(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 8 தொடர்ச்சி)

சூரியன் – சூர்ய

செக்கு  – செக்கு 

செம்பருத்தி  – கெம்பத்தி

செருப்பு  – செர்ப்பு

செவி – கிவி

செவ்வரி – கெம்பரி

செவ்வவரை –  கொம்பவரே

செவ்வாம்பல்  – கெம்பாவல்

செவ்வாழை – கெம்புபாளெ 

சேரி  – கேரி

சேலை  – சேல

சோளம் –  (ஞ்)சோள

சோளிகை – (ஞ்)சோளிகை

தகரம் – தகர

தகர் –  தகர்

தக்காளி  தக்காளி

தக்கோலம் –  தக்கோல

தங்கை  – தங்கி

தடி – தடி

தடுக்கை  – தடுக்கெ

தட்டம்  – தட்டெ

தண்டை – தண்டெ

தந்தை  – தந்தெ

தப்பட்டை  – தப்பட்டெ

தப்பணம் – தப்பள

9

தப்பை – தப்பெ

தம்பி – தம்ம

தலை – தலெ

தலைக்குட்டை  – தலைக்குட்டெ

தவடை  – தவடெ

தவணை –   கடு

தவண்டை –  தவட்டெ

தவலை – தபலே

தவுடு  – தவுடு

தளிகை – தளிகெ

தாடி  – தாடி

தாடை – தாட

தாதை – தாத்தா

தாய் –  தாயி

தாலி  – தாலி

தாழை  – தாழ

தாழ் –  தாழ்

தாழ்ப்பாள்  – தாப்பாலு

திங்கள்(மாதம்)  – திங்களு

திட்டி  – திட்டி

திட்டு – திட்டு

தித்தி   – தித்தி

திருகாணி –  திருகாணி

தின்றி   – திண்டி

தீ –  தீ

தீனி – தீனி

துக்கம் –  துக்க

துடுப்பு  – துடுப்பு

தும்பை –  தும்பெ

துளசி –  துளசி 

துளை  – தொளெ

துறடு –  தொறடு

தெப்பம் – தெப்பம்

தெற்கு  – தெங்க

தென்னை, தெங்கு  – தெங்கு

தொடை – தொட

தொட்டி –  தொட்டி

தொட்டில் –  தொட்டிலு

தொண்டை  – தொண்டெ

தேக்கு –  தேகு

தேர் –   தேர் / தேரு

தேவர் – தேவரு

தோகை  – சோகெ

தோடடக்காரன் – தோட்டக்காரனு

தோட்டம் – தோட்ட

தோப்பு – தோப்பு

தோல்  – தொகலு

நகரம் – நகர

நடுவே  – நடுவெ

நமது – நம்ம

நரவள்ளி –  நரவள்ளி

நரி  – நரி

நல்லள் –  நல்லள்

நாங்கள் – நாவு

நாம் – நாவு

நாய் – நாயி

நாவாய்  – நாவெ

நாளை –  நாளெ

நான் –  நானு

நிலம்  – நெல

நீ  – நீனு

நீங்கள் – நீவு

நீர்  – நீரு 

நுதல் – நொசல்

நுதி – நுதி

நெய்த்தோர்(இரத்தம்) – நெத்தர்

நெல்லி – நெல்லி

நொச்சி –  நொச்சி

நேற்று – நின்னெ

பகல் –  ஃககலு

பக்கம்(விலா) – பக்கெ

பசு – ஃகசு

படகு  – ஃகடக

பட்டணம்   – பட்டண

பருந்து – பந்து

பல் –  ஃகல்லு

பல்லி — ஃகல்லி

பழம்  – பலெவு

பள்ளம் –   ஃகள்ள

பள்ளி –   ஃகள்ளி

பனை – பனி

பால்  – ஃகாலு

பித்தளை  – கித்தாள

புங்கை   – ஃகொங்கே

புங்கை  – ஃகொங்கே

புத்தகம்  – புஃச்தக

புலம்  – ஃகொல

புலி  – ஃகுலி

புல் –  ஃகுல்லு

புளி   – ஃகுளி

புற்று   – புத்து

புனல் – பொனல்

பூ  – ஃகூவு

பூமி – பூமி

பூவரசு  – ஃகூவர்சி

பெட்டகம்   – பெட்டகெ

பெண்மகள் –  மஃகிலெ

பொழுது   – ஃகொத்து

பொற்றை(மலை)  – பெட்டெ

பேட்டை –  பேட்டெ

மகள் – மகளு

 மகன் – மக

மக்கள் – மக்களு

மணி –  மணி

மரம் – மரவு

மருது – மருது

மருந்து  – மர்து

மழை  – மலெ

மறி(குட்டி) –  மறி

மனம்  – மனசு

மனை  – மனெ

மா – மாவு

மாகாளி  – மாகாளி

மாமா – மாவ

மீன்-  மீனு

முகம் –  முக

முட்டை – மொட்டெ

முதுமகன்  – முதுக

முயல் -மொல

முலை   -மொலெ

முள் –  முள்ளு

மூக்கு – மூகு

மூடன் –  மூட

மூலை – மூலெ

மேசை – மேசு

மேலே – மேலெ        

யானை / ஆனை –  ஆனெ

வடக்கு –  படக

வட்டில் – பட்லு

வல  – பல

வலி (நோவு) – நோவு

வலை – பலெ

வள்ளம்   – பள்ள

வாகை  – பாகெ

வாசல்  – பாசிலு

வாதுமை  பாதாமி

வாதுமை – பாதாமி

வாய்  – பாயி

வாரம் – வார

வால் – பாலவு

வாவல்  –  பாவல்

வானரம் –  வானர

விடுவு(ஓய்வு)  – பிடுவு

விரல் – பெரல்

விருந்து – பிர்து

விளை   – பிளி

வெ – வெரிந் (முதுகு) –  பெந்

வெண்டை –  பெண்டெ

வெண்ணெய்   – பெண்ணெ

வெண்ணெய் –  வெண்ணெ

வெதிர் –  பிதிர்

வெள்ளி  – பெள்ளி

வேகமாக – வேகவகி

வேண்டாம்/ வேண்டா –  பேடா

வேம்பு –  பேவு 

வேர் – பேரு

வேலி – பேலி

வேல் – பேல்

வேளை –  வேளி

“எந்த மொழியும் முதல் முதலாக எழுதப்படும் போது மக்கள் எவ்வாறு பேசினார்களோ அவ்வாறே எழுதப்படும் என்பது ஒரு பொதுக் கருத்து. எனவே, கன்னட மொழி, முதல் முதலில் எழுதப்பட்டபோது, கொச்சைத் தமிழ்ச் சொல்லாகிய பேச்சு வழக்குத் தமிழ்ச் சொல்லைத் தனது எழுத்து வழக்குச் சொல்லாகக் கொண்டு எழுதப்பட்டது என்பது புலனாகும்.” என்கிறார் பேரா.சுந்தர சண்முகனார்(தமிழ்க்காவிரி). மேற்குறித்த சொற்பட்டியல் இதனை நன்கு தெளிவாக்குகிறது. எனவே, தமிழே கன்னடமாகத் திரிந்தது என்பது வெள்ளிடை மலை.

கன்னடமும் களிதெலுங்கும்

கவின்மலையாளமும் துளுவும்

உன் உதரத்து உதித்தெழுந்த்தே

ஒன்று பல ஆயிடினும்

ஆரியம்போல் உலக வழக்கொழிந்து

சிதையா உன் சீரிளமை திறம் வியந்து

செயல் மறந்து வாழ்த்துமே !

 – பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம்(பிள்ளை)