பிழைகளின்றிப் பேசுவதும் எழுதுவதுமே கடமை என எண்ணுவோர்க்கும் மாணாக்கர்க்கும் தவறில்லாமல் எழுதுவது குறித்த காணொளி காண்க :
பிழைகளைத் தவிர்ப்போம்
இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 26, 2011
221 அருளின்றி அல்லவை செய்தால் பொருள் நீங்கும்.
222 இவ்வுலகிற்குப் பொருளும் புகழ் உலகிற்கு அருளும் தேவை.
223 அருளற்றவர்க்கு ஆக்கம் எப்பொழுதும் இல்லை.
224 மெலியாரைத் துன்புறுத்தும் பொழுது வலியார் முன் தன்னை நினைத்துப் பார்க்கவும்.
225 பேணாவிட்டால் பொருள் வளம் பெருகாது.
226 ஊன் உண்போர்க்கு அருளாட்சி இல்லை.
227 உடல்சுவை கண்டால் நல்லாக்கம் வராது.
228 புலால் என்பது பிற உடலின் புண்ணே! அதை உண்பானேன்?
229 ஆயிரம் வேள்வியினும் ஒன்றன் உயிர் பிரிக்காமையே நன்று.
230 ஊனை மறுத்தவனை உயிர்கள் தொழும்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 211 – 220
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 25, 2011
211 புகழ்ப்பணி புரிந்தவரையே போற்றும் உலகு.
212 புகழோ இகழோ காரணம் நாமே.
213 புகழ் வரும் வகையில் செயல்புரிக.
214 புகழ் பெறா வாழ்க்கை வசையுடைய வாழ்க்கை.
215 புகழில்லாமல் வாழ்ந்தால் நிலப்பயனும் குன்றும்.
216 புகழ் நீங்கி வாழ்பவரும் வாழாதவரே.
217 பொருட்செல்வம் கீழோரிடமும் இருக்கும்; அருட்செல்வமே செல்வம்.
218 அருளாட்சியே அனைத்து வழிக்கும் துணை.
219 அருளுடையார் துன்பம் அடையார்.
220 அருள் ஆள்வோர் அல்லல் அடையார்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 201 – 210
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 23, 2011
201 கேட்போர் மகிழும் வகையில் கொடுக்க வேண்டும்.
202 பசி தாங்கும் துறவியைவிடப் பசியைப் போக்குவோரே வலிமையானவர்.
203 இல்லாதவர் பசி தீர்த்தலே பொருளைச் சேமிக்கும் இடம்.
204 பகுத்துண்பவரைப் பசிப்பிணி அண்டாது.
205 கொடையால் வரும் இன்பத்தை உணராதவரே பொருளைச் சேர்த்து இழப்பர்.
206 இரத்தலைவிட இழிவானது தனித்து உண்பதே.
207 கொடுக்க முடியாத பொழுது இறப்பதும் இனிமையே.
208 கொடுத்துப் புகழ் பெறுவதைவிட உயிர்க்கு ஆக்கம் வேறு இ¢ல்¢லை.
209 கொடையாளர் புகழையே அனைவரும் பேசுவர்.
210 உலகில் அழியாதது புகழே.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் - 191-200
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 22, 2011
191 ஒப்புரவைவிட உயர்வு எவ்வுலகிலும் இல்லை.
192 பேரறிவாளர் செல்வம் ஊருணி போல் உதவும்.
193 நல்லோர் செல்வம் பயன்மரம் போல் பயன்தரும்.
194 பெருந்தகையாளர் செல்வம் மருந்துமரம் போன்று உதவும்.
195 ஒப்புரவாளர் வாய்ப்பு இல்லாத பொழுதும் உதவத் தயங்கார்.
196 நல்லவர் வறுமை என்பது நல்லன செய்ய இயலாமையே.
197 ஒப்புரவினால் கேடு வந்தால், அது தன்னை விற்றாவது பெற்றுக் கொள்ளும் சிறப்பு உடையது.
198 வறியவர்க்குக் கொடுப்பதே கொடை.
199 நல்லவழியில் வந்தாலும் பெறாதே; மேலுலகம் இல்லை என்றாலும் கொடுக்கத் தவறாதே.
200 இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது உயர்ந்தோர் பண்பு.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 20, 2011
181 தீயன தீயினும் தீது.
182 தீயன செய்தார்க்கும் தீயன செய்யாமையே தலைசிறந்த அறிவு.
183 பிறர்க்குச் செய்யும் கேடு நம்மைச் சூழும்.
184 துன்பம் வேண்டாவிடில் பிறருக்குத் தீயன செய்யாதே.
185 தீச்செயலால் வரும் பகை அழிவைத் தரும்.
186 தீயவை செய்தாரை நிழல்போல் கெடுதி தொடரும்.
187 உன்னை விரும்பினால் தீயன விரும்பாதே.
188 தீயன செய்யாதவன் கேடு இல்லாதவன்.
189 மழைபோல் கைம்மாறு கருதாதே.
190 முயற்சியால் வரும் பொருள் பிறர் உயர்ச்சிக்கே.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 19, 2011
171 பிறர் குற்றம் போல் தம் குற்றம் காண்பதே சிறப்பு.
172 பயனில சொல்லுவான் எல்லாராலும் இகழப்படுவான்.
173 தீய செய்தலினும் தீது பயனில சொல்லல்.
174 பயனற்ற சொன்னால் சீர்மையும் சிறப்பும் நீங்கும்.
175 பயனில பேசுவான் பதடியே ஆவான்.
176 நயமற்ற சொல்லைவிடப் பயனற்றவற்றைச் சொல்லாதிருத்தல் நன்று.
177 அறிவுடையார் சொல்லார், பயனில்லாச் சொல்லை.
178 தூய மனத்தர் மறந்தும் பயனற்ற சொல்லார்.
179 பயனுடையன சொல்லுகங் பயனற்றன சொல்லற்க.
180 தீவினை செய்ய தீயோர் அஞ்சார்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 161-170