Monday, June 7, 2010

எழுத்துச் சீர்திருத்தமா? சீரழிப்பா?

        எழுத்துச் சீர்திருத்தமா? சீரழிப்பா?
- இலக்குவனார் திருவள்ளுவன்
சீர்திருத்தம் என்பது குறைபாடுள்ளவற்றைச் சீராகத் திருத்தியமைப்பதையே குறிக்கும். ஆனால்ரூபவ் சீராக இருக்கின்றவற்றைத் திருத்தியமைப்பதாகக் கூறிச் சிதைப்பதைச் சீர்திருத்தம் என்று சொல்வதைவிடச் சீரழிப்பு என்பதுதானே முற்றிலும் சரியாக இருக்கும். அப்படியாயின் அறிவியல் முறையில் அமைந்த தமிழ் எழுத்து வடிவங்களைச் சீர்திருத்தம் என்ற பெயரில் மாற்றியமைக்கும் முயற்சியைச் சீரழிப்பு என்பதுதானே பொருத்தமாக இருக்கும். போலிச் சீர்திருத்தத்திற்குக் கூறும் காரணங்கள் எள்ளளவும் பொருத்தமில்லாதவை என்பதில் இருந்தே அவை சீரழிப்பு முயற்சிகளே என்பதைப் புரிய வைக்கும்.
போலித் திருத்தத்தை வலியுறுத்திச் சீரழிப்பு முயற்சிகளில்
தமிழின் காலத்தைப் பின்னுக்குள் தள்ளியும் தமிழ் இலக்கியச் சிறப்புகளை மறைத்தும் திரித்தும் இழித்தும் பரப்பிய வையாபுரிக் கூட்டம் போன்று இப்பொழுதும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது. நாம் என்றென்றும் விழிப்பாக இராவிட்டால் இத்தகைய வஞ்சகக் கூட்டம் நம் மொழியை அழித்து இனத்தை அழித்து விடும். எழுத்துச் சிதைவை வலியுறுத்தும் ஓர் அறிஞர் தொல்காப்பியர் காலத்தைக் கி.மு.300 என்கிறார். இதன் மூலம் தொல்காப்பியர் காலத்தைப் பாணினியின் காலத்திற்குப் பின்தள்ளி தொல்காப்பியத்தை ஆரிய வழிநூலாகப் படிப்போர் உள்ளத்தில் பதிய வைக்க முயலுகிறார். பாணினிக்கு முற்பட்டவர் தொல்காப்பியர்; அசோகர் காலத்திற்கு முற்பட்டவர் தொல்காப்பியர்; புத்தருக்கு முற்பட்டவர் தொல்காப்பியர்; தமிழ் மக்களுக்கு யவனர்களுடன் தொடர்பு ஏற்படும் காலத்திற்கு முற்பட்டவர் தொல்காப்பியர்; என்றெல்லாம் பல காரணங்களை அடுக்கிச் செந்தமிழ் மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் தொல்காப்பியர் காலம் கி.மு. 7 ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. 10 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என நிறுவி முனைவர் பட்டம் பெற்றவர். அண்மையில் செம்மொழி மத்திய தமிழ் ஆய்வு நிறுவனத்தின் முயற்சியால் தமிழறிஞர்கள் கூடி - பேராசிரியர் கருத்திற்கு ஏற்ப - தொல்காப்பியர் காலம் கி.மு. 711 என்று ஆய்ந்து முடிவெடுத்துள்ளனர். உண்மை இவ்வாறிருக்கரூபவ் தமிழ் இலக்கியச்சிறப்பைப் பின்னுக்குத் தள்ளிரூபவ் தமிழ் மொழியின் காலத்தையும் பின்னுக்குத் தள்ளித் தமிழினச் சிறப்பை மறைக்கச் செய்ய முயலும் ஆரிய தாசராகிய ஒருவர் எவ்வாறு தமிழ் நல அடிப்படையில் சீர்திருத்தக் கருத்தை அளிக்க முடியும்? இக்குறிப்பு ஒன்றே இத்தகையோர் சிதைவு முயற்சிகள் தமிழின அழிப்பிற்கே துணை புரிவன என்பதற்குச் சான்றாகும் என்றாலும் மேலும் சிலவற்றையும் நாம் ஆராயலாம்.
தமிழர்களின் அடையாளம் தமிழ்; ஆனால்ரூபவ் தற்போதைய தமிழ் வரிவடிவ அமைப்பால் தமிழர்கள் தமிழைக் கற்க முடியாமல் போய்த் தங்கள் அடையாளத்தை இழந்து போவதாக எழும் கூக்குரலில் தெரிய வரும் உண்மை என்ன? தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு என வற்புறுத்தினார்கள் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள். தமிழை நம் முன்னோர்களும் நாமும் மறக்கின்ற இடங்களில் எல்லாம் பிற மொழிகள் தோன்றி பிற இனமாக மாறி அவ்வாறு மாறி வந்த இனங்களாலேயே தமிழினம் ஒடுக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் காலந் தோறும் தொடர்கதையாகிறது. எனவேரூபவ் தமிழர்களின் அடையாளமாகிய தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்பது முற்றிலும் உண்மையே! ஆனால்ரூபவ் இந்த உண்மைக்குச் சொல்லப்படும் தீர்வுதான் நஞ்சு மறைக்கப்பட்ட இனிப்பாக உள்ளது. ஏதோ தமிழின் வரிவடிவத்தைச் சிதைத்துக் குறைத்து விட்டால் உலகோர் அனைவரும் ஓடோடி வந்து தமிழ் மொழியைக் கற்றுத் தங்கள் அடையாளத்தைத் தொலைக்காமல் காப்பாற்றிவிடுவார்கள் என்பது போலவும் தற்போதைய வரிவடிவ அமைப்பால் அவ்வாறு செய்ய இயலாமல் தங்கள் அடையாளத்தைத் தொலைத்து இன அழிப்பிற்கு ஆளாகின்றார்கள் என்றும் பித்துபிடித்தவர்கூடக் கூறுவாரா என்பது ஐயமே!
· தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழைப் பாடமாகவும் பயிற்று மொழியாகவும் உடனடியாக நடைமுறைப்படுத்தாமல்ரூபவ் வழிபாட்டு மொழியாகத் தமிழ் மட்டுமே திகழ நடவடிக்கை எடுக்காமல் தமிழை உண்மையான ஆட்சி மொழியாக நிறைவேற்றாமல் மத்திய ஆட்சிமொழியாகத் தமிழை அரங்கேற்றாமல் இவை போன்று தமிழ்சார் அடிப்படைப் பணிகளை ஆற்றாமல் வரிவடிவக் குறியீடுகள் சுமையாக இருப்பது போலும் அதனால்தான் தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் தமிழ் மறைந்து வருவதாகவும் கதையளப்பது குறித்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் அளித்தாலே தமிழ் பரவும்; வாழும்; நிலைக்கும். எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்பதை ஆரவார முழக்கமாக மட்டும் வைத்துக் கொண்டு எங்கும் அயல்மொழி! எதிலும் அயல் மொழி ! என்பதைத் தொடரவிட்டு வளரவிட்டுத் தமிழைத் தளரவிட்டு இவ்விழி நிலைக்குக் காரணம் வரிவடிவக் குறியீட்டுச் சுமை என்பதுபோல் திரித்துப் பேசுபவர்கள் அறியாமையில் உழலுகிறார்கள் என்பதா அலலது அறிந்தே அழிப்பு முயற்சிகளில் இறங்குகிறார்கள் என்பதா? அறிந்தே தவறு செய்கின்றவர்களைக் காலம் தண்டிக்கட்டும்! அறியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து பிறரையும் குழப்பத்தில் ஆழ்த்துபவர்களின் அறியாமையைப் போக்க நாம் முயலுவோம்! (வரிவடிவ அமைப்பில் மாற்றம் என்பது மொழி இன அழிப்பே: இலக்குவனார் திருவள்ளுவன் )
ஆங்கில வரிவடிவ எண்ணிக்கை 26 எனக் குறைவாக உள்ளதால்தான் ஆங்கிலத்தைக்கற்பதாகக் கூறுவது போன்ற கயமைத்தனம் வேறு கிடையாது. தமிழ் எழுத்துகள் என்பன உயிரெழுத்து 12 மெய்யெழுத்து 18 ஆய்த எழுத்து1 ஆகிய 31 எழுத்துகள்தாம். தமிழில் நெடிலெழுத்துகள் உள்ளமையால் எதையும் சரியாக ஒலிக்க முடிகின்றது; எழுத்தொலியைக் கூட்டினாலே சொல் பிறப்பதால் படிப்பதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. பெரும்பாலான மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஆங்கிலத்தில் ஆர்ரூபவ்ஏரூபவ்எம்ரூபவ்ஏ (சஇயஇஅஇய) என்று ஒலித்தால் ரமா என்று சொன்னால் பெண்ணாகவும் ராமா என்று சொன்னால் ஆணாகவும் மாறும் குழப்பம் தமிழில் இல்லை. என்ரூபவ் ஓ (nஇழ) என்றால் நோ; என்ரூபவ் ஓரூபவ் டபுள்யூ (nஇழஇற) என்றால் நௌ; கேரூபவ் என்ரூபவ்ஓரூபவ்டபுள்யூ (மஇnஇழஇற) என்றாலும் நோ என்பன போன்ற குழப்பங்கள் தமிழில் இல்லை. 26 எழுத்துகளையும் நான்கு வகையாக - ஆக 104 - எழுத வேண்டியுள்ளது போன்று தமிழில் எழுத வேண்டிய தேவையில்லை. அறிவியல் ஒலிப்பு முறையில் அமைந்த தமிழின் சிறப்பை மறைத்துவிட்டுக் குறைபாடுடைய மொழிகளின் ஒலிப்பு முறைகளைப் பாராட்டுவது அறியாமையே.
சீன மொழியும் சப்பானிய மொழியும் தம் எழுத்துஎண்ணிக்கைகளைக் குறைத்துக் கொண்டன; எனவே முன்னேற்றம் கண்டுள்ளன எனப்படுகிறதே; உண்மையோ என்ற ஐயம் சிலருக்கேனும் வரலாம். இம் மொழியினர் தம் எழுத்துகளைக் குறைக்கவில்லை. இவற்றின் எழுத்துகள் பட வடிவில் சொற்களாக அமைகின்றன. எனவேரூபவ் தொடக்க நிலை மாணவர்கள் ஆய்வு நிலைக்கேற்ற சொல் தொகுதியை அறிந்திருக்கத் தேவையில்லை யல்லவா? ஆதலின் பாட வகுப்பிற்கேற்ப அறிந்து கொள்ள வேண்டிய சொல் தொகுதியை வரரையறுத்துள்ளனர். நம் ஆங்கிலப் பாடங்களில் இறுதியில் இவ்வாறு சொற்றொகுதி குறிக்கப்படுவதைப் பார்த்தவர்களுக்கு இது புரியும். கல்வி நிலைக்கேற்பச் சொல் தொகுதியை வரையறுப்பதை எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாகத் தவறாகக் கருதிக் கொண்டு அதன் அடிப்படையில் வாதங்களை எழுப்புவது உரியவர்களின் அறியாமையை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
தட்டச்சு என்று பார்த்தால் சப்பானிய மொழியில் 3 அடுக்கு முறையைப் பின்பற்றுகின்றனர். முதல் அடுக்கில் 1850 எழுத்துகள்ரூபவ் 351 குறியீடுகள் என 2201; இரண்டாம் அடுக்கில் 858 பட எழுத்து; மூன்றாம் அடுக்கில் 2297 பட எழுத்து என மொத்தம் 5356 எழுத்துகளுக்கான விசைகளை வகைப்படுத்தியுள்ளனர். இதனால் சப்பானிய எழுத்துகளைக் குறைத்ததாகப் பொருள் இல்லை. பயன்பாட்டு எண்ணிக்கைக்கேற்ப அடிக்கடி தேவைப்படுவனரூபவ் அவ்வப்பொழுது தேவைப்படுவனரூபவ் எப்போதாவது தேவைப்படுவன என்ற முறையில் பகுத்து வைத்துள்ளனர்.
கஞ்சி எனப்படும் சீன அல்லது சப்பானிய பட எழுத்துகளை எழுதுவதாயின் ஒன்றிலிருந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட வளைவுகளும் மடக்குகளும் உள்ளன. இதனால் அவர்கள் எழுத்துகளைச் சிதைக்கவில்லை. நாம் ஆங்கில எழுத்தில் கணியச்சிட்டால் தமிழ் எழுத்து வரும் முறையையும் கொண்டிருப்பது போல் அவர்கள் மொழியில் அல்லது ஆங்கிலத்தில் எழுத்தொலிக்கான விசையைக் கணியச்சிட்டால் படவெழுத்து அச்சிடப்படும் வகையில் கணியச்சை வடிவமைத்துள்ளனர். அஃதாவது தொப்பியின் அளவிற்கேற்பத் தலையை வெட்டி உயிரிழக்கும் அறியாமையில் மூழ்காமல் தலைக்கேற்றவாறு தொப்பியை வடிவமைத்துக் கொண்டனர். இங்குள்ள சிலரோ இல்லாத குறைகளை இருப்பதாகக் கூறிக் கொண்டு தொப்பிக்கேற்றவாறு தலையைச் சிதைக்க வேண்டும் என்கின்றனர். எனவேரூபவ் வரி வடிவ எண்ணிக்கைக்கும் தமிழ்க் கல்வி குறைந்துபோவதற்கும் தொடர்பு இல்லை. இந்தியாவில் மட்டுமல்லரூபவ்உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் கற்பதற்கான வாய்ப்பை உருவாக்கும் பொறுப்பும் கடமையும் தமிழக அரசிற்கும் இந்தியக் கூட்டரசிற்கும் உள்ளன. கடமையில் இருந்து தவறும் அரசுகளைக் கண்டிக்காமல் வரிவடிவ எண்ணிக்கையினால்தான் தமிழ் பயில்வோர் குறைவதாகக் கூறுவது ஏதோ தமிழ்ப் பற்றின் காரணமாக வரிவடிவச் சிதைவை வலியுறுத்துவதாக எண்ண வேண்டும் என்பதற்காகத்தானே தவிர வேறு அல்ல.
சிலர்ரூபவ் தமிழ் வரிவடிவம் அறிவியல் முறையில் அமையவில்லை என்றும் குறிப்பாக உகரக் குறியீடுகளும் ஊகாரக் குறியீடுகளும் அறிவியல் முறையில் சீர்மையாக அமையவில்லை என்றும் சொல்வது கதிரவனுக்கு இயற்கை ஒளி இல்லை என்று சொல்வதைப் போன்ற அறியாமையினும் மிகுந்த அறியாமையாகும். ஏனெனில்ரூபவ் தமிழ் உயிர்மெய்க் குறியீடுகள் சீரான முறையைப் பின்பற்றித்தான் அமைக்கப்பட்டுள்ளன.
அகர வரிசைக்கு - தலைப்பிலுள்ள புள்ளியை நீக்குதல் (எவ்வகை இடரும் இல்லை)
‘ஆ’ கார வரிசைக்கு - எழுத்தின் பின்
எழுத்தின் பின் காலிடல் (h)
ணகரரூபவ் றகரரூபவ் னகரத்துடன் இணைகையில் கையெழுத்தில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகக் கீழ்ப்பிறை சேர்த்தல்
இவையும் பெரியார் வழியில் பிற எழுத்துகள் போல் காலிட்டுக் குறிக்கப்படுகின்றன.
‘இரூபவ்ரூடவ்ரூபவ்உரூபவ்ஊ’ வரிசைகளுக்கு - எழுத்துடன் இணைந்து
இகரத்திற்கு மேல் விலங்கு (p)
( P )
உகரத்திற்குக் கீற்று
ஊகாரத்திற்குச் சுழிக் கீற்று
இவை இரண்டும் அறிவியல் முறையில் அமைந்தமை பற்றித் தனியே காண்போம்.
‘எரூபவ்ஏரூபவ்ஐ’ வரிசைகளுக்கு - எழுத்தின் முன்
எகரத்திற்கு முன் கொம்பு (n)
ஏகாரத்திற்கு முன்சுழிக்கொம்பு (N)
ஐகாரத்திற்கு முன் இணைக் கொம்பு (i)
இவற்றுள்ரூபவ் (சுழியில் தொடங்கும் எழுத்துகளில்) முன் இணைக் கொம்பை விரைவில் எழுதுகையில் சரியாகப் படிக்கமுடியாமல் போகலாம் என்று ùnஇ ù»இ ùÍஇ ùÚ
என முன்வளைத் தலைக்கீற்று (ù) இடுதல். இவையும் இப்பொழுது ணைரூபவ் லைரூபவ் ளைரூபவ்னை எனவே எழுதப்படுகின்றன.
ஒரூபவ்ஓரூபவ்ஔ வரிசைகளுக்கு - எழுத்தின் முன்னும் பின்னும்
ஒகரத்திற்கு முன்கொம்பும் பின்காலும் (n-h)
ஓகாரத்திற்கு முன்சுழிக் கொம்பும் பின்காலும் (N-h)
ஔகாரத்திற்கு முன்கொம்பும் பின்கொம்புக் காலும் (n-ள)
(ஔகாரத்திலும் ஊகாரத்திலும் வரும் ‘ள’ என்பதைக் கொம்புக் கால் என்று குறிக்க வேண்டும்.)
என இவ்வாறு உயிர்மெய்க் குறியீடுகள் எழுத்தை நடுவாகக் கொண்டு முன்ரூபவ் பின்ரூபவ் முன்பின்ரூபவ் இணைந்து என்ற முறையில் அமைந்துள்ளன எனலாம். அனைத்துக் குறியீடுகளும் முன் அல்லது பின் என்பதுபோல் ஒரே முறையில் அமையாமைக்குக் காரணம் ஒவ்வொரு குறியீடும் எழுதும் பாங்கிற்கேற்ப இயல்பாய் அமைய வேண்டும் என்பதே.
இவற்றுள் உ கரரூபவ் ஊகாரக் குறியீடுகள் ஒத்ததாய் அமையவில்லை என அறியாமையால் பலர் எண்ணுகின்றனர். உகரத்தின் உயிர்மெய்க்குறியீட்டின் பெயர் ‘கீற்று’. இக்கீற்றுரூபவ்
ஙரூபவ்சரூபவ்பரூபவ்யரூபவ்வ ஆகிய எழுத்துகளில் எழுத்துகளோடு பொருந்தி இறங்குக் கீற்றாகப் பயன்பட்டு
லு ரூபவ்சுரூபவ் புரூபவ் யுரூபவ் வு என அமைகின்றது.
பிற இடங்களில் எழுத்தோடு பொருந்தி வருகையில்
ந ரூபவ் ணுரூபவ் துரூபவ் நுரூபவ் லுரூபவ் றுரூபவ் னு என மடக்கேறு கீற்றும் (¶)
குரூபவ் டுரூபவ் முரூபவ் ருரூபவ் ழுரூபவ் ளு எனக் கீழ் விலங்குக் கீற்றும் பயன்படுத்தப்படுகின்றன.
ஊகாரத்தில் மடக்கேறு கீற்று வரும் இடங்களில்
க ரூபவ் ணூரூபவ் தூரூபவ் நூரூபவ் லூரூபவ் றூரூபவ் னூ என அவற்றிற்குப் பொருந்தி வரும் கால் இணைத்து மடக்கேறு கீற்றுக் காலும்
கீழ் விலங்கு அமையும் இடங்களில்
டூரூபவ் மூரூபவ் ரூயஅp;ரூபவ் ழூரூபவ் Ñ என அவற்றோடு இணைந்து வரும் வகையில் சுழியும்
இறங்கு கீற்று வரும் இடங்களில்
ஙூரூபவ் சூரூபவ் பூரூபவ் யூரூபவ் வூ என
அவற்றிற்கு இயைபான (இறங்குக் கீற்றுக் )கீழ்விலங்குச் சுழியும்
இவ்வகையில் ஏதும் ஒன்றைப் பயன்படுத்தினால் எழுத்து மயக்கம் ஏற்படும் என பின்வளைத்தலைக் கீற்று (ˆ)இணைத்து கூ எழுத்தும் எழுதும் வகையில் சீராக அமைத்துள்ளனர். அஃதாவது உயிர்மெய்க்குறியீடு என்பது ஒன்றுதான். ஆனால் எழுத்தை எழுதும் இயல்பிற்கேற்பத் தொடர்ச்சியாக இயல்பாக அமையும் பொருட்டு மேலே குறித்தவாறு அமையப்பெற்றுள்ளது. குறியீட்டை மட்டும் தனியாக எழுதினாலோ வேறுவகையில் எழுதினாலோ எழுத்துகளில் குழப்பம் ஏற்படும் என்பதைப் புரிந்து நம் முன்னோர் இவ்வாறு சீராக அமைத்துள்ளனர். பின்வரும் விளக்கப்படம் இதனை நன்கு விளக்கும்.


எனவேரூபவ் எழுதும் பொழுது ஏற்படும் ஐயநேர்வுகளைத் தவிர்க்கும் பொருட்டு எழுதப்படுவதற்கு வாகாக உயிர் மெய்க் குறியீட்டை அமைத்த அறிவியல் வடிவமைப்பைப் புரிந்து கொள்ளாமல்ரூபவ் இக்குறியீடுகள் ஒத்ததாக இல்லை எனக் கூறி வரிவடிவத்தைக் குலைத்து எழுத்துகளை அழிக்க முன் வருவது மிகப்பெரும் அறியாமை என்பதா? வஞ்சகம் என்பதா?
இவ்வாறுரூபவ் உண்மையில் தமிழ் வரிவடிவ அமைப்பு அறிவியல் முறையில் சீராய் அமைந்த ஒன்றாகும். மேலும்ரூபவ் குறியீடுகளை யாரும் மனப்பாடம் செய்து கொண்டிருப்பதில்லை. பயிற்சியால் பெறும் அறிவு இது. பள்ளிக்குச் சென்ற பின் வரிவடிவம் சீராய் இல்லை எனக் கல்வியை நிறுத்தியவர் யாரும் கிடையாது. அறியாமைரூபவ் கல்லாமைக்கான காரணங்கள் அனைவரும் அறிந்தனவே. அத்துடன் பிற மாநிலங்களில் வாழ்பவர்கள் தமிழை மறப்பதற்குக் காரணம் தமிழ் வரி வடிவ அமைப்பன்று. தமிழ் நாட்டில் தமிழே அறியாமல் பயிலவும்ரூபவ் வணிகம் மேற்கொள்ளவும் வாழவும் இயலும். ஆனால்ரூபவ் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளைத் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அத்துடன் ‘இந்திய’மாயையால் இந்தியையும்ரூபவ் உலகத் தொடர்பு மொழி என்ற நம்பிக்கையால் ஆங்கிலத்தையும் கற்கின்றனர். தமிழ்நாட்டிலே கூடத் தேவைப்படாத தமிழைத்ரூபவ் தாம் வாழும் மாநிலத்தில் கற்பதைச் சுமையாகக் கருதுகிறார்கள். அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் தமிழர்கள் மட்டுமல்லர் தமிழ் அறியாத பிற மொழியினரும் தமிழ் கற்க வகை செய்ய இயலும். எனவேரூபவ் பிற மாநிலத் தமிழர்கள் தமிழ் கற்காததன் காரணம் தமிழ் வரிவடிவ அமைப்பு அன்று. ஆனால் நாம் வாளாவிருந்து விட்டால் கட்டுரையாளர் நாளைக்கு ஆங்கிலேயர் ஆங்கிலயம் பயில்வதற்கும்ரூபவ் சீனர்கள் சீனம் பயில்வதற்கும் காரணம் தமிழ் வரிவடிவ அமைப்பினால் தமிழைப் படிக்க முடியாமல் போனதுதான் என்று குழப்பினாலும் குழப்புவார்.(தமிழ் வரிவடிவம்:சீரமைப்பா? சீரழிவா?: பக்கம் 13: இலக்குவனார் திருவள்ளுவன்)
வரிவடிவம் என்பது மொழியல்ல; எனவே அதனை மாற்றினால் தவறு அல்ல; காலந்தோறும் வரிவடிவங்கள் மாறிக்கொண்டுதான் வந்துள்ளன எனக் கல்வெட்டுகளைச் சான்றுக்கு அழைத்துத் தவறான வாதமும் எடுத்து வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட தவறான எண்ணம் நம் முன்னோரில் சிலருக்கு வந்த காரணத்தால்தான் கிரந்த எழுத்துகள் புகுத்தப்பட்டன; இதனால் அயற் சொற்களும் கொச்சை வடிவங்களும் கலந்தன; தமிழ் நிலத்தின் பல பகுதிகளில் தமிழ் மொழி சிதைந்து சூழலுக்கேற்றவாறு புதுப்புது மொழிகளாகப் பிறந்தன; தமிழ்நிலப் பரப்பு குறைந்தது; தமிழின் தாய்மையை மறந்து புதிய இன வெறிக்கு ஆளாகித் தமிழைப் பகையாகக் கருதினர்; இந்நிலப்பரப்பில் தமிழ் மொழி அழிந்தது;
வற்புறுத்துகிறார்கள். மேலும் கல்வெட்டு எழுத்து என்பது இக்காலச் சுருக்கெழுத்து போன்ற தனி எழுத்து வகை என்பார் பேராசிரியர் சி.இலக்குவனார். சமற்கிருதத்திற்கும் பிற இந்திய மொழிகளுக்கும் நெடுங்கணக்கையும் வரி வடிவத்தையும் அளித்தது தமிழ் வரிவமே என அவர் ஆய்ந்துரைத்துள்ளார். காலந்தோறும் கல்வெட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஓலைச் சுவடியில் இல்லாமையாலும் அவ்வாறு இருந்தால் இன்றைக்குக் கல்வெட்டைப் படிப்பதற்குத் தனிப்பயிற்சி வேண்டப்படுவது போல் காலந்தோறும் ஓலைச் சுவடிகளைப் படிப்பதற்கும் தனிப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும் என்பதும் ஓலைச் சுவடிகளைப் படியெடுக்கும் பொழுது வெவ்வேறு நூற்றாண்டில் வெவ்வேறு வடிவங்களில் ஓலைச் சுவடிகள் எழுதப் பெற்று ஒரே நூலுக்குப் பல்வேறு வரி வடிவங்களிலான ஓலைச் சுவடிகள் காணப்பட்டிருக்கும் நிலைமை இல்லை என்பதும் தமிழ் வரிவடிவங்கள் மாற்றமில்லாமல் வழங்கி வந்துள்ளன என்பதை மெய்ப்பிக்கின்றன.
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் வரிவடிச் சீர்திருத்தத்தை விரும்பினார்; எனவே வரிவடிவ மாற்றம் தேவை எனத் திடீர் பெரியார் அன்பர்கள் சிலர் முளைத்து வரிவடிவச் சிதைவை வலியுறுத்துகின்றனர். இவர்கள் தந்தை பெரியார் இருக்கும் பொழுது அவர் பக்கம் இருந்து இக்கருத்தை ஏற்றவர்களும் அல்லர்; பகுத்தறிவு முதலான தந்தை பெரியாரின் பிற கொள்கைகளை இன்றைக்கும் ஏற்பவர்களும் அல்லர். அப்பாவி மக்களைத் தம் வலைக்குள் இழுப்பதற்காகத் தமிழினப் பகைவர்கள் தந்தை பெரியார் போர்வையில் நுழைய பார்க்கின்றனர் என்பதே உண்மை. மேலும் தந்தை பெரியார் மொழியறிஞரல்லர். பயன்பாட்டுத் தேவை கருதியும் சிக்கனம் கருதியும் கீழ்ப்பிறை வஇ Ùஇ à ùnஇ ù»இ ùÍஇ ùÚ ஆகிய ஆகார ஐகாரங்களுக்குப் பிற எழுத்துகள் போன்று துணைக்காலும் ஐகாரக் குறியும் போட்டால் போதுமே எனக் கருதி அதனை வலியுறுத்தித் தானும் பின்பற்றி வந்தார். எழுதும் பொழுது குழப்பம் இல்லாமல் இருப்பதற்காகவே இக் குறியீடுகள் இவ்வாறு எழுதப்பட்டு வந்தன. சொல்லப் போனால் இக்குறியீட்டுப் பழக்கம் இடைக்காலத்தில் வந்திருக்கலாம். ஏனெனில் ஆறாயிரத்து என றகர ஆகாரத்தில் காலிட்டு எழுதிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதைக் காணும் பொழுது தொடக்கத்தில் காலிட்டு இவ்வெழுத்துகள் எழுதப்பட்டுப் பின்னர் எழுதுவதற்கு இயைபாக அமையும் வகையில் பிறையிடப்பட்டிருக்க வேண்டும். எனவேரூபவ் இச்சிறு மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு பெரியாரின் போர்வையில் தமிழ்ச் சிதைவை வலியுறுத்துவது முறையற்ற செயலாகும். ஆனால்ரூபவ் இன நலப்பற்றுள்ள சில பெரியார் அன்பர்களே மொழிநலம் குறித்த கருத்தோட்டம் இன்மையால் பெரியார்வழியைப் பரப்புவதாக எண்ணி அறியாமையில் எழுத்துச் சிதைவாளர்களின் பக்கம் நிற்கின்றனர். அதேநேரம்ரூபவ் பெரியார் வழி அறிஞரான முனைவர் பொற்கோ அவர்கள் பெரியார் காலத்தில் அவரது கருத்தை வரவேற்றவர்; ஆனால்ரூபவ் இன்றைய கணிஉலகச் சூழலில் உலக மொழிகளில் குறைந்த எழுத்துகளைக் கொண்ட தமிழ் மொழியில் சீர்திருத்தம் என்ற பெயரிலான எழுத்துச் சிதைவு தேவையில்லை என்றும் தமிழ் மொழியின் வரிவடிவங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். (புதிய தலைமுறை (வார இதழ்) : நாள் மே 13ரூபவ் 2010) எனவேரூபவ் பெரியார் அவர்கள் இன்றிருந்தால் எழுத்துச் சிதைவாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து சிதைவு முயற்சிகளைத் தடை செய்திருப்பார் என்பதே உண்மை.
அன்றைக்குத் தமிழ்வரிவடிவச் சிதைவிற்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் முற்றுப்புள்ளி வைக்கச் செய்தது போல் இன்றும் கல்லறை எழுப்ப அறிஞர்கள் பலர் முயன்று வருகின்றனர். முதுமுனைவர் புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்களும் மலேசிய அறிஞர் சீனிநைனா மொகமது அவர்களும் கணிஞர் மு.மணிவண்ணன் அவர்களும் பேராசிரியர் முனைவர் பா.இறையரசன் அவர்களும் பேராசிரியர் முனைவர் இ.மறைமலை அவர்களும் பொறி.இராமகிருட்டிணன்ரூபவ் அறிஞர் நாக இளங்கோவன்ரூபவ் பேராசிரியர் செல்வகுமார்ரூபவ் அறிஞர் சுப. நற்குணன்ரூபவ் அறிஞர் பெரியண்ணன் சந்திரசேகரன்ரூபவ் அறிஞர் மு.இளங்கோவன் முதலான அறிஞர்கள் பலரும் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். தமிழ் வடிவச்சிதைவு பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் அறியாமையால் முதன்மை கொடுப்பதாலேயே தமிழுலகம் அதனை வரவேற்பதாகக் கருதுவது தவறாகும்.
தமிழ்க் கலைச் சொல் பெருக்கத்திற்கு வரிவடிவ எண்ணிக்கை தடையாக உள்ளதாக அலறுவதும் தவறே. ஒரே நாடுரூபவ் ஒரே மொழி என்ற தவறான பல்லின அழிப்பு முயற்சியில் இந்திய அரசு இந்திக் கலைச் சொற்களைப் பெருக்குவதாகக் கூறி சமற்கிருதமயமாக்கிக் கொண்டு வருகிறது; இதன் அடிப்படையில்ரூபவ் எல்லா மொழிகளிலும் சமற்கிருதக் கலைச் சொற்களைப் புகுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனைக் கண்டித்து அறிஞர் உலகத்தைத் திரட்டி நம் அன்னைத் தமிழ் மொழியையும் இந்தியக் கூட்டரசிலுள்ள பிற தேசிய மொழிகளையும் காப்பாற்ற வேண்டிய அறிஞர் தவறாக வரிவடிவ எண்ணிக்கையால்தான் இவ் அவலம் நடைபெறுவதாகக் கூறுவது சிறிதும் அறிவிற்கு ஏற்றதாக இல்லை அல்லவா?
உண்மையில் தமிழ் எழுத்து வரிவடிவம் என்பது தொடர்ந்து நடைமுறையில் உள்ள ஒன்றே என்பதற்கான தக்க சான்றாதாரங்களை நன்னூலும் இலக்கண விளக்கமும் அறுவகை இலக்கணமும் தருகின்றன.
தொல்காப்பியம் தோன்றியதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வரிவடிவம் அறிவியல் சீர்மையுடன் அமைந்திருந்தது. எனவேதான் இல்லாத மாற்றம் பற்றிய விளக்கத்தைத் தொல்காப்பியர் அளிக்கவில்லை. அதற்குப் பின்னர்ரூபவ்
தொல்லை வடிவின எல்லா எழுத்தும் என நன்னூலும் (எழுத்ததிகாரம்: 5.உருவம்: நூற்பா 98) இலக்கண விளக்கமும் (எழுத்தியல்: நூற்பா 23) தெரிவிப்பதில் இருந்தே பன்னூறாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் வரிவடிவம் தன் சிறப்பான அமைப்பில் இருந்து மாறாமல் உள்ளது என்பது தெளிவாகிறது. வீரமாமுனிவர் காலத்தில்ரூபவ் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் இயற்றப்பட்ட அறுவகை இலக்கணத்தில் எகர ஒகர வடிவங்களில் புள்ளி நீக்கி எழுதப்படுவது குறிக்கப்பெற்றுள்ளது. இகரத்தைச் சுழித்து உள்ளபடியே பிற வரிவடிவங்கள் காலந்தோறும் மாறிவந்திருந்தன எனில் இலக்கண ஆசிரியர்கள் அவை குறித்துக் கூறாதிருந்திருக்க மாட்டார்கள். அவ்வாறில்லாமல் எழுத்து வடிவம் மாறாதிருப்பதாக அறிவித்தும் உள்ளனர். எனவேரூபவ் மாறாமல் நிலைத்து நிற்கும்வகையில் அறிவியல் நோக்கில் சீர்மையாக அமைக்கப்பட்ட தமிழ் வரி வடிவத்தை இனியும் சிதைக்கும் முயற்சியில் யாரும்
தெய்வப் புலவர் திருவள்ளுவரால் கண்களாகக் கூறப்பட்ட எழுத்துகளை நாம் சிதைப்பது நம்மைநாமே அழிப்பதற்கு ஒப்பாகும் என உணர வேண்டும். உடலாகிய எழுத்து அழியுமேல் உயிராகிய மொழி உறைவதற்கு வழியின்றி அழிந்துபோகும் எனச் செந்தமிழ் மாமணி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் விடுத்த எச்சரிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டு தமிழினம் வாழத் தமிழ் மொழியும் தமிழ் மொழி வாழத் தமிழ் எழுத்து வடிவங்களும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதை உள்ளத்தில் நிறுத்துவோமாக!


வாழிய தமிழ் மொழி! வாழிய தமிழினம்! வாழிய வையகம்!


நன்றி: சமூக நீதித் தமிழ்த் தேசம் மலர் 2 : இதழ் 11: 2010 வைகாசி (மே)

Followers

Blog Archive