Thursday, August 6, 2015

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்க்கணிணி-இணையப்பயன்பாடுகள் :
பன்னாட்டுக் கருத்தரங்கம்
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி. திருச்சிராப்பள்ளி
பங்குனி 13 &14, 2045 / மார்ச்சு 27& 28, 2014
thedupori-thalaippu

 தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக இயங்கிய, இப்போது தமிழ் இணையக்கல்விக்கழகமாகச் செயல்படும் நிறுவனம் குறிப்பிடத் தகுந்த இலக்கண இலக்கியங்களை அறியவும் அறிமுக நிலையில் தமிழ் கற்கவும் பட்டயக்கல்வி, பட்டய மேற் கல்வி, இளங்கலைக் கல்வி, கணிணிக்கல்வி ஆகியன கற்கவும் சொற்பொருள், கலைச்சொற்கள் அறியவும் சிறப்பாக உதவி வருகிறது. தகவல் மையம், சுற்றுலா வழிகாட்டி, கணிப்பொறி தொடர்பானவை எனப் பிற வகைகளிலும் தமிழ் ஆர்வலர்களுக்கு உதவி வருகிறது. எனினும், தஇகக ஆற்ற வேண்டிய பணிகள் மிகுதியாக உள்ளன. அவற்றை எதிர்பார்க்கும் பொழுது இணையக் கல்விக்கழகத்தின் பணிகள் வளர்நிலையில் இல்லை என்பதே உண்மை. எனினும் இப்பொழுது அவை குறித்து நாம் ஆராயவில்லை. அவற்றில் ஒன்றான தேடுபொறியின் சீர்மை நிலை பற்றி மட்டும் பார்ப்போம்.
  நூல்களைப் படிக்கும் பொழுது நமக்குப் பெரிதும் உதவியாக அமைவது தேடுபொறியாகும். முழு நூலையும் படிக்காமல் நாம் தேடும் சொற்கள் பற்றிய விவரங்களை எளிதில் அறிய உதவுவது தேடு பொறியேயாகும். தேடுபொறி இணையக் கல்விக் கழகத்தின் நூல்களிலும் உள்ளன. ஆனால், பெரும்பான்மையும் பக்க எண் தேடலே அனைத்து நூல்களிலும் உள்ளன. மேற்கோள் வழி அறியப்படும் செய்தியின் பக்க எண் மூலம் உரிய முழுத்தகவலையும் அறிய பக்க எண் தேடு பொறி உதவும். ஆனால், சொல் தேடுபொறியே நூலாராய்ச்சிக்கு உதவும். இலக்கியங்களின் உரைப்பகுதிகளில் சொல் தேடு பொறிகள் உள்ளன. ஆனால், மூலப்பாடல் பகுதிகளில் சொற்தேடுபொறி அமையாதது இடர்ப்பாடாகவே உள்ளது. இத்தகைய சீர்மையற்ற நிலைக்கு மாறாக அட்டவணை, மூலப்பக்கங்கள், உரைப்பகுதிகள் என அனைத்துப் பக்கங்களிலும் சொற்தேடுபொறியும், பாடல் எண் அல்லது நூற்பா எண் தேடுபொறியும், பக்க எண் தேடுபொறியும் அமைய வேண்டும்.
இப்போதைய தேடுபொறி அமைப்பு பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.
1.] சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் -தமிழ் அகராதி.
இவ்வகராதியில் உள்ள பயன்முறை வருமாறு
1.1. தேடுபொறி இடத்தில் உரிய சொல்லைக் கணியச்சிடுகையில் (~university என்பதுபோல்) இடைவெளி இருப்பின் அவ்வாறு இடைவெளி இருக்கக் கூடாது என (First character should not be sapce in ‘ Word என ஆங்கிலத்தில்) நமக்கு அறிவிப்பு வரும். (பட உரு 01.)
thedupori01
1.2. ஆங்கிலத்தில் கணியச்சிடுகையில் (University என்பதுபோல்) முதல் எழுத்து பெரிய எழுத்தாக இருப்பின் சொல் அகராதியில் இல்லை (The word not found in Dictionary)   எனக் காட்டும். (பட உரு 02.)
thedupori02
1.3. முதலெழுத்து, சிறிய எழுத்தாக இருப்பின் பொருள் காட்டும். (பட உரு 03.)
thedupori03
1.4. சொல்லின் நடுவே (pre-elect, x-ray, X-ray) இடைக் கோடு இருப்பின் உரிய சொல் இருப்பினும் சிறப்பு எழுத்துக் கூறுகளுக்கு இடமில்லை (Special Characters not allowed in ‘ Word)   எனக் காட்டும். (பட உரு 04.)
thedupori04
1.5. இடைக்கோடு இடாமல் இடை வெளியுடன் தேடினால், இடைவெளி கூடாது எனத் தெரிவிக்கும். (பட உரு 05.)
thedupori05
1.6. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள்அமைந்தவற்றை (preelect என்பதுபோல்) இடைவெளியின்றிக் குறிப்பிட்டால் உரிய சொல் அகராதியில் இல்லை (The word not found in Dictionary) எனக் காட்டும். (பட உரு 06.)
thedupori06
1.7. ஆனால், முன் ஒட்டுச்சொல்லை (pre என)ப் பகுதித் தேடலில் பார்த்தால் உரிய சொல்லிற்கான பொருளைக் காண முடிகிறது. (பட உரு 07.)
thedupori07
1.8.பின் ஒட்டுச்சொல்லை(elect என)ப் பகுதித் தேடலில் பார்த்தாலும் உரிய சொல்லிற்கான பொருளைக் காண முடிகிறது. (பட உரு 08.)
thedupori08
இத்தகைய சீரற்ற முறைகளால் உரிய சொல் அகராதியில் இருப்பினும் அதை அறியும் வாய்ப்பு இல்லாமல் போகின்றது.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்


No comments:

Post a Comment

Followers

Blog Archive