுதல் அல்லது ஒரு பகுதி மட்டும் இடம் பெறுதல்  ‌ என்பன போன்ற சில தவறுகள் நேர்ந்துள்ளன. எனினும் இடத்திற்கேற்ப உரியவாறு  அறிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன். தமிழ் என்னும் சொல்லாட்சி மிகவும் பிற்பட்ட கா லத்தில் வந்ததாகச் சிலர் தவறாக எழுதும் போக்கும் அதைப் பலர் மேற்கோளாகக் கையாளும் போக்கும் பெருகி வருவதால், 10 ஆண்டுகளுக்கு முன்  தொகுக்கப்பெற்ற தமிழ் பற்றிய விவரங்களை இங்கே  பகிர்ந்துள்ளேன். இவற்றிலும் கூடுதலாகவே தமிழ்  என்னும்  சொல் இடம் பெற்றுள்ள விவரங்களை நூல்களைப்படிக்கும் பொழுது அறிகின்றேன். தமிழோசை நாளிதழின் களஞ்சியம் பக்கத்தில தமிழ்ச்சிமிழ்த் தொகுப்பில் இருந்து சில பக்கங்கள் இடம் பெற்றுள்ளன. செம்மொழி மாநாட்டு மலரில் தமிழ் பற்றிய அடைமொழிகள் வேறு சிலவும் சேர்க்கப்பெற்று இடம் பெற்றுள்ளன. மற்றொரு இதழில் இவ்வாறு இத்தளத்தில் இடம்  பெறுவதைவிட மேலும் கூடுதலான குறிப்புகள் இடம் பெறும் வகையில்  விவரங்கள் அளித்துள்ளேன். இவ்விவரங்கள் யாவும்  முற்றானவை அல்ல என்பதற்காக இவற்றைக் குறிப்பிடுகின்றேன்.  காலங்கள் தோறும் உள்ள இலக்கியங்களில் இருந்து அனைத்து விவரங்களையும் தொகுக்கும் பணியில் ஈடுபடும் எண்ணம் உள்ளது. நேரம் வாய்க்கும் பொழுது முழுமையான விவரங்களைத்  தொகுப்பேன். எனினும் இன்றைய நிலையில் இதுபோன்ற தொகுப்பு வேறில்லை.  ஆதலின் தமிழின் சிறப்பையும் தொன்மையையும் அறிந்து பரப்புங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/































Followers

Blog Archive