2

2.] கலைச்சொல் பேரகராதி
2.1. தொடக்கத்தில் (~university என்பதுபோல்) இடைவெளி இருப்பின் முழுத் தேடுதலில் ஒன்றும் காட்டாது. எனவே, சொற்பொருள் இல்லை என்ற எண்ணம் ஏற்படும்(பட உரு 09).
thedupori_09
பட உரு 09

2.2. அவ்வாறு இடைவெளி இருப்பின் பகுதித் தேடுதலில் பொருள் காட்டும். (பட உரு 10). (கூட்டுச்சொல்லில் இடைவெளி அடுத்துத்தானே தொடர் சொல்லாய் அமையும்.)
thedupori_10
பட உரு 10
2.3. முதல் எழுத்து (University என்பதுபோல்) பெரிய எழுத்தாக இருப்பின் எதையும் காட்டாது. நாம் தேடும் சொல் இல்லை எனத் தவறாகக் கருத நேரும்(பட உரு 11).
thedupori_11
பட உரு 11
2.4. இடைக்கோடு (x-ray என்பதுபோல்) இருப்பினும் பொருள் காட்டும் (பட உரு 12).
thedupori_12 
பட உரு 12
2.5. சொற்கள் நடுவே (book shelf என்பதுபோல்) இடைவெளியுடன் தேடினால், எதையும் காட்டாது. நாம் தேடும் சொல் இல்லை எனத் தவறாகக் கருத நேரும்(பட உரு 13).
thedupori_13
பட உரு 13
ஆனால், சென்னைப் பல்கலைக்கழக அகராதி இடைவெளி இருக்கக்கூடாது என ஆங்கிலத்தில் அறிவுறுத்தும். (இவற்றை எல்லாம் தமிழிலும் தரலாமே!)
2.6. ஆனால், இடைவெளி இன்றித் தேடினால் உரிய பொருள் காட்டும்(பட உரு 14).
thedupori_14 
பட உரு 14
இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதியின் தேடுபொறிக்கும் கலைச்சொல் பேரகராதியின் தேடுபொறிக்கும் இடையே மாறுபட்ட தன்மை இலங்குகிறது. எனவே, பயன்பாட்டாளருக்கு உரிய பயன் கிடைக்காமல் போகிறது.
இப்படித்தான் தேடுபொறிகளை அமைக்க இயலுமா என்றால் இல்லை என்பதே உண்மையாகும்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல 91 ஆடி 24, 2046 / ஆக.09, 2015